Friday, July 20, 2007

பச்சை மாமலை போல் மேனி - உன்னிகிருஷ்ணன்

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், மனதை உருக வைக்கும் பாசுரம்.

மெல்லிய இசையில், கசிந்து வழிகிறது உன்னிகிருஷ்ணனின் குரல். கண்ணை மூடி கண்ணனை நினைக்க உள்ளத்துள் ஒலித்துக் கொண்டேயிருக்கும் வரிகள் :

ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி


கண்ணனைக் கண்டும், பாடலையும் கேட்டும், வாசித்தும் மகிழுங்கள்.



Thanks to myalias for the youtube

பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்

ஊரிலேன் காணியில்லை
உறவு மற்றொருவர் இல்லை
பாரில்நின் பாதமூலம்
பற்றினேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே
கண்ணனே கதருகின்றேன்
ஆருளர்களை கணமா
அரங்கமா நகருளானேன்

பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்

10 மறுமொழி(கள்):

பாலராஜன்கீதாsaid...

திருமால் பெருமை திரைப்படத்தில் இந்தப் பாடலை TMS பாடி சிவாஜிகணேசன் நடித்திருப்பார். அதைக் கேட்டு / பார்த்து மகிழ்ந்திருக்கிறீர்களா ?

குமரன் (Kumaran)said...

சதங்கா. இந்தப் பாசுரங்களைப் பலமுறை பாடியிருக்கிறேன்; உன்னிகிருஷ்ணன் பாடிக் கேட்டிருக்கிறேன். இன்று தான் அந்தப் பாசுரங்களுடன் திருவரங்க தரிசனமும் கிடைத்தது. மிக்க நன்றி.

ஒரு வேண்டுகோள். இப்படி பழைய தமிழ் பாடல்களை இடும் போது அவை எவ்வளவு எளிதாக இருந்தாலும் பொருளுடன் இட்டீர்களென்றால் புதிதாக இலக்கியப் பாடல்கள் படிக்கும் அன்பர்களுக்கு வசதியாக இருக்கும். தமிழின் மேல் காதலையும் ஏற்படுத்தும். செய்வீர்களா?

சதங்கா (Sathanga)said...

பாலராஜன்கீதா,

வருகைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட TMS அவர்களின் பாடலை நான் கேட்டதில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும், இந்தியாவுக்கு விடுமுறைக்குச் சென்றபோது, சென்னை மாம்பலத்தில் (அப்ப CD எல்லாம் வாங்குவது ரொம்ப குறைவு), ஒரு Cassette கடைக்குச் சென்று, நல்ல melody classical பாட்டா குடுங்க என்று கேட்ட போது தான் உன்னியின் இந்தப் பாடலை கடைக்காரர் போட்டுக் காண்பித்தார். கடையிலேயே மெய்மறந்து போனேன்.

TMS பாடியிருந்தாலும் அருமையாகத் தான் இருக்கும். ஆனால் இன்று வரை கேட்டதில்லை. சுட்டி இருந்தால் தெரிவியுங்கள். நன்றி.

பாலராஜன்கீதாsaid...

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=29580 அல்லது

http://ww.smashits.com/music/tamil/songs/3494/thirumal-perumai.html

சதங்கா (Sathanga)said...

குமரன்,

உங்கள் வேண்டுகோள் நியாமானதே. இப்ப உள்ள சூழ்நிலையில், எல்லாவற்றையும் படிக்கிற நிலையில் நிறைய பேர் இருப்பதில்லை. அதனாலேயே விளக்கம் எழுதனுமா என்ற எண்ணம் இருக்கிறது.

என்னை சிந்திக்க வைத்த உங்கள் வரிகள்.

//புதிதாக இலக்கியப் பாடல்கள் படிக்கும் அன்பர்களுக்கு வசதியாக இருக்கும். தமிழின் மேல் காதலையும் ஏற்படுத்தும். செய்வீர்களா?//

அடுத்து வரும் பாடல்களில், ரொம்ப இல்லை என்றாலும், சிறிதாவது விளக்கம் அளிக்கிறேன்.

நன்றி.

சதங்கா (Sathanga)said...

பாலராஜன்கீதா,

அதிவேகமான உங்கள் பதில் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல.

முதலின் உங்க சுட்டியின் URL முழுதும் இருந்தது, comment publish பண்ணிட்டு பார்த்தால், அதில் கடைசில் பாதி URL மறைந்துவிட்டது.

மன்னிக்கவும். சுட்டியை மீண்டும் இடுகிறீர்களா ?

சதங்கா (Sathanga)said...

பாலராஜன்கீதா,

மன்னிக்கவும். இந்த இடுகையை வாசிக்கும் போது, கீழே காண்பிக்கும் பின்னூட்டங்களில் உங்கள் சுட்டி முழுவதும் காண்பிக்கின்றது. மிக்க நன்றி.

(அதே நேரம், இந்த இடுகையின் 'post comment' பக்கதில் இருந்து பார்க்கும்போது பாதி url மறைந்து விடுகிறது.)

jeevagvsaid...

பாடல்களாக போட்டு கலக்கறீங்க! வாழ்த்துக்கள்!

சதங்கா (Sathanga)said...

ஜீவா,

நன்றி.

சதங்கா (Sathanga)said...

//உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.//

மிக்க நன்றி துளசி அவர்களே

Post a Comment

Please share your thoughts, if you like this post !