Sunday, October 26, 2008

சுடரின் நடனம் - தீபாவளி வாழ்த்துக்கள்


Photo: lpstnvs.com

சுடரின் நடனம்
தொடரும் தீபங்களில்,

காணும் போதே
களிப்புறும் உள்ளம்.

வானின் இருளில்
வண்ணங்கள் தூவி,

மிளிரும் ஒளியில்
சிதறும் பூக்கள்.

பட்டுத் துணியும்
பரிசுப் பொருளும்,

கிடைத்திட‌ இன்புறும்
சின்னஞ் சிறார்கள்.

என்றும் இனிமையாய்
இவ‌ர்க‌ளைப் போலே,

இருந்திட வாழ்த்துக்கள்
இத்தீபாவளி நன்நாளில் !

அனைவருக்கும்
இன்பத் தீபாவளி வாழ்த்துக்கள் !!

14 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

கவியின் வரிகளில் களிப்புற்றேன்.
சுடரின் ஒளியில் சுபிட்சம் கண்டேன்.
நன்றி சதங்கா!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

Kavinayasaid...

இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

Anonymoussaid...

தீபாவளி வாழ்த்துக்கள்ங்க!!!

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

தீபங்கள் ஒளிரும் தீபாவளி
பாவங்கள் போக்கும் தீபாவளி
தாபங்கள் நீக்கும் தீபாவளி
தீமையை நன்மை வென்ற தீபாவளி
நலமுடன் வாழ நல்வாழ்த்துகள்

கவிதை நன்று - கருத்தும் நன்று

சீனா .... செல்வி ஷங்கர்

தமிழன்-கறுப்பி...said...

தீபாவளி வாழ்த்துக்கள்...

சதங்கா (Sathanga)said...

ராம‌ல‌ஷ்மி மேட‌ம்,

//கவியின் வரிகளில் களிப்புற்றேன்.
சுடரின் ஒளியில் சுபிட்சம் கண்டேன்.//

க‌விதைக்கு க‌விதை பாடி, ர‌சித்துப் பின்னூட்டுவ‌தில் உங்க‌ளுக்கு நிக‌ர் யாரிருக்கா ?!!! :))

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.//

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. கவிதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ?! :(

சதங்கா (Sathanga)said...

சுடர்மணி,

//தீபாவளி வாழ்த்துக்கள்ங்க!!!//

மிக்க நன்றிங்க. 'சுடர்' என்று உங்க பேரிலேயே ஆரம்பிசிருக்கேன் பாருங்க :)) நீங்களும் கவிதை பற்றி ஒன்றும் சொல்லலையே !!!

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

கவிதைக்கு கவிதை பாடி நீங்களும் அசத்திவிட்டீர்கள்.

//கவிதை நன்று - கருத்தும் நன்று//

நன்றி. நன்றி..

சதங்கா (Sathanga)said...

தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழன். உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Anonymoussaid...

இனிய தீபாவளி வாழ்த்துகள்

Anonymoussaid...

தீபாவளி…………

இது தீபங்களின் விழா நாள்…………
தீமைகளின் எரி நாள்……….
நன்மைகளின் திரு நாள்………….
உறவுகளின் ஒரு நாள்………..
சந்தோசத்தின் மழை நாள்……..
இன்பத்தின் சாரல்கள்
பொழியும் பொது நாள்…………
இனிமைகளின் மொட்டுக்கள்
மலரும் நறுமண நாள்…………

இன்று போல் ………..

என்றும்……………

நன்மைகள் சிறக்கட்டும்…………..

வன்மைகள் பெருகட்டும்…………

துயரங்கள் விலகட்டும்……….

நலங்கள் வளரட்டும்………….

இன்பங்கள் பொங்கட்டும்………….

அன்பு நெஞ்சங்கள் யாவருக்கும்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்………….

சதங்கா (Sathanga)said...

நன்றி இனியவள் புனிதா.

உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga)said...

சாய்கணேஷ்,

வருகைக்கும், அற்புதமான வரிகளில், அனைவருக்கும் தெரிவித்த வாழ்த்துக்கும், நன்றிகள் பல.

Post a Comment

Please share your thoughts, if you like this post !