நம்மூரு அழுக்கு நோட்டு !
Photo (Thanks): www.picturejockey.com
சடசடக்கும் வெண்தாளில்
சட்டென்று ஈர்க்கும்வண்ணம்,
புத்தம் புதிதாய்
பிரசவிக்கும் நம் நோட்டு !
பொக்கை வாய் காந்தியும்
புன்னகையாய் சிரித்து,
வலம்வருவார் நாடெங்கும்
வண்ண நோட்டுக்களில் !
பத்தும் இருபதுமாய்
பலகோடி நோட்டுக்கள்,
பயணித்துச் செல்லும்
பலரின் வாழ்விலே !
கீரைத்தண்டு கரம்பற்றி
மீதிச் சில்லரையாக,
முழம்போட்ட விரல்பிரித்து
பூக்கும் சில்லறையாக !
சுருட்டிக் படுத்திருக்கும்
சுருக்குப் பைகளுக்குள்,
வேர்க்கும் இதயத்தின்
மேல்மிதக்கும் பைகளுக்குள் !
நடத்துனரின் விரல்பற்றி
பேருந்தில் பயணிக்கும்,
ஊரெலாம் சுற்றி
ஓயாது ஒரு நாளும் !
நடக்கக் காலில்லை
பறக்கச் சிறகில்லை,
இருக்க நினைத்தாலும்
ஓரிடம் அதற்கேது ?!
சந்தைக்குப் போய்வரும்
சடுகுடுவில் கலந்து கொள்ளும்,
அண்டை வீட்டாருடன்
அடிக்கடி நட்பு கொள்ளும் !
உள்ளங் கையிடுக்கில்
சுருண்டு கறுத்ததுவோ ?
ஊர்சுற்றி களைத்து
வேர்த்துக் கறுத்ததுவோ ?!
அழுக்காகி அழுகவில்லை
அதைநினைத்துக் கவலையில்லை,
என்னோடு எங்கும் வரும்
நம்மூரு அழுக்கு நோட்டு !
ஜூலை 24, 2009 யூத்ஃபுல் விகடனில்
14 மறுமொழி(கள்):
//நடக்கக் காலில்லை
பறக்கச் சிறகில்லை,
இருக்க நினைத்தாலும்
ஓரிடம் அதற்கேது ?!//
அழகாய் சொல்லிவிட்டிருக்கிறீர்கள்.
//அழுக்காகி அழுகவில்லை
அதைநினைத்துக் கவலையில்லை,//
இந்த அழுக்கு எவருக்கும் பொருட்டில்லை:)!
//என்னோடு எங்கும் வரும்
நம்மூரு அழுக்கு நோட்டு !//
எவருக்கும் தோன்றாத கருவிலே
படைத்துள்ளீர்கள் வழக்கம் போலே!
அருமை!
அன்பின் சதங்கா
சிந்தனை இம்முறை இத்திசிஅயில் பயணம் செய்கிறதா ? ஒரு ரூபாய் நோட்டினை - அழுக்கு நோட்டினைப் பார்த்த உடன் கவிதையா ?
அருமை அருமை - கவிஞனுக்கு கருப்பொருள் எதுவாயினும் கவிதை எழுத முடியும்.
நன்று நன்று
புத்தம் புதிய நோட்டினை புழங்கும் போது இருக்கும் இன்பம், அந்நோட்டு அழுக்காகி பயன் படுத்த இயலாத நோட்டாக மாறிய பின்னும், இருக்குமே !
நாடுவலம் - பயணம் செல்லுதல் - கீரை, பூ விற்பவர் கரங்கள் - சுருக்குப்பை -இதயத்தோடி இணைந்த பைகள் - நடத்துனரின் விரல் - உள்ளங்கையிடுக்கு - நாளும் முடியாத பயணம் - உலகம் சுற்றும் நோட்டு
ம்ம்ம்ம் -சதங்கா - அருமை அருமை - ரசித்தேன் - மகிழ்ந்தேன் -
நல்வாழ்த்துகள் சதங்கா
சடுகுடுவில் கலந்து கொள்ளும்,
அண்டை வீட்டாருடன்
அடிக்கடி நட்பு கொள்ளும் !]]
இது மிக அருமைங்க ...
காலில்லாவிட்டால் என்ன.
அழுக்காயிருந்தாலும் தானென்ன. சுருக்குப் பையிலோ,பெட்டியிலோ இது இருக்கும் வரை வார்த்தைகளுக்கு ஏது பஞ்சம்:)
அனுபவித்து அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் சதங்கா.
வழக்கம்போல் அற்புத சிந்தனை!!!!
//நடக்கக் காலில்லை
பறக்கச் சிறகில்லை,
இருக்க நினைத்தாலும்
ஓரிடம் அதற்கேது ?! //
சதங்கா நல்லா எழுதி இருக்கீங்க
ராமலக்ஷ்மிsaid...
////நடக்கக் காலில்லை
பறக்கச் சிறகில்லை,
இருக்க நினைத்தாலும்
ஓரிடம் அதற்கேது ?!//
அழகாய் சொல்லிவிட்டிருக்கிறீர்கள்.//
மிக்க நன்றி.
////அழுக்காகி அழுகவில்லை
அதைநினைத்துக் கவலையில்லை,//
இந்த அழுக்கு எவருக்கும் பொருட்டில்லை:)!//
யாரும் அதை தூக்கி எறிந்து பார்த்ததில்லை, நானும் சேர்த்தி :))
////என்னோடு எங்கும் வரும்
நம்மூரு அழுக்கு நோட்டு !//
எவருக்கும் தோன்றாத கருவிலே
படைத்துள்ளீர்கள் வழக்கம் போலே!
அருமை!//
மிக்க மகிழ்ச்சி. எவருக்கும் தோன்றி, படைக்காமல் இருந்திருக்கலாம் என்று சொல்லலாமா ?
N.S.கிருஷ்ணன் பணம் பத்தி பாடிய பாடலொன்று நினைவுக்கு வந்தது.
ஒரு வகையில் ரூபாய் நோட்டுக்கள் கை மாறும் போதுதான் சமத்துவங்கள் பிறக்கின்றன்.
'தலித்'கைகளிலிருந்து வந்தாலும் அவற்றுக்கு தோஷமில்லை, தீட்டு இல்லை.
சொன்னாப்ல, உயர் ஜாதி கைகளிலிருந்து கை மாறினாலும் கண்களில் ஒத்திக்கொள்வதுமில்லை.
சரிதானே..சதங்கா!
நல்ல கருத்துக்கள....எப்போது, எங்கே, எப்படிப் பிறக்கும் என்பதை அவதானிக்கவே முடியாது போலும்.
/நடக்கக் காலில்லை
பறக்கச் சிறகில்லை,
இருக்க நினைத்தாலும்
ஓரிடம் அதற்கேது ?!/
அருமை
cheena (சீனா) said...
//அன்பின் சதங்கா
சிந்தனை இம்முறை இத்திசிஅயில் பயணம் செய்கிறதா ? ஒரு ரூபாய் நோட்டினை - அழுக்கு நோட்டினைப் பார்த்த உடன் கவிதையா ?
அருமை அருமை - கவிஞனுக்கு கருப்பொருள் எதுவாயினும் கவிதை எழுத முடியும்.
நன்று நன்று //
உங்களுக்குக் கவிதை பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
//
ம்ம்ம்ம் -சதங்கா - அருமை அருமை - ரசித்தேன் - மகிழ்ந்தேன் -
நல்வாழ்த்துகள் சதங்கா
//
வழக்கம் போல டீடெய்லா பாராட்டியதற்கு மிக்க நன்றி.
நட்புடன் ஜமால் said...
//சடுகுடுவில் கலந்து கொள்ளும்,
அண்டை வீட்டாருடன்
அடிக்கடி நட்பு கொள்ளும் !]]
இது மிக அருமைங்க ...//
மிக்க நன்றி ஜமால்.
வல்லிசிம்ஹன் said...
//காலில்லாவிட்டால் என்ன.
அழுக்காயிருந்தாலும் தானென்ன. சுருக்குப் பையிலோ,பெட்டியிலோ இது இருக்கும் வரை வார்த்தைகளுக்கு ஏது பஞ்சம்:)
அனுபவித்து அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் சதங்கா.
வழக்கம்போல் அற்புத சிந்தனை!!!!//
ரொம்ப நாளைக்குப் பின்வந்து மனதார வாழ்த்தியதற்கு மிக்க நன்றி வல்லிம்மா.
உயிரோடை said...
//சதங்கா நல்லா எழுதி இருக்கீங்க//
மிக்க நன்றிங்க.
நானானி said...
//N.S.கிருஷ்ணன் பணம் பத்தி பாடிய பாடலொன்று நினைவுக்கு வந்தது.
ஒரு வகையில் ரூபாய் நோட்டுக்கள் கை மாறும் போதுதான் சமத்துவங்கள் பிறக்கின்றன்.
//
சர்வ நிச்சயமா.
//நல்ல கருத்துக்கள....எப்போது, எங்கே, எப்படிப் பிறக்கும் என்பதை அவதானிக்கவே முடியாது போலும்.//
மிக்க மகிழ்ச்சி நானானிம்மா.
திகழ்மிளிர் said...
///நடக்கக் காலில்லை
பறக்கச் சிறகில்லை,
இருக்க நினைத்தாலும்
ஓரிடம் அதற்கேது ?!/
அருமை
//
மிக்க நன்றி நண்பரே !
Post a Comment
Please share your thoughts, if you like this post !