Wednesday, July 25, 2007

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ - பாரதிதாசன்

'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று தமிழுக்குப் பெயரிட்டு அழகு பார்த்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் உன்னதமான வரிகள். பாடலைப் படிக்கும் போதே சிலிர்ப்பு ஏற்படுகிறதே, யாராவது பாடிக் கேட்டால் எப்படி இருக்கும், அதுவும் காட்சியோடு !

'பெற்றோர் ஆவல்' எனும் தலைப்பின் கீழ் வரும் பாடல் இச்சுட்டியை தட்டி காட்சியைக் காணுங்கள்

மகாகவி பாரதியாரின் மனைவி அவர்கள் மரணப்படுக்கையில் இந்தப் பாடலை விரும்பிக் கேட்டதாக குமரன் அவர்கள் பதிவில் படித்தேன். இப்பாடலுக்கு அருமையான விளக்கங்களையும், பின்னூட்டம் இட்டவர்களின் தகவல்களையும் இங்கே காணலாம்

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...

இப்பாடலைப் பற்றி வலையின் படித்த ஒரு செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Thunbam Nergayil is in Or Iravu where the MD is Sudarsanam. But this song was much earliersung by MM Dandapani Desigar in Kacherikal. AVM approached him to use the same tune in Or Iravu.

11 மறுமொழி(கள்):

குமரன் (Kumaran)said...

திரைப்படத்திலிருந்து இந்த பாடலைக் கேட்டு/பார்த்து மகிழ்ந்தேன் சதங்கா. மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

வாங்க குமரன்,

இந்தப் பாட்ட எந்த அளவிற்கு நம் வலைபதிவர்கள் போட்டிருக்கிறார்கள் என்று தேடும் போது, முதல் பக்கத்திலேயே உங்கள் இடுகை கிடைத்துவிட்டது. அதில் உள்ள சுட்டிகளில் பாடலைக் கேட்கமுடியவில்லையே ?

திரைப்படப் பாடலைத் தேடி, இணைத்தேன் இங்கு. பாவேந்தரின் வரிகள் அற்புதம், அதற்கு உங்கள் இடுகையில் கிடைத்த வரவேற்பே சாட்சி.

Anonymoussaid...

very melodous tamizh song; This was sung in some other raga initially;but it was Dandapani Desikar who thought that the appropritae ragam was desh. This song indeed made the desh ragam very popular. The song is captured beautifully, in instruments like violin or nathasawam too.

சதங்கா (Sathanga)said...

அனானி,

வருகைக்கு நன்றி.

//The song is captured beautifully, in instruments like violin or nathasawam too.//

குன்னக்குடியின் வயலின் வாசிப்பில் மேலும் மெருகுரும் பாடல்.

ஜீவிsaid...

இந்தத் 'துன்பம் நேர்கை'யில் பாட்டை, புதுவைக் கடற்கரையை சுற்றிப் போட்டிருந்த சிமிண்ட் தடுப்புச்
சுவர்மேல் சாய்ந்தபடி, புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன் அவர்களேப் பாடி நான்
கேட்டிருக்கிறேன். கூட நிறைய பாரதி
பாடல்களையும் அவர் பாடுவார்.
என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்
நினைவுகள் அவை.

சதங்கா (Sathanga)said...

ஜீவி,

//இந்தத் 'துன்பம் நேர்கை'யில் பாட்டை, புதுவைக் கடற்கரையை சுற்றிப் போட்டிருந்த சிமிண்ட் தடுப்புச்
சுவர்மேல் சாய்ந்தபடி, புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன் அவர்களேப் பாடி நான்
கேட்டிருக்கிறேன். கூட நிறைய பாரதி
பாடல்களையும் அவர் பாடுவார்.
என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும்
நினைவுகள் அவை.//

புல்லரித்து போகிறேன் உங்கள் வரிகளைப் படித்து. புதுவை கடற்கறைக்கு சில முறை சென்றிருக்கிறேன். அதையும், நீங்கள் சொல்லியதையும் நினைத்து கற்பனை செய்து பார்க்கையில், ஆஹா எவ்வளவு அற்புதம்.

பாவேந்தரே பாடி கேட்டிருக்கீங்களா ... கொடுத்து வச்சவர் நீங்கனு சொல்லனும்.

பாரதிதாசன் அவர்களோடு பழகிய உங்களின் அறிமுகம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.

ஜீவிsaid...

பெருமிதத்துடன், தலைகுனிந்து, நன்றி, நண்பரே!

Anonymoussaid...

Thiru Sadanga

Bharathidasan padalai kettu mikka maghichil moozhgi ezhunthal ,miga miga arithga avarudan pazhgi padi magizhntha Thiru GeeVee pathivum- yazhin isai+tamizh pattu+ adal moondrum oru sera kidaithathu.

inbathail .....nandri..
sundaram

சதங்கா (Sathanga)said...

வருகைக்கு நன்றி சுந்தரம் அவர்களே.

//miga miga arithga avarudan pazhgi padi magizhntha Thiru GeeVee pathivum- yazhin isai+tamizh pattu+ adal moondrum oru sera kidaithathu.

inbathail .....nandri..//

எனக்கும் இதே மனநிலை தான். இடுகையிடும் போது இருந்ததைவிட இப்போது பல்மடங்கு சந்தோசம். எல்லோரும் பாவேந்தரின் அற்புத வரிகளினால் கவரப்பட்டிருப்பதை நினைத்து.

குமரன் (Kumaran)said...

சதங்கா. இந்தப் பாடலை இப்போது 'கேட்டதில் பிடித்தது' பதிவிலிருந்து 'கூடல்' பதிவிற்கு மாற்றிவிட்டேன். இந்த இடுகையில் இருக்கும் சுட்டியைச் சரிசெய்துவிடுங்கள். நன்றிகள்.

http://koodal1.blogspot.com/2008/04/blog-post_03.html

சதங்கா (Sathanga)said...

குமரன்,

சுட்டி சரி செய்து விட்டேன். தகவல்களுக்கு நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !