Wednesday, July 22, 2009

வாக்கினிலே இனிமை வேண்டும் !


Photo: www.zynnyadesign.com

கடும் அலை மோதலிலும் -- அசையாது
கரும் பாறை.

மண் உரசி நடக்கையிலும் -- நசுங்காது
மயில் தோகை.

சுடும் கோடை வெய்யிலிலும் -- கருகாது
நெடு ம‌ர‌ம்.

விழும் ப‌னி வேளையிலும் -- சுருங்காது
மலர் கூட்டம்.

சீறும் காற்றின் வேகத்திலும் -- க‌லையாது
குருவிக் கூடு.

சிந்தும் மழை நீரிலும் -- சிதையாது
சிலந்தி வலை.

ஆனால் ...

சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !

அத‌னால் ...

வாக்கினிலே இனிமை கொள்வோம்
வ‌ள‌மாய் வாழ்திடுவோம் !

14 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !]]

உண்மை தான்.

வாக்கினிலே இனிமை வேண்டும் - அழகா எடுத்து சொல்லியிருக்கீங்க.

ராமலக்ஷ்மிsaid...

இனிமை வேண்டும் வாக்கினிலே என்பதனை எடுத்துரைத்த பாங்கு
வெகு இனிமை சதங்கா! அத்தனை வரிகளும் அற்புதம்.

தமிழ்said...

அற்புதம்

சதங்கா (Sathanga)said...

//நட்புடன் ஜமால் said...
சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !]]

உண்மை தான்.

வாக்கினிலே இனிமை வேண்டும் - அழகா எடுத்து சொல்லியிருக்கீங்க.
//

மிக்க நன்றி ஜமால்.

வல்லிசிம்ஹன்said...

நல் வாக்கினால் துளிர்விடும் நட்புகள்.

பொல்லா வாக்கு வேண்டாம்.

அருமையான சிந்தனை சதங்கா.
அதி அருமையாகக் கொடுத்து இருக்கிறீர்கள் நன்றி.

நீங்கள் எப்போழுதும் நல்வாக்கே கேட்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.

உயிரோடைsaid...

//சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !//

மிக‌ச்ச‌ரி.

மேல் சொன்ன‌ கோர்ப்புக‌ளும் அருமை.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மிsaid...

//இனிமை வேண்டும் வாக்கினிலே என்பதனை எடுத்துரைத்த பாங்கு
வெகு இனிமை சதங்கா! அத்தனை வரிகளும் அற்புதம்.//

இனிமையாய் பின்னூட்டிய உங்களுக்கும் நன்றிகள் பல.

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர் said...

//அற்புதம்//

மிக்க நன்றிங்க.

நேசமித்ரன்said...

வள்ளலார் நினைவுக்கு வருகிறார்
நல்லக் கவிதை சதங்கா

நற்சொல் நல்லோர் சூழ நகரட்டும் நதியிடை ஒளியாம் வாழ்வு
என்று வாழ்த்துகிறேன்

சதங்கா (Sathanga)said...

வல்லிசிம்ஹன்said...

//நீங்கள் எப்போழுதும் நல்வாக்கே கேட்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.//

மிக்க நன்றி வல்லிம்மா. எல்லோரும் நல்வாக்கே கேட்போம் என்றும்.

சதங்கா (Sathanga)said...

உயிரோடை said...

////சொல் ஒரு சொல்லில்
சிதைந்திடும் ந‌ம் ம‌ன‌ம் !//

மிக‌ச்ச‌ரி.

மேல் சொன்ன‌ கோர்ப்புக‌ளும் அருமை.//

மிக்க நன்றி லாவண்யா.

cheena (சீனா)said...

நாவினால் சுட்ட வடு என்பான் குறளாசான்

அருமையான சிந்தனை

நல்வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

நேசமித்ரன்said...

//வள்ளலார் நினைவுக்கு வருகிறார்
நல்லக் கவிதை சதங்கா

நற்சொல் நல்லோர் சூழ நகரட்டும் நதியிடை ஒளியாம் வாழ்வு
என்று வாழ்த்துகிறேன்//

சொல்லாடல் கவிஞரின் வள்ளலார் நினைவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

//நாவினால் சுட்ட வடு என்பான் குறளாசான்

அருமையான சிந்தனை

நல்வாழ்த்துகள்//

வள்ளுவரை நினைவு கூர்ந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஐயா.

Post a Comment

Please share your thoughts, if you like this post !