Sunday, October 5, 2008

இந்தியா என் பார்வையில் - 2008 - காணாமல் போகும் தெரு ...


Photo: http://www.leelau.net/chai/india.htm

தெருவோரக் குப்பைகளும்
தேங்கிய மழை நீரும்,

தெருவடைக்கும் வாகனங்கள்
தேர் போல ஊருவதும்,

இருபக்கப் பள்ளங்கள்
எமன் போல அமைவதுவும்,

கோலமிடும் வாசல்கள்
குட்டிக் கடைகள் ஆனதுவும் ...

மேடு பள்ளம் பலவுண்டு
மேட்டுக் குடியும் தானுண்டு,

ராமெ ஆண்டாலும்
ராவணெ ஆண்டாலும்,

எனக்கேன் அக்கவலை
என்கவலையே ஏராளம்,

என்றே மனநிலையில்
இருக்கிறோம் அனைவருமே ...

நாட்டு வளர்ச்சியிலே
நம் பங்கும் ஒன்றுமில்லை,

வீட்டு வளர்ச்சி காண
வளர்க்கிறோம் சுயநலத்தை,

தெருவடைக்கும் நம்செயல்கள்,
வீட்டோடு அடைக்கும் நம்மை,

பின்னாளில் என்றாவது
வெளிக்காற்று வாங்க,

வீதியில் நடக்கலாம் என்றால்கூட,

அன்று ...

வீதி என்பது இல்லாது போகலாம் ...

4 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

//வீட்டு வளர்ச்சி காண
வளர்க்கிறோம் சுயநலத்தை//

எப்படியெல்லாம் என்பதை விலாவாரியாகச் சொல்லி வந்து..

//தெருவடைக்கும் நம்செயல்கள்,
வீட்டோடு அடைக்கும் நம்மை//

என்று எச்சரித்தும் விட்டீர்கள்.

//வீதியில் நடக்கலாம் என்றால்கூட,

அன்று ...

வீதி என்பது இல்லாது போகலாம் ...//

விழித்துக் கொள்வோமா இதை எண்ணியாவது :(?

செல்விஷங்கர்said...

என் செய்வது - இயற்கையைப் பார்க்க வேண்டுமே !
இயற்கையைப் பாதுகாக்க வேண்டுமே என்ற எண்ணம் ஏனோ இந்த அவசர உலகில் மறைந்து கொண்டே வருகிறது. இயற்கை தானே நாகரிகம் என்பது மறந்தே போயிற்று. நம் சுற்றுப்புறட்த்தினைத் தூய்மையாக வைத்தால் சுழலும் பூமி சொர்க்கமாகுமே ! ஏக்கம் தான் நெஞ்சில் விளைகிறது. எப்படி மாற்றுவது ? உண்மை உண்மை .

நாகு (Nagu)said...

//வீதியில் நடக்கலாம் என்றால்கூட,

அன்று ...

வீதி என்பது இல்லாது போகலாம் ...//

என்ன செய்வது. Wall-E படம்தாம் ஞாபகத்துக்கு வருது. நம் வாழ்நாளில் அந்தமாதிரி நடக்காது என்று நினைக்கிறேன் :-(

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம், செல்வி ஷங்கர் அம்மா, நாகு,

தங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

தெருவில் இறங்கி நடக்க கூட முடியவில்லை என்ற ஆதங்கத்தில் எழுதினாலும், இது எங்கே போகிறது என்று எண்ணும் போது, கவலை தான் பதிலாக இருக்கிறது.

Post a Comment

Please share your thoughts, if you like this post !