Tuesday, October 14, 2008

அமெரிக்காவில் பத்தாயிரம் டாலருக்கு வீடு !!!

"இன்று அமெரிக்க வங்கிகளிடம் பணத்துக்குப் பதிலாக, பறிமுதல் செய்யப்பட்ட சொத்துப் பத்திரங்கள்தான் இருக்கின்றன. அமெரிக்கா முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் பூட்டி கிடக்கின்றன. அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பரிடம் இதுபற்றி பேசியபோது, ‘‘Texas, Michigin, Ohio, Vergina போன்ற மாநிலங்களில் இரண்டு பெட்ரூம் குடியிருப்புகள் வெறும் 10 ஆயிரம் ஹிஷி டாலர் அதாவது சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கின்றது. சில இடங்களில் அதற்கும் குறைவாகக்கூட கிடைக்கிறது... அமெரிக்காவில் வீடு வாங்குகிறாயா?' என்கிறார்."

இதை நான் சொல்லவில்லை. அமெரிக்க அதிபர், செனட் என்று ஆரம்பித்து இந்தியாவிற்கு பாடம் என்று வரிந்து கட்டி ஒருவர் கட்டுரை எழுதி இருக்கிறார். மேலே குறிப்பிட்ட பத்தியில், மிச்சிகன் மற்றும் வெர்ஜினியா ஸ்பெல்லிங் கவனிங்க. இதில் இவர், இவரது நண்பர் (அமெரிக்கால எந்தப் பக்கம்பா) கிட்ட பேசினாராம். அவர் சொன்னாராம் பத்தாயிரம் ஹிஷி டாலர் (இதென்னாது ?!!!) கொடுத்தா வீடு வாங்கலாம் என்று சொன்னது மட்டுமில்லாமல், வாங்குகிறாயா என்றும் கேட்டாராம். மேலும் அடிச்சு ஆடறார் பாருங்க, இதற்கும் குறைவான விலையில், மற்ற இடங்களில் வீடுகள் கிடைக்கிறதாம்.

நண்பர்கள் வட்டத்தில் அளந்து விடுவது போல இருக்கும் இக்கட்டுரை வெளிவந்தது பிரபல ஜூ.வி. 15-10-2008 தேதியிட்ட இதழில். எடிட்டர், ஆசிரியர் எல்லாம் வெக்கேஷன்ல போய்ட்டாங்க போல :)))

12 மறுமொழி(கள்):

VSKsaid...

:))))))))))))))
செம ஜோக்!
:)))))))))))

Anonymoussaid...

ha, ha,,,

Srisaid...

In one of the earlier issue, the same JV mentioned that you can buy a house for 1500 USD in Detroit. It also mentioned that even at that prices there are no buyers. I was lmao. I feel sorry for the folks who read and their nanayam vikatan make investment decisions based on that.

ராமலக்ஷ்மிsaid...

சரிதான்:))!

Jayakanthan - ஜெயகாந்தன்said...

s, man you need to come back to "Vergina". :-)

அமர பாரதிsaid...

எனக்கும் இந்த விஷயம் மன்டைய குழப்புது. கொஞ்சம் கீழே உள்ள URL படிச்சுட்டு விளக்கம் கொடுங்களேன்.

http://www.trulia.com/MI/Detroit/#for_sale/Detroit,MI/resale,new_homes,foreclosure_lt/2,3_ft/price;a_sort/

Anonymoussaid...

இப்பதான் வினவு தளத்துல
அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!
கட்டுரையில இதே பிரச்சனைக்கு ஒரு கமென்ட போட்டேன்.
http://www.guardian.co.uk/business/2008/sep/26/useconomy.usa
http://www.hindu.com/2008/09/27/stories/2008092756002200.htm
இத்தையும்
http://www.msnbc.msn.com/id/26988571/
அமர பாரதி
நீங்க இதப்படிங்க நல்லா புரியிர மாதிரி எழுதியிருக்காங்க
http://vinavu.wordpress.com/அமெரிக்கா-திவால்-டவுசர்/






இதப்படிங்க

Anonymoussaid...

There are some web sites in US that advertise you can get a house for $1500. When you login they will ask you to pay a subscription to get the list of house available.

They may have one or two abandon houses (build in year 1800 or less) in a very remote or desert area. If you pay the tax arrears to the town you can buy that one. I saw this advertisement and got the list for $500 six months before.

Anand

துளசி கோபால்said...

நெசமாத்தான் சொல்றீங்களா?

அப்ப ஒரு நாலைஞ்சு வீட்டை வாங்கிப்போடத்தான் வேணும்:-))))

Madhu Ramanujamsaid...

ஹ்ம்ம்ம்....... இப்படி ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் கிடைச்சா நா கூட ஒரு நாலு வீடு வாங்குவேன். எங்கேனு சரியா விலாசம் கேட்டு சொல்லுங்கப்பா. மாசா மாசம் 1500 டாலர் வாடகை குடுத்து கட்டுப்படியாகலை.

Sreelathasaid...

அமெரிக்கா பத்தி உருப்படியா படிக்காம ஒரு அமெரிக்கரிடம் கூட பேசாம அமெரிக்கா இப்படி அமெரிக்கர்கள் இப்படின்னு பீலா விடற கும்பல் இந்தியாவில ரொம்ப ஜாஸ்தி. அது மாதிரிதான் இதுவும். என்ன சதங்கா - Fresh-Off-the-boat mentalityல இருந்து மாறிட்டீங்களா? :-)

சதங்கா (Sathanga)said...

அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

அமெரிக்காவில் இதுபோல் வீடுகள் விற்பனைக்கு வரத்தான் செய்கின்றன. ஆனால் எந்த மாதிரி ஊர்களில், எந்த மாதிரி இடங்களில் வருகின்றன, வாங்கினால் அங்கு குடியிருக்க முடியுமா ? என்றெல்லாம் பார்த்தால், வாழ்விற்கு ஒத்து வராத பதில்கள் தான் கிடைக்கின்றன.

எங்கோ நடக்கும் (இப்ப என்றில்லை, ரொம்ப வருடங்களாகவே !!!) ஒரு சில செய்திகளை காதில் வாங்கி, இன்றைய நிதி நிலைமைக்கு அமெரிக்காவின் காரணம், இது தான் என்பது போல் கட்டுரை வெளியிடுவது, ஜூ.வி. போன்ற பத்திரிகைகளின் தரத்தை குறைப்பது போல தான் இருக்கிறது. இது (படிக்கும்) மக்களையும் ஏமாற்றுவது போல தான் ஆகிறது !!!

Post a Comment

Please share your thoughts, if you like this post !