நீயா ? நானா ? -- அப்பாக்கள் பாஸாட்டம் ஆடுகிறார்களா ?
காலத்தின் பயணத்தில் எவ்வளவோ சகிப்புத் தன்மையை நாம வளர்த்துகிட்டாலும், சில நேரங்களில், சில மனிதர்களின் செயல்கள் நம்மை ரொம்பவே அமைதி இழக்கச் செய்துவிடுகின்றன. சரீ, பில்டப் நிறுத்திக்கறேன் :))
சமீபத்தில் பார்த்த "நீயா ? நானா ?" நிகழ்ச்சி "அப்பா பாஸாட்டம் ஆடுகிறாரா ?" தலைப்பு இதுவல்ல, இதுபோல ஒன்னு :))) ரெண்டு விசயங்கள் நம்ம சகிப்புத் தன்மையையும் மீறி சோதித்தது.
முதலாவது, ஒரு கட்டத்தில் விழுந்து விழுந்து கோபிநாத் சிரிக்க, என்னாச்சுனு நாங்க பதறிபோய், ஏற்கனவே டி.வி. திரையில் ஒட்டிக்கிட்டிருந்த கண்களை, மேலும் அழுத்தி விழுந்து விடாமல் ஒட்டிப் பார்க்க, 'சின்ன இடைவேளைக்குப் பிறகு'னு, சைக்கிள் கேப்ல ஆட்டோ வேற (வேற ஒன்னும் புதுசா கெடைக்கலபா) ....
'அப்பாக்கள் ஔட் டேட்டட் என்கிறதுக்கு இத விட வேற என்ன வேணும்'னுட்டு மேலும் இடி இடி என சிரிப்பு !!! ஏன் ? ஏ.இ.கொ.வெ ??? ஒரு அப்பாவிற்கு மைக்கை சரி வர பயன்படுத்தத் தெரியவில்லை ! இதுக்கு தான் இத்தனை அலப்பரை. ரொம்ப சி.பு.த.இ ஓய் !!!!
அப்பாக்கள் ஔட் டேட்டட் ஆக இருப்பதால் தான், பிள்ளைகள் அப் டு டேட் ஆக இருக்க முடியுது ! நல்ல வீடு வேணும், வண்டி வேணும், செல்போன் வேணும், ஜிமிக்கி வேனும், சல்வார் வேனும், செருப்பு(கள்) வேணும் ... ஆனா "ஏன் ?" அப்படினு ஒரு வார்த்தை கேட்டுரப்படாது.
இரண்டாவது, "பொட்டு இப்படி வச்சா நல்லா இருக்கும். செல் போன் அதிகம் பயன்படுத்தாதீங்க. ராத்திரில சீக்கிரம் வீட்டுக்கு வாங்க" இப்படீனு ஒரு அப்பா சொல்ல ... "நிறுத்து ... இதெல்லாம் உங்களுக்கு அதிகமா தெரியல ... இத தீர்மானிக்க நீங்க யாரு சார்" என்றாரே பார்க்கலாம். "உன் பிள்ளைக்கு நீ எப்படி டா பேர் வைக்கலாம்"ன்கிற மாதிரில இருக்கு !!!
ஆரம்பத்தில விட்டாலும் பிறகு பிடித்தார் ஒரு அப்பா. "ஒரு அலுவலகத்தில் பாஸ் திட்டிட்டான்னா, இவங்க வேலைக்கு போகாம இருப்பாங்களா ? என் சிறுவயதில் ஒரு நூறு ரூபாய் இல்லாமல் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். என் கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாதுனு தான் இத்தனை செய்கிறோம் பிள்ளைகளுக்கு. அவர்கள் தவறுதலான வழியில் செல்கையில், நாங்க ஏன்னு கேட்க கூடாதா ?"
யாராவது பதில் சொல்லணுமே ! ம்.ஹிம்.
வழக்கம் போல நடுவில நாலு அப்பா, அம்மாக்கள அழவிட்டு ... ப்ளீஸ் இதைத் தவிர்த்துவிடுங்கள். அயலகத்து டி.வி.க்களை அப்படியேவா காப்பி அடிப்பது !
உலகம் முழுக்க மதர்ஸ் டே, எர்த் டே ஃப்ரீ ஏர் டே, இப்படி என்னன்னெவோ டேக்கல் படு பிரபலம். ஆனா ஃபாதர்ஸ் டேயும் வருது ! அது பாட்டுக்குப் போகுது. இங்க கூட ஃபாதர்ஸ் டே பத்தி அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.
சில வீடுகளில் மோசமான அப்பாக்கள் இருக்கிறார்கள். அதற்காக, நடந்த இந்த நிகழ்ச்சியில், ஒட்டு மொத்த அப்பாக்களையும் கூப்பிட்டு அவமானப்படுத்தியதாகவே ஆகிறது :((
8 மறுமொழி(கள்):
//அப்பாக்கள் ஔட் டேட்டட் ஆக இருப்பதால் தான், பிள்ளைகள் அப் டு டேட் ஆக இருக்க முடியுது !//
Well said!
பரபரப்புக்காக நடத்துப் படும் இந்நிகழ்சிகளில் அந்த ஒரு மணிநேர பாப்புலாரிட்டிக்காக யோசிக்காமல் எதை எதையோ பேசிவிட்டு சொந்த உறவுகளை எப்படி எப்படியோ தாக்கி விட்டு அதன் வடுவை காலமெல்லாம் சுமந்தபடி... தேவையா? இந்த பாயின்டையும் நோட் பண்ணிக் கொள்ளுங்கள் சதங்கா!
வடகரை வேலன் தனது பதிவொன்றில்:
//நிகழ்ச்சியில் ஒருவர் தன் மனைவியை எருமைமாடு எனச் சொன்னது வலித்தது. தான் ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டு ஆக இருப்பதால்தான் இப்படிச் சொல்லுவதாக அவர் நியாயப் படுத்தியது கொடுமை. பலர் முன்னிலையிலேயே, அதுவும் உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் இப்படிப் பேசியது சரியல்ல. குறைந்தப் பட்ச நாகரிகம் உள்ளவன்கூட இதைச் செய்ய மாட்டான்.
பரபரப்புக்காக விஜய் டீவி இதை எடிட் செய்யாமல் ஒளிபரப்பினார்கள் என நினைக்கிறேன். இதை அப்பெண்மணி மீதி ஏவப்பட்ட வன்முறையாகவே பார்க்க வேண்டும்.//
அங்கே எனது பின்னூட்டம்:
//உண்மைதான். எருமைமாடென எவரைச் சொன்னாலுமே தவறு. அதிலும் மனைவியைச் சொன்னது மன்னிக்க முடியாததுதான். குறிப்பிட்ட இந்நிகழ்ச்சியை நான் பார்க்காவிட்டாலும், சில நேரங்களில் குடும்பங்களுக்குள் மாற்ற இயலாத மன வருத்தத்தை உண்டு பண்ணுவதாய் சில ’நீயா நானா’க்கள் அமைந்து போகின்றன.
ஒருமுறை நாய் வளர்ப்பு பற்றிய விவாதத்தில் தாயார் எதிர் அணியிலிருந்த மகளைப் பார்த்து, ‘இந்த நாயை வளர்ப்பதை விட எனக்கு என் செல்லநாய்களை வளர்ப்பதில்தான் பிடித்தம்’ என்கிற மாதிரி சொல்ல மகளின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. நடுவர் ‘அப்படிச் சொல்லுவது தவறு’ என்றபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் பேசிக் கொண்டே போனார் அந்த அம்மணி.
அப்படியே விரும்பத்தகாத வார்த்தைகளை பங்கு பெறுபவர் பேச நேர்ந்தாலும் அதை எடிட் செய்து வெளியிடலாமே. பரபரப்புக்காக நடத்தப்படுவதான தோற்றத்தையே பெரும்பாலான நிகழ்ச்சிகள் தருவதால் அவற்றைப் பார்க்கிற விருப்பமும் குறைந்து போகிறது.//
இதையொட்டிய எனது பதிவு "வேண்டுவது தளமா சோர்வைத் தரும் களமா?". அதிலே ‘அவர்களுக்கு அவ்ர்தம் வியாபாரம் முக்கியம் என்றால் நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்’ என ஒரு கருத்து சொல்லியிருப்பேன். அதையே இங்கும் சொல்கிறேன், நமக்கு நமது உறவுகள் முக்கியம்.
//ஒட்டு மொத்த அப்பாக்களையும் கூப்பிட்டு அவமானப்படுத்தியதாகவே ஆகிறது :(( //
எனது மூன்றாவது பின்னூட்டம் உங்களது இந்த ஆதங்கத்துக்காகச் சொன்னதுதான்.
சட சடவென வருகின்ற உங்களின் பின்னூட்டங்கள் போன்ற மனநிலையில் தான் அன்று நாங்களும் :)) கொஞ்சம் பொறுங்க விரிவாய் எழுதுகிறேன் பின்பு ...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
////அப்பாக்கள்ஔட் டேட்டட் ஆக இருப்பதால் தான், பிள்ளைகள் அப் டு டேட் ஆக இருக்க முடியுது !//
Well said!//
மிக்க மகிழ்ச்சி !
//பரபரப்புக்காக நடத்துப் படும் இந்நிகழ்சிகளில் அந்த ஒரு மணிநேர பாப்புலாரிட்டிக்காக யோசிக்காமல் எதை எதையோ பேசிவிட்டு சொந்த உறவுகளை எப்படி எப்படியோ தாக்கி விட்டு அதன் வடுவை காலமெல்லாம் சுமந்தபடி... தேவையா? இந்த பாயின்டையும் நோட் பண்ணிக் கொள்ளுங்கள் சதங்கா!//
நிச்சயமா ! நோட் பண்ணியாச்சு.
//வடகரை வேலன் தனது பதிவொன்றில்://
வேலன் அவர்களின் பதிவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன். ஆனால், அவர் கூறிய நிகழ்ச்சியைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. மனைவியை எருமைமாடு என்று அனாயசமா சொல்லி, அத்தனை பேரையும் ஒரு செகண்ட் திக் ப்ரமைக்கு ஆளாக்கிட்டாரு. நாங்க கூட முதலில் ஏதோ காமெடி பண்றாரு நெனச்சா, கொஞ்சம் கூட அலட்டல் இல்லை. 'நான் தான் டா, நான் சொல்றது தான் டா'னு ஒரு பார்வை.
நேக்கு போக்கா நடக்கறது தப்புனு விவாதிக்க ஒரு கூட்டம். அதில் தான் நம்ம ஹீரோவும். கற்காலத்திலேயே மனிதன் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். இல்லேன்னா நாம இன்னிக்கு இருந்திருபோமா !!!! நைசா பேசினா தான் ஜல்ஸாவே பண்ணமுடியும்னு அப்பவே தெரிஞ்சுருக்கு :)))
இவங்க பேசுனதுல ஹைலைட்டே, 'அது எதுக்கு கொழந்தைய எல்லாம் கொஞ்சிக்கிட்டு. பெத்தமா, அது பாட்டுக்கு வளந்துச்சானு இருக்கனும். அத விட்டு, செல்லம் இது சாப்பிடறியா, அது வேணுமா'னு எல்லாம் கேட்டா அவங்களுக்குப் பிடிக்கலையாம், அது சரியும் இல்லையாம். அடங்கப்பா சாமீ..... இதெல்லாம் நடிப்பாம், ஐயஹோ ....
*****
இதே போல மற்றொரு டாபிக், பெற்றோரின் சாமி பக்தி பிள்ளைகளை பாதிக்கிறதா ? அதில், 'பக்தியில் உங்க பிள்ளைகள் செய்கிற காரியம் எது உங்களுக்குப் பிடிக்கவில்லை ? எது மனவருத்தத்தைத் தருகிறது ? அப்படீ வரிசையா ஒற்றை வரியில் சொல்லிகிட்டே வாங்க....'னு சொல்லி வசமா ஒரு இஸ்லாமிய அப்பாவைப் பிடித்துக் கொண்டார் கோபி.
'தினம் காலையில் சீக்கிரம் எழுந்திரிப்பா. அன்றாடம் நேரத்துக்கு தொழுகை பண்ணு'னு இவ்ளோ தான் சொன்னாரு அந்த அப்பா.
கோபி: "இன்னிக்கு என்ன கிழமை"
அப்பா: வெள்ளிக்கிழமை.
கோபி: "மதிய நேரம். தொழுகைக்குப் போகாம இங்க என்ன செய்யறீங்க ?"
அப்பா: ....
கோபி: "இந்த சான்ஸ (எந்த சான்ஸ், எவரஸ்ட் மலை ஏறுவதா?) விட்டுரக்கூடாது. டி.வி.ல வந்திரனும்னு இறைவனையே தூக்கிப்போட்டுட்டு வந்துட்டீங்க. இதுல உங்க பசங்களுக்கு அறிவுரை வேற"
அப்படீனு சொல்லி அழதாகுறையா ஆக்கிட்டாரு .... என்னமோ அந்த அப்பா வாராவாரம் வெள்ளிக் கிழமைகளில் டி.வி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மாதிரி !!!!
இதே நிகழ்ச்சியில் நடந்த காமெடி ஒன்றையும் சொல்லியே ஆகணும். ஒரு பாட்டி, ஒரு பேத்தி. எதிர் எதிர் அணியினர். பாட்டி அப்படியே பார்த்தவுடன் காலில் விழும் அளவிற்கு அப்படி ஒரு பக்திப் பழமாக இருந்தார். பேத்தி அல்ட்ரா மாடர்ன். பாட்டி பண்றது, அவங்க வீட்டார் பண்றது எல்லாம் போலி எனச் சொல்லி கேலி பண்ணிக் கொண்டிருந்தார் பேத்தி.
"உங்களின் ரோல் மாடல் யார் ? வரிசையா சொல்லிகிட்டே வாங்க" என்ற கேள்வி பேத்திகிட்ட வர, வந்த கெஸ்ட் ஒருந்தரைக் காட்டி 'இவர் தான் என் ரோல் மாடல் இன்னிலேருந்து (அதுவும் இன்ஸ்டன்ட்)'னு சொன்னவுடன் கோபிக்கே தாங்கமுடியலை. ஆனா அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லைனு நினைக்கிறேன் :))) அட, 'ஞாநி' தான் அவங்க ரோல் மாடலாம் !!! ஐயஹோ ராமா ....
இப்படி இந்த நிகழ்ச்சி பற்றி இன்னும் எழுதிகிட்டே போகலாம் ......
இன்னும் 'இனி ஒரு விதி செய்வோம்'னு ஒன்னு வருது பாருங்க, அந்த ரேவதி பாட்டி நடத்துறது நல்லா இருக்கு. ஆனா, தேவதர்ஷினி நடத்துறதுல கலந்துக்கறாங்க பாருங்க, அவங்க பேச்சுல, இடி விழுந்தாலும் ஆடாதவன் கூட ... ஆக்ரோஷமா ஆகி, ஹார்ட் அட்டாக்கே வந்துடும் :))))
***
//இதையொட்டிய எனது பதிவு "வேண்டுவது தளமா சோர்வைத் தரும் களமா?". அதிலே ‘அவர்களுக்கு அவ்ர்தம் வியாபாரம் முக்கியம் என்றால் நமக்கு நமது குழந்தைகள் முக்கியம்’ என ஒரு கருத்து சொல்லியிருப்பேன். அதையே இங்கும் சொல்கிறேன், நமக்கு நமது உறவுகள் முக்கியம்.
//
சமுதாயத்தின் மீது உறவுகளின் மீது அக்கரை கொண்ட உங்கள் பதிவும் அருமை. டி.வி.காரங்க திருந்துவது மாதிரி இல்லை. நாம தான் பாத்து உஷாரா இருந்துக்கணும். :)))
ஒரு அடிப்படையான பொறுப்புணர்ச்சி என்பது நிகழ்சி நடத்துபவர்களுக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகையில்...
//நாம தான் பாத்து உஷாரா இருந்துக்கணும். :)))//
நீங்க சொல்றபடிதான் இருந்துக்கணும்:)!
விரிவான கருத்துப் பரிமாற்றத்துக்கு நன்றி சதங்கா!
Post a Comment
Please share your thoughts, if you like this post !