Friday, July 3, 2009

ஈர்பதினாறு கேள்விகளும் ஹி.ஹி. பதில்களும்

கேள்வி கேக்கறது ஈ.ஸி. பதில் சொல்றது தான் கஷ்டம் இல்லையா ? இதுவரை பதில் சொன்னவங்க எல்லோருக்கும் அது தெரிந்திருக்கும். இந்த ஆட்டதில நம்மையும் சேர்த்துக்கிட்ட கவிநயா அவர்களுக்கு நன்றி! சரி, ரொம்ப பில்ட்டப் கொடுத்து உங்கள சீண்ட விரும்பவில்லை :)) கேள்விகளுக்குள் புகுந்து செல்வோம் ...

*****

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எந்த‌ப் பெய‌ர் ? சொந்த‌ப் பெய‌ரா ? (வ‌லைக்கு) வ‌ந்த‌ பெய‌ரா ? (எப்ப‌டீ !!! எதிர் கேள்வி கேக்க‌லேன்னா ந‌ம‌க்கெல்லாம் தூக்கம் வ‌ராது, ஆங்ங்ங்ங்ங் :))

இர‌ண்டு பெய‌ர்க‌ளுமே பிடிக்கும். முன்னது, கோபித்து மலை ஏறிய‌ கும‌ர‌னின் மாற்று பெய‌ர். தாத்தா(க்கள்) பாட்டி(க்கள்) அப்பா அம்மா எல்லாரும் சேர்ந்து வைத்த‌ பெய‌ர். பின்ன‌து, ஏக‌ப்ப‌ட்ட‌ நாள் ரூம் போட்டு உட்கார்ந்தெல்லாம் யோசித்த‌தாக‌ நினைவில்லை. அழ‌கிய‌ ப‌ர‌த‌க் க‌லை முத‌ல், தெருவில் ஆடும் வித்தைக்கார‌ர் வரை, கால்க‌ளில் க‌ட்டியிருக்கும் வ‌ரை ஒன்றும் தெரியாது, ஒரு அடி எடுத்து வைத்தால், 'ஜ‌லீர்'என்று ஒலி எழும்பி, உள்ள‌த்தின் எல்லை வ‌ரை சென்று ஒரு உண‌ர்வைக் கிள‌ப்புமே அந்தச் 'ச‌த‌ங்கை' ஒலி ரொம்ப‌ப் பிடிக்கும். என‌து ப‌திவுக‌ளில் அந்த‌ உண‌ர்வைக் கொண்டு வ‌ர‌ணும் என்ற‌ எண்ண‌மும் இருக்கிற‌து. இதுவ‌ரைக்கும் சாத்தியமாகி இருக்கிற‌தா என‌த் தெரியவில்லை ! நீங்க‌ள் தான் சொல்ல‌ணும்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

நினைவில் இல்லை.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப‌வே, அதுவும் பள்ளி நாட்களில். கணினி ஆதிக்கத்தில் இப்பொழுது த‌லை எழுத்து போல‌ ஆனது :)) அப்பொழுதெல்லாம் ஜெராக்ஸ், பேக்ஸ், கணினி எல்லாம் ஆதிக்கத்தில் இல்லை. வீட்டில் ஏதாவது விஷேஷம் என்றால் நெருங்கிய சொந்தங்களுக்கு கைப்பட எழுதி தான் அழைப்பு அனுப்புவார்கள். சில வாண்டுகளை அழைத்து தான் எழுத வைப்பார்கள். அதில் நானும் சேர்த்தி :) இப்பல்லாம் ஒரு பத்து பேருக்கு அனுப்பனும் என்றால் கூட அச்சிட்டோ, மின்னஞ்சலிலோ தான் :((

4. பிடித்த மதிய உணவு என்ன?

ந‌ல்ல‌ வேளைக்கு 'சுவை மொட்டுக்கள்' (அதாங்க‌ டேஸ்ட் ப‌ட்ஸ்) இன்னும் மாற‌லை. சொர்க்க‌மே என்றாலும் ந‌ம்ம‌ ஊரு சாப்பாடு போல‌ வ‌ருமா ?

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஹாய், பய் என்பது உட‌னே வ‌ரும் :)) நீடிக்கும் ந‌ட்புக‌ளுக்கு நாளாகும்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

சந்தேகமே இல்லை பின்ன‌து தான். ம‌டேர் ம‌டேனு பின்ன‌ந்த‌லையில் விழுந்து, சிலுசிலுவென‌ சிலிர்ப்பூட்டி செல்லுவ‌தால்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

க‌ண்க‌ள். உடை. (ஆள் பாதி, ஆடை பாதி ... எப்ப‌டீ ? :))

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

ரெண்டுத்திலும் நிறைய‌ இருக்கே ?!

பிடித்தது: சோக‌மா வ‌ந்து உத‌வினு கேட்டா உட‌னே ந‌ம்பி செய்ய‌ற‌து. (பிற்பாடு ந‌ம்ம‌ல‌ ஏமாத்திட்டாங்க‌னு தெரிஞ்சா வ‌ரும் பாருங்க‌ ரௌத்ர‌ம். ஹிம்ம்ம்.)

பிடிக்காத‌து: ம‌ன‌சு புண்ப‌டுமாறு பேசிவிடுவோமோ என்று அநேக‌ இட‌ங்க‌ளில் (ரொம்ப‌ நெருக்க‌மான‌வ‌ங்க‌ த‌விர்த்து) மௌனியாய் இருப்ப‌து.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: அவ‌ர்க‌ளின் அன்பு :)
பிடிக்காத‌து: அவ‌ர்க‌ளின் அள‌வுக‌ட‌ந்த‌ அன்பு :))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என‌து கிராம‌ம்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

க்ரே டி.ஷர்ட்; மிலிட்டரி க்ரீன் கால்சட்டை.

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பார்ப்பது: க‌ணினித் திரை.
கேட்பது: விர‌ல்க‌ளின் ந‌ட‌ன‌த்தில்,
விசைப‌ல‌கை எழுப்பும் ஒலி :)

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

எல்லா வ‌ண்ண‌ங்க‌ளிலும் ஒவ்வொன்றாய். ரொம்ப‌ ஓவரோனு நெனைச்சிடாதீங்க. கேள்வியிலேயே பண்மை இருக்கே :)

14. பிடித்த மணம்?

காற்றில் க‌ரைந்த‌ ரோசாப்பூ வாச‌ம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

நாகு - ரிச்மண்ட் வெர்ஜீனியாவில் நிறைய பேரை வலை(வீசி)க்கு இழுத்து வந்தவர். நம்மையும் விடவில்லை ! கொஞ்ச காலம் அமைதி காத்த தமிழ்சங்க ப்லாக் தற்போது சூடுபிடித்திருக்கிறது. புதுப் புது பதிவர்கள் வந்து கலக்குகிறார்கள். இந்த பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர். சமீபத்தில் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்தவர்.

லாவண்யா - மின்னலெனத் தோன்றி உயிரோடையாக ஓடிக் கொண்டிருப்பவர். சங்ககாலப் பாடல்களில் நாட்டம் கொண்டவர். ரசனை மிகுந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்.

அன்புடன் அருணா - கலகலப்பான எழுத்துக்கு சொந்தக்காரர். பின்னூட்டுவதிலும் தான். நன்றாக படம் வரைபவர் (சேம் ப்ளட்). அதற்கென தனித் தளமும் வைத்திருக்கிறார்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

க‌விந‌யாவின் ப‌திவில் தாள‌த்தோடு இணைந்த‌ க‌விதைக‌ள், மனதில் நிற்கும் க‌தைகள் மற்றும் அவ‌ர‌து எளிமையான‌ வ‌ரிக‌ள் பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட், டென்னிஸ், கால்ப‌ந்து ...

18. கண்ணாடி அணிபவரா?

ஆம்.

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஹ்யூம‌ர், ஆக்ஷ‌ன், ரிய‌லிஷ‌ம்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

ப்ரகாஷ் ராஜின் 'வெள்ளித் திரை'.

21. பிடித்த பருவ காலம் எது?

வச‌ந்த‌கால‌ம் தான்.....

ப‌ட்ட‌ ம‌ர‌ம் துளிர்த்து,
ப‌ட்டுப் பூப் போலே,
மொட்டாய் சுருள் இலைக‌ளும்,
கொத்தாய் ம‌ல‌ரும் கால‌ம் !

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஹிம். ந‌ல்லா கேட்டிங்க‌. புத்தக‌ம் வாசித்து ரொம்ப‌ நாளாச்சு போங்க‌.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எப்பல்லாம் புதுசா படங்கள் எடுக்கிறோமோ அப்ப‌ல்லாம்.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: குழ‌லினிது யாழினிது எனினும் குழ‌ந்தையின் குதூக‌ல‌த்துக்கு இணை ஏது ?
பிடிக்காதது: அழுகை.

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெரிய‌ண்ண‌ன் ஊரு தான் :)

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

போட்டிக்கோ, போர்க்க‌ள‌த்துக்கோ போற‌வ‌ங்க‌ளுக்கு தான் த‌னித் திற‌மை வேண்டும் என்பது என் எண்ணம். 'நான் உங்க‌ளில் ஒருவன்' அப்ப‌டினு சொல்ற‌துக்கு தான் ஆசைப்ப‌டுகிறேன்.

இருப்பினும், கொஞ்ச‌ம் வ‌ரைவேன். கொஞ்சம் (சாக்பீஸ்ல) குடைவேன். கொஞ்ச‌ம் (த‌மிழில்) எழுதுவேன். கொஞ்ச‌ம் ப‌ட‌ம் காண்பிப்... இல்லை, இல்லை, ப‌ட‌ம் பிடிப்பேன். கொஞ்ச‌ம் ச‌மைப்பேன். ஆனால், எதிலும் முழுமை இல்லை இன்றுவ‌ரை.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைய்ய‌ !!! அர‌சிய‌லாக‌ட்டும், சினிமாவாக‌ட்டும், ந‌டைமுறை வாழ்வாக‌ட்டும் ... ஒருவ‌ரைப் புக‌ழ்ந்து துதிபாடி அவ‌ர் பின்னால‌ ஒரு கூட்ட‌மாக‌வே தொட‌ர்வது / தொடர வைப்பது. குறிப்பாக‌ இளைஞ‌ர்க‌ளை இப்ப‌டி வீணாக்கும் க‌ய‌வர்க‌ளின் செய‌ல்க‌ள்.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபித்த‌ கும‌ர‌னோட‌ பேரை வெச்சிகிட்டு கோப‌ப்ப‌ட‌லேன்னா எப்ப‌டீ ? முன்கோப‌ம் தான் :))

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

நியூஸீல‌ன்ட் இய‌ற்கைக்கு ! பாரீஸ் க‌லைக்கு !! இவ்விரு இடங்களுக்கும் இன்னும் சென்ற‌‌தில்லை :(

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

என்றும் இள‌மையாய் ! ம‌ன‌சுல‌ தாங்க‌ :)

31. மனைவி/கணவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அட‌டே, இதுவ‌ரைக்கும் யோசிக்க‌லையே !!! எனிவே, குட் கொஸ்ட்டீன் :))

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

What Goes Around Comes Back Around (Thanks: Justin Timberlake) !

16 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

"ஜலீர் ஜலீர்" பதில்கள்!

பதில்-9: நல்லா தப்பிக்கிறீங்க:)!

பதில்-16: ரிப்பீட்டேய்...!

பதில்-29:// இவ்விரு இடங்களுக்கும் இன்னும் சென்ற‌‌தில்லை :(//

:))!

ஆயில்யன்said...

//பிடிக்காத‌து: ம‌ன‌சு புண்ப‌டுமாறு பேசிவிடுவோமோ என்று அநேக‌ இட‌ங்க‌ளில் (ரொம்ப‌ நெருக்க‌மான‌வ‌ங்க‌ த‌விர்த்து) மௌனியாய் இருப்ப‌து.//

ஆமாங்க! ஒவ்வொரு முறையும் புதிதாய் யாரிடமோ அல்லது பலர் முன்னிலையில் பேசும்போதோ எல்லாரும் அக்செப்ட் பண்ணிக்கிற மாதிரி பேசுறோமா அல்லது தவறாக எதுவும் பேசுறோமான்னு மனசு கிடந்து அடிச்சுக்கும்! சில சமயங்களில் பேசியது தவறாக மனம் உறுத்தினால் அவர்களிடம் சொல்லி சாரி சொல்லாமல் தூக்கமே வராது ! - இது கெட்ட பழக்கமா நல்ல பழக்கமன்னும் தெரியில :(

Kavinayasaid...

சதங்கா பெயர் காரணம் இப்பதான் தெரிஞ்சது :) அழகு.

வசந்த காலக் குட்டிக் கவிதை நல்லாருக்கு.

பதிவிட்டமைக்கு நன்றி சதங்கா. நீங்க அழைத்தவர்கள் பதில்களும் படிக்க ஆவலுடன்...

cheena (சீனா)said...

ஒன்பதாவது பதில் நான் சோனது மாதிரியே இருக்கு

நல்ல பதில்கள் - நல்ல சுய அறிமுகம்

நல்வாழ்த்துகள்

நானானிsaid...

அடே! ஆமா! 8ம் 26ம் அப்படியே!
கூட 6ம் 14ம் சேத்துக்கலையா?
அப்டீனா 'யாரோ' திங் அலைக்ன்னு செல்வாங்களே? அது சரிதான்.

துளசி கோபால்said...

ஆஹா.....சூப்பர்.


நியூஸீலண்ட் வரும்போது சொல்லுங்க.

உயிரோடைsaid...

சதங்கா,

நல்ல பதில்கள்

நான் 32 கேள்விகளுக்கு முன்னமே பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் அழைத்தமைக்கு நன்றிங்க சதங்கா.

அன்புடன் அருணாsaid...

என்னை அழைத்ததற்கு ரொம்ப நன்றி சதங்கா!!!! ஆனால் ஏற்கெனவே எழுதியாச்சேப்பா!!!! இங்கே பாருங்க!
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/06/blog-post_04.html
ok va??

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மிsaid...

//"ஜலீர் ஜலீர்" பதில்கள்!//

மிக்க மகிழ்ச்சி

//பதில்-9: நல்லா தப்பிக்கிறீங்க:)!//

உண்மைய சொன்ன நம்பமாட்டீங்களே :))

//பதில்-16: ரிப்பீட்டேய்...!//

ஆமா, ஈர்க்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.

//பதில்-29:// இவ்விரு இடங்களுக்கும் இன்னும் சென்ற‌‌தில்லை :(//

:))!
//

எதுக்கு ஸ்மைலி ? இப்ப பாருங்க, டீச்சர் அதுக்குள்ள நமக்கு வரவேற்பு கொடுத்துட்டாங்க :)))

சதங்கா (Sathanga)said...

ஆயில்யன் said...

////பிடிக்காத‌து: ம‌ன‌சு புண்ப‌டுமாறு பேசிவிடுவோமோ என்று அநேக‌ இட‌ங்க‌ளில் (ரொம்ப‌ நெருக்க‌மான‌வ‌ங்க‌ த‌விர்த்து) மௌனியாய் இருப்ப‌து.//

ஆமாங்க! ஒவ்வொரு முறையும் புதிதாய் யாரிடமோ அல்லது பலர் முன்னிலையில் பேசும்போதோ எல்லாரும் அக்செப்ட் பண்ணிக்கிற மாதிரி பேசுறோமா அல்லது தவறாக எதுவும் பேசுறோமான்னு மனசு கிடந்து அடிச்சுக்கும்! சில சமயங்களில் பேசியது தவறாக மனம் உறுத்தினால் அவர்களிடம் சொல்லி சாரி சொல்லாமல் தூக்கமே வராது ! - இது கெட்ட பழக்கமா நல்ல பழக்கமன்னும் தெரியில :(//

நீங்க சொல்றது ரொம்ப சரி. இதனால பாதிப்புனு பார்த்தா, சில சமயங்களில் கெட்ட பெயரும் சம்பாதித்துத் தருகிறது இந்த மௌனம் :(((

சதங்கா (Sathanga)said...

கவிநயா said...

//சதங்கா பெயர் காரணம் இப்பதான் தெரிஞ்சது :) அழகு.

வசந்த காலக் குட்டிக் கவிதை நல்லாருக்கு.//

அழகுக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

//பதிவிட்டமைக்கு நன்றி சதங்கா. நீங்க அழைத்தவர்கள் பதில்களும் படிக்க ஆவலுடன்...//

எதுக்கு நன்றி எல்லாம். நானும் ஆவலோடு இருந்தேன். ஆனா, லாவண்யாவும், அருணாவும் ஏற்கனவே பதில் சொல்லிட்டாங்களாமே !!!! இத்தனைக்கும் அவங்க தளத்தில சின்னதா ரிசர்ச் பண்ணிட்டு தான் அவங்களுக்கு அழைப்பு விடுத்தேன்.

சரி, நாகு என்ன பண்றாருனு பார்ப்போம். கொஞ்ச நாளா அவர் நம்மைக் கண்டு கொள்வதில்லை :(

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

//ஒன்பதாவது பதில் நான் சோனது மாதிரியே இருக்கு //

நாமெல்லாம் உண்மையத் தான பேசுவோம். ஒலகம் நம்பமாட்டேங்குதே !! :))

/நல்ல பதில்கள் - நல்ல சுய அறிமுகம்//

மிக்க மகிழ்ச்சி.

சதங்கா (Sathanga)said...

நானானிsaid...

//அடே! ஆமா! 8ம் 26ம் அப்படியே!
கூட 6ம் 14ம் சேத்துக்கலையா?
அப்டீனா 'யாரோ' திங் அலைக்ன்னு செல்வாங்களே? அது சரிதான்.//

ஆமா !! சேர்த்தாச்சு :)) உங்க எண்ண அலைகளோடு ஒத்துப் போவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

சதங்கா (Sathanga)said...

துளசி கோபால் said...

//ஆஹா.....சூப்பர்.//

மிக்க நன்றி.

//நியூஸீலண்ட் வரும்போது சொல்லுங்க.//

கண்டிப்பா. சொல்லிட்டீங்கள்ல ... :))))

சதங்கா (Sathanga)said...

உயிரோடை said...

//நான் 32 கேள்விகளுக்கு முன்னமே பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் அழைத்தமைக்கு நன்றிங்க சதங்கா.//

ஆஹா உங்க தளத்தில் சமீபகால பதிவுகளை பார்த்துட்டு தானே அழைத்தேன். ரொம்ப முன்னாடியே பதில் சொல்லிட்டிங்க போல. பரவாயில்லை லாவண்யா.

சதங்கா (Sathanga)said...

அன்புடன் அருணா said...

//என்னை அழைத்ததற்கு ரொம்ப நன்றி சதங்கா!!!! ஆனால் ஏற்கெனவே எழுதியாச்சேப்பா!!!! இங்கே பாருங்க!
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/06/blog-post_04.html
ok va??//

லாவண்யாக்கு சொன்னதே உங்களுக்கும் சொல்லிகறேன் அருணா. பரவாயில்லை. உங்க பதில்கள் சீக்கிரம் வந்து பார்க்கிறேன்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !