திருவிளையாடல் - இன்றொரு நாள் போதுமா ?
திருவிளையாடல் படம் என்றவுடன் நம் யாவர் மனதிலும் சட்டென்று நினைவில் வரும் காட்சி, 'தருமி' நாகேஷ் 'பரமசிவன்' சிவாஜியுடன் மண்டபத்தில் கவிதை பற்றி விவாதிப்பது.
அதே சமயம் அப்படத்தில் பாடல்கள் அனைத்துமே அற்புதம். நம்ம கவியரசர் இயற்றிய இந்தப் பாடலில் தான் எத்தனை அகந்தை, எத்தனை கர்வம், என் பாட்டுக்கு உன்னோட நாடு ஈடாகுமா என்னும் திமிர்.
அட, பாலையாவின் பாத்திரப் படைப்பை தாங்க சொல்றேன். எப்படி கவியரசரால் இத்தனை தத்ரூபமாக, எளிமையாக, பாத்திரத்தின் குணத்தை பாட்டில் எழுத முடிகிறது ?
கவியரசர் தான் அப்படி என்றால், பாடிய பாலமுரளி, அடா அடா, என்ன ஒரு லயிப்பு பாடுவதில். இவர்களுக்கெல்லாம் போட்டியாய் பாலையாவின் முகபாவமும், அவர்தம் சிஷ்யர்களின் ஆமோதிப்பும், என்னவென்று வியப்பது. மொத்தத்தில் ஒரு தர்பாருக்கே உயிரூட்டியிருக்கிறார்கள். பாடலைக் கண்டு, கேட்டு, வாசித்து மகிழுங்கள்.
Thanks to senthil5000 for the youtube
ஒரு நாள் போதுமா ? இன்றொரு நாள் போதுமா ?
நான் பாட இன்றொரு நாள் போதுமா ?
நாதமா ? கீதமா ? அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?
புதுநாதமா ? சங்கீதமா ? அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?
ராகமா ? சுகராகமா ? கானமா ? தேவகானமா ?
ராகமா சுகராகமா கானமா தேவகானமா
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா ?
என் கலைக்கிந்த திருநாடு சமமாகுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா ?
குழலென்றும் ...
யாழென்றும் ...
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி ... தோடீ ....
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ ?
தர்பாரில் எவரும் உண்டோ ?
தர்பாரில் ...
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ ?
கலையாத மோகனச் சுவை நானன்றோ
மோகனச் சுவை நானன்றோ
மோகனம் ...
கலையாத மோகனச் சுவை நானன்றோ
கானடா ...
என் பாட்டுத் தேனடா
இசை தெய்வம், நானடா ...
2 மறுமொழி(கள்):
எனக்கு மிகப் பிடித்த பாலமுரளி பாடல்; அருமையான வரிகள்.
கடைசியில் "கானடா";;;;;என்று ராகப் பெயர் வருமா? காணடா..;என வருமா? எனப்பார்க்கவும்;
அந்த,,,,கானடாவின் பின்வரும்;;;ராகாஆலாபனை....கானடா;;;ராகத்துக் குரியது.
யோகன்,
//"கானடா";;;;;என்று ராகப் பெயர் வருமா? காணடா..;என வருமா? எனப்பார்க்கவும்;
அந்த,,,,கானடாவின் பின்வரும்;;;ராகாஆலாபனை....கானடா;;;ராகத்துக் குரியது.//
பாடலைக் கேட்டு கேட்டு தட்டச்சிடும்போது எனக்கும் இந்தச் சந்தேகம் வந்தது.
கானடா
தேனடா
என்று தான் வரும் என்று எண்ணினேன். நமக்கும் சங்கீதத்துக்கும் ரொம்ப தூரம். அதனால 'கானடா' தோன்றவில்லை மனதில். 'காணடா' தான் சரியாக இருக்கும் என்று பதிந்துவிட்டேன்.
இதோ உங்களின் அர்த்தமுள்ள கருத்துப் படி மாற்றிவிட்டேன். :)
தவறைச் சுட்டிக்காடியதற்கு மிக்க நன்றி.
Post a Comment
Please share your thoughts, if you like this post !