நிறம் மாறும் இலைகள்
Photo: freefoto.com
வெற்றிலைப் பச்சை
நிறத்து இலைகள்
குளிர்வர உதிருமுன்
நிறமாறும் இலைகள்
நெல்லிக் கனிநிறம்
துவங்கும் இலைகள்
பரங்கிப் பூவாய்
பழுக்கும் இலைகள்
செம்மண் போலச்
சிவக்கும் இலைகள்
கத்தரி நிறத்தில்
கறுக்கும் இலைகள்.
மறையும் பச்சையில்
பழுப்பு வண்ணம்
கரையும் சிவப்பில்
காவி வண்ணம்
அனைத்து நிறமும்
கலந்த வண்ணம்
படர்ந்து பரவி
எங்கும் வண்ணம்
காணும் கண்கள்
களிப்புறும் வண்ணம்
இயற்கை தூரிகை
தீட்டும் வண்ணம் !
8 மறுமொழி(கள்):
காணும் காட்சி எல்லாம்
கண்களால் உள் வாங்கி
எண்ணத்தில் இருத்தி
எளிய வார்த்தைகளில்
எழில் கோலம் இட்டிருக்கிறீர்கள்
'வழக்கம் போல்'!
நல்ல கவிதை - எளிய சொற்கள் - இயல்பான கருத்து
கலக்கிட்டீங்க
அருமையான படங்கள் சதங்கா. நேர்த்திக்கு ஏற்றது போல உணர்ச்சியுடன் கவிதை வண்ணங்கள்.
இந்த இலைகளின் அழகைத் தினம் வியக்கிறேன். நீங்கள் கவிதையே வடித்து விட்டீர்கள்.
சூப்பர். உங்க ஊர்ல கூட கலர் மாறுதா?
ராமலஷ்மி மேடம்,
//எழில் கோலம் இட்டிருக்கிறீர்கள்
'வழக்கம் போல்'!//
கவிதைக்கு கவிதையில் பாராட்டுவதில், நீங்களும் வழக்கம்போல கலக்கிவிட்டீர்கள். ரொம்ப சந்தோஷம்.
சீனா ஐயா,
//நல்ல கவிதை - எளிய சொற்கள் - இயல்பான கருத்து
கலக்கிட்டீங்க//
நன்றி. நன்றி.
வல்லிம்மா,
//நேர்த்திக்கு ஏற்றது போல உணர்ச்சியுடன் கவிதை வண்ணங்கள்.//
ஆஹா, மிக்க மகிழ்ச்சி. நேரில் பார்க்கறத இங்க எழுதறேன், உங்களைப் போன்றவர்களின் ஊக்கத்துடன் :))
நாகு,
//உங்க ஊர்ல கூட கலர் மாறுதா?//
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. இதுக்காகவே பல படங்கள் புடிச்சி (இன்னும் புடிச்சிகிட்டு) இருக்கேன். நேரம் வரும்போது பதிஞ்சிட்டு சொல்றேன்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !