Sunday, October 12, 2008

குட்டி அணிலே ! (குழந்தைகள் கவிதை)


Photo courtesy: http://flickr.com/photos/43555660@N00/468195506

குட்டி அணிலே
சுட்டி நீயே,

மரங்கள் ஏறி
கனிகள் சுவைத்து,

தரையில் தாவி
விதைகள் தேடி,

பொறுக்கும் எதையும்
இருகை பிடித்து,

மருள விழித்து
கொறித்து உண்பாய் !

எங்கள் வீட்டின்
பக்கம் வந்து

மேனி வரிகள்
மினுக்கி இருக்க,

வளைந்து வாலும்
அடர்ந்து இருக்க,

கீச்சுக் குரலில்
தொடர்ந்து கத்தி

உந்தன் குட்டி
அணில்களுக்கு ஊட்டி

ஓட்டின் மேலே
எட்டித் தாவி,

ஏறிப் பறப்பாய்
குட்டி அணிலே !

4 மறுமொழி(கள்):

cheena (சீனா)said...

வழக்கம் போல் கண்ணால் கண்டு, மனதால் மகிழ்ந்து, எண்ணக்குதிரையை ஓட விட்டு, அழகு தமிழில், எளிய சொற்களைக் கொண்டு, மழலைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் கவிதை எழுதிய சதங்காவிற்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

அணில் படம் சூப்பர்

ராமலக்ஷ்மிsaid...

சுட்டிகள் மனனம் செய்து பாடும் வகையில் எளிய சொற்களுடன் அருமை அருமை அணில் பாடல்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

பாராட்டுக்கு மிக்க நன்றி. ஆமா, அருமையான அணில் படம் இணையத்தில் இருந்து எடுத்து தான் போட்டிருக்கிறேன்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

பதிவுலகம் வந்த புதிதில் சில குழந்தைகள் கவிதைகள் எழுதினேன். அப்புறம், ரொம்ப நாள் கழிச்சு, இப்ப இந்த அணில் கவிதை.

மற்ற கவிதைகளும் கொஞ்சம் இடைவெளி விட, என்னை மீண்டும் எழுதத் தூண்டியவர் நீங்க தானே, அதான் இந்த விளக்கம். :))

பாராட்டுக்கு மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !