Sunday, October 19, 2008

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமா தான் !

வல்லிம்மாவின் அழைப்பில், நான் தொடரும் சினிமா ...

ஒன்றா ... இரண்டா கேள்விகள் ... எல்லாம் (பதில்) சொல்லவே ... ஒரு நாள் போதுமா ?!!!

பாருங்க, இதுக்கு கூட சினிமாவ இழுத்துக்க வேண்டியதா இருக்கு :) ஒரு நாலு பேரு கூடி பேசினாங்க என்றால், கண்டிப்பா அவங்களால சினிமா பத்தி பேசாமல் இருக்க முடியாது. இதெல்லாம் பெட் கட்டி ஆடின பள்ளி, கல்லூரி காலங்கள் உண்டு. அந்தக் காலம் மட்டும் என்றில்லை, இன்றும் இது நிஜமாய் இருக்கிறது.

சரி, இப்ப ஒரு க்ளிப்பிங் பார்ப்போம் ... (மன்னிக்கணும், அங்க எம்பெடிங் ஆப்சன் இல்லை)

http://www.youtube.com/watch?v=y236HtVx9d8

இந்தக் காட்சியில் வி.கே.ஆரின், "கோவிலக் கட்டினேன், குளத்தை வெட்டினேன், யாருமே வரலை ... ஆனா சினிமா கொட்டகை கட்டினேன், ஊரே திரண்டு வந்திருக்கு" என்று சொல்லி, "இந்த விசயம் என் அறிவுக்கு இது வரை எட்டலேணும், உங்களுக்கு இவ்வளவு சீக்கிரம் எட்டி இருக்கே" என்று நக்கலாய் சொல்லுவதும் அருமை.

இப்ப கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

ம். ஹிம். சுத்தமா நினைவில் இல்லை.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். இது பற்றி விரிவாக ஒரு விமர்சனப் பதிவே போட்டிருக்கிறேன்.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அழகன். ஏற்கனவே பார்த்திருந்தாலும், தங்கஸ் புக் மார்க் செய்திருந்ததை, சமீபத்தில் மீண்டும் பார்த்தோம். மம்முட்டி வசனங்கள், பானுப்ரியாவின் நடனம், கீதாவின் நடிப்பு என எல்லாம் அசத்தல். ஆங்காங்கே கொஞ்சம் வளவளா இருந்தாலும், இன்றும் பார்த்து ரசிக்கும் அளவிற்கு இருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

நிறைய இருக்கிறது. இயக்குனர் இமையம் கே.பி. அவர்களின் அநேக படங்கள். மண் வாசனை புகழ் பாரதிராஜாவின் காட்சி அமைப்புக்கள். மணிரத்னம் அவர்களின் படங்கள். கல்லூரி நாட்களில் வந்த அனைத்து கமல் படங்களும். நம்மவர் படம் பார்த்த போது, அட நமக்கும் இப்படி ஒரு ப்ரொஃபசர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற தாக்கம் இருந்தது.


5. அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

என்னுயிர்த் தோழன். அமைதிப் படை. முதல் படம் வழக்கம் போல பாரதிராஜா படம் போல அல்லாது, கொஞ்சம் வித்தியாசமான படம். கட்சிக்காக பாடுபடும் கடைநிலைத் தொண்டனை அக்கட்சி தலைவனே ஏமாற்றுவது. இது தான் அரசியல் என்று புரிந்தது அப்போது. இரண்டாவது படம், அரசியலை இவ்வளவு நக்கலும், நையாண்டியுமாக ஒருவர் எடுக்க முடியாது என்று கூறலாம். இயக்குனர் மற்றும் மணிவண்ணன் அவர்களின் சரவெடி வசனங்கள், சத்யராஜின் அரசியல் வளர்ச்சி ...


5. ஆ உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

இதயத்தைத் திருடாதே என்று நினைக்கிறேன். ஒளிப்பதிவு பற்றி நண்பர்களுடன் பேச ஆரம்பித்தது அப்போது தான். அப்புறம் டி.டி.எஸ்.


6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பின்னே ! குமுதம், தட்ஸ் தமிழ், மிஸ்டர் மியாவ்.


7. தமிழ் சினிமா இசை?

மெலடி பிடிக்கும். இளையராஜா, ஏ.ஆர்.ஆர், பரத்வாஜ், ஹாரிஸ் ஜெயராஜ் ... அப்புறம் தசாவதாரம் இசையமைப்பாளர்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

அவ்வளவாக இல்லை. லேட்டஸ்டா எதுவும் இல்லை. ஏற்கனவே பார்த்தவற்றுள் அர்னால்ட் படங்கள். அப்புறம் ஸ்பீட்.


9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ம். ஹிம். அதற்கான முயற்சி எடுக்கணும் என்று என்றும் தோன்றியதில்லை.


10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கும். ஆனால் இந்த சென்டிமென்ட்ஸ் குறைவதற்கான வழி இல்லை. எந்த விதத்தில் இருவரை இணைத்து, காதலை இன்னும் வித்தியாசமா சொல்லலாம் என்று இயக்குனர்கள் யோசித்துக் கொண்டிருப்பார்கள்.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

வன்முறை அதிகரித்திருக்கும். இப்ப இருக்கும் அளவிற்கு கூட இருக்காது, மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பில்லாமல் இருப்பார்கள்.


அடுத்து இந்த தொடரை தொடர நான் அழைக்கும் நண்பர்கள்,

சீனா ஐயா
நாகு
கவிநயா
ஜெயகாந்தன்
புதுவண்டு

9 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

சினிமாவுக்கும் எனக்கும் ரொம்பத் தூரம்.சினிமா ஞானம் உண்டு விகடன் குமுதம் உபயத்தில். அவ்வளவே. தியேட்டர் அதிகம் போவதில்லை. KB-யின் B&W படங்கள் பல மிகவும் பிடிக்கும்[உபயம்:டிவிதான்:))]!

cheena (சீனா)said...

அடுத்து நானா ? ஹா ஹா ஹா ஹா ஹா
எனக்கு இதெல்லாம் எழுதத்தெரியாது
இருப்பினும் அருமைச் சதங்காவிற்காக எழுதுகிறேன்.

Anonymoussaid...

சிறுவயதில் சினிமாவே பார்த்ததில்லை - இளமைக்காலத்தில் பார்க்கவே நேரமில்லை. இப்பொழுது நேரம் இருந்தாலும் படங்கள் படங்களாகவெ இல்லை. பழைய படங்களூம் பாடல்களூம் பார்க்க வேண்டும் போல் எண்ணத்தைத் தூண்டுகின்றன.

வல்லிசிம்ஹன்said...

சுருங்கச் சொல்லி விளங்க வைத்துவிட்டீர்களா சதங்கா:)
நம் எல்லோர் நிலையும் இதுதான்.

தமிழ் சினிமா வேணும். ஆனால் குத்துப்பாட்டு வேண்டாம்.
இளமை இருக்கலாம். ஆபாசம்வேண்டாம்.
அமைதிப்படை....இந்தப் படம் எனக்கும் ர்ரொம்பப் பிடிக்கும்..
இரண்டாவது படம், அரசியலை இவ்வளவு நக்கலும், நையாண்டியுமாக ஒருவர் எடுக்க முடியாது என்று கூறலாம். இயக்குனர் மற்றும் மணிவண்ணன் அவர்களின் சரவெடி வசனங்கள், சத்யராஜின் அரசியல் வளர்ச்சி ...//
:)

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//விகடன் குமுதம் உபயத்தில். அவ்வளவே. //

இது போதுமே ! :))

//KB-யின் B&W படங்கள் பல மிகவும் பிடிக்கும்//

KB-ய அடிச்சிக்க முடியுமா ? சின்னத்திரையிலும் பல நாடகங்கள் திரைப்படம் போலவே எடுத்திருப்பார்.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//அடுத்து நானா ? ஹா ஹா ஹா ஹா ஹா //

ஆமா நீங்களே தான். தெரியாது என்று சொன்னாலும், எழுதறேன் என்று சொன்னது குறித்து மிக்க மகிழ்ச்சி.

சதங்கா (Sathanga)said...

செல்விஷங்கர் அம்மா,

//இப்பொழுது நேரம் இருந்தாலும் படங்கள் படங்களாகவெ இல்லை. //

இது உண்மை. எந்தப் படங்களுமே ரொம்ப நாட்கள் பேசப் படுவது இல்லை, பழைய படங்களைப் போல.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

//தமிழ் சினிமா வேணும். ஆனால் குத்துப்பாட்டு வேண்டாம்.
இளமை இருக்கலாம். ஆபாசம்வேண்டாம்.//

அதே தான். எல்லாத் துறையும் போல தான் சினிமாத்துறையும். நாம் வேலே செய்யும் இடத்திலேயே எவ்வளவு அரசியல் பண்றாங்க. அது போல தான் அங்கயும். நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். :))

//அமைதிப்படை....இந்தப் படம் எனக்கும் ர்ரொம்பப் பிடிக்கும்..//

ஹா, ஹா. வீ ஆர் செய்லிங் இன் த சேம் போட் :))

அருண்மொழிவர்மன்said...

மம்முட்டி வசனங்கள், பானுப்ரியாவின் நடனம், கீதாவின் நடிப்பு என எல்லாம் அசத்தல். //

அதிலும் கீதாவும் மம்முட்டியும் இலக்கியம் பற்றி உரையாடுவது, பானுப்ரியாவுடன் வருகின்ற “சங்கீத ஸ்வரஙள்”
பாடல் .... மறக்கவே முடியாத படம்

Post a Comment

Please share your thoughts, if you like this post !