Sunday, August 2, 2009

வாங்க, காஃபி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் !


Photo Credit: wikimedia.org


உலகத்தில் எத்தனையோ பானங்கள் இன்றைய தேதியில் இருந்தாலும், புத்துணர்ச்சி என்ற விகிதத்தில் 'காஃபி' தான் முதலிடம் வகிக்கிறது.

அலுவ‌ல‌க‌த்தில், திண்ணைப் பேச்சில், வ‌ய‌ல்காட்டில், போர‌டிக்கும் மீட்டிங்கில், பாட‌ல் காட்சிக‌ளில் சினிமா கொட்ட‌கைக‌ளில், நான்கு ந‌ண்ப‌ர்க‌ள் சந்திக்கையில் ... இப்படி ஏதாவது ஒரு நிகழ்வில், 'வாங்க காஃபி சாப்பிட்டு வரலாம்' என்ற‌வுட‌னே ப‌ல‌ருக்கும் உற்சாகம் ஊற்றெடுக்கும். இது உல‌க‌றிந்த‌ உண்மை !

'காஃபி' என்ற‌ பெய‌ர் எப்ப‌டி வ‌ந்த‌து ? எங்கு தோன்றிய‌து ? உல‌கிற்கு எங்ங‌ன‌ம் ம‌ன‌ம் ப‌ர‌ப்பிய‌து ? காஃபி அதிக‌ம் விளையும் நாடு எது ? இத‌ற்கு ம‌ருத்துவ‌ குணங்கள் இருக்கிற‌தா ? காஃபியில் என்ன‌லாம் செய்ய‌லாம் ?

இப்படிப் பல கேள்விக‌ள் ந‌ம் ம‌ன‌தில் எப்போதாவ‌து தோன்றியிருக்க‌லாம். ப‌ல‌ருக்கு விடையும் தெரிந்திருக்க‌லாம். சில‌ர், "அட போய்யா சும்மா போரடிக்காத‌. நான் போய் ஒரு காஃபி சாப்பிட்டு வ‌ர்றேன்" என்று எழுந்தும் செல்ல‌லாம்.

உல‌க‌ அள‌வில், காலையில் எழுந்தவுடன் அநேகம் பேர் அருந்தும் பானம் 'காஃபி' என்று பல ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன‌. நம்மூர்ல பெட் காஃபி என்கிற பெயரில் பல்லுத்தேய்க்காமல் (உவ்வே) கூட காஃபி உறிஞ்சுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ஒன்பதாம் நூற்றாண்டுகளில், முதன்முதலில் எத்தியோப்பாவில், கஃப்ஃபா என்ற இடத்தில் தோன்றியது காஃபி என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. அரேபியாவில் ப‌திமூன்றாம் நூற்றாண்டில் ப‌ர‌வி, இந்தியாவில் ப‌தினாறாம் நூற்றாண்டுகளில் கடத்திவரப்படுகிறது காஃபி. இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற 'பாபா' என்கிற ஞானி, ஏழு காஃபிக் கொட்ட‌களைத் த‌ன் ப‌ய‌ண‌த்தில் ப‌துக்கி வந்து, இந்தியாவில் சிக்மகளூரில் ப‌யிரிட்டிருக்கிறார். இன்றும் இங்கு தரமான காஃபி விதைகள் உற்பத்தியாகின்றன. உல‌கின் இன்றைய‌ ப‌ல‌ காஃபி ம‌ர‌ங்க‌ளுக்கும் இவை தான் மூதாதைய‌ர்க‌ள்.

காஃபி உற்ப‌த்தியில் ப்ர‌ஸீல் நாடு முத‌லிட‌ம் வ‌கிக்கிற‌து. 2007 ஆய்வின் ப‌டி, 17 மில்லிய‌ன் ட‌ன் காஃபி உற்ப‌த்தி செய்திருக்கிற‌து பிர‌ஸீல். காஃபி தோன்றிய‌தாக‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ எத்தியோப்பியா 1 மில்லிய‌ன் ட‌ன் உற்ப‌த்தியில் ஐந்தாவ‌து இட‌த்திலும், இந்தியா 9 ல‌ட்ச‌ம் ட‌ன் உற்ப‌த்தியில் ஏழாவ‌து இட‌த்திலும் இருப்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

காஃபிக் காய்க‌ளை மேய்ந்த‌ ஆடுக‌ள், புத்துண‌ர்ச்சியுட‌ன் ந‌ட‌ன‌மிட்டு ப‌ல‌ம் கொண்ட‌வைக‌ளாக‌ திக‌ழ‌, காஃபியில் 'க‌ஃபெய்ன்' இருப்ப‌தை முத‌ன்முத‌லில் ஆட்டிடைய‌ர்க‌ள் தான் க‌ண்டுகொண்ட‌ன‌ர் என்கிறார்க‌ள் ஆராய்ச்சியாள‌ர்க‌ள். 'க‌ஃபெய்ன்' அள‌வைப் பொருத்தே ம‌ருத்துவ‌ குண‌ம் ம‌திப்பிட‌ப்ப‌டுகிற‌து.

காஃபிக்கு ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள் இருக்கிற‌தென்றும், அதெல்லாம் இல்லை அத‌னால் தொல்லை தான் என்றும் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ர் குடித்துக் கொண்டு, ம‌ன்னிக்க‌ ... அடித்துக் கொண்டு இருக்கின்ற‌ன‌ர்.

இதன் நிறை/குறைகளை கலக்கி வடித்து, 'அள‌வோடு அருந்தினால் வளமான வாழ்வே' என்று பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹார்வ‌ர்ட் ப‌ள்ளி இருப‌த்தி இர‌ண்டாண்டுக‌ள் 'காஃபி' ப‌ற்றி ஆராய்ச்சி செய்கின்ற‌து என‌ விக்கிபீடியா‌ மூல‌ம் அறிய‌லாம்.

ப‌ல‌ நோய்க‌ளின் வீரிய‌த்தைக் குறைக்கும் த‌ன்மை காஃபிக்கு இருக்கிற‌தென‌வும், அவ‌ற்றில் 'இத‌ய‌ நோய்' குறைய‌ வாய்ப்பு இருக்கிற‌து என்ப‌தும் (அளவான‌) காஃபி பிரிய‌ர்க‌ளுக்கு ஒரு ம‌கிழ்வான‌ செய்தியே !

உங்களுக்கு காஃபி கலக்கத் தெரியுமா ? அல்லது கலக்க ஆர்வம் இருக்கிறதா ? அல்லது காஃபி நன்றாக கலக்குவீங்களா ?! கீழே வீடியோவில், இவர் எப்படி 'கலக்கறாரு'னு பாருங்க. 'செம கலக்கல்' அப்படினு நிச்சயம் நீங்க சொல்லுவீங்க. பேப்பர், துணி, தகரம், கல்லுனு பல ஸ்ட்ராங்கான சர்ஃபேஸ்ல கலைகளைச் செய்யவே கடினமாக இருக்கும்போது, எந்த வித பிடிமானமும் இல்லாமால், கலக்கலாய் காஃபியில் கலைகளைச் செய்யும் இவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்கள். இன்ஸ்ட‌ன்ட் காஃபி போல, இன்ஸ்ட‌ன்ட் (காஃபி) க‌லை.

16 மறுமொழி(கள்):

சரவணகுமரன்said...

சுவாரஸ்ய தகவல்கள்... நன்றி

Venkatesh Kumaravelsaid...

நல்லா இருந்துச்சுங்க... நானும் காஃபி பிரியன் தான்!

cheena (சீனா)said...

தகவல்களுக்கு நன்றி சதங்கா

நாகு (Nagu)said...

எனக்கு பிடித்ததெல்லாம் காபி குடிப்பதல்ல... காபி அடிப்பதுதான் :-)

எனக்குத் தெரிந்து விடிகாலையில் வெறும் வயற்றில் காபி குடிப்பது தென்னிந்தியர்கள் மட்டும்தான். அது நல்லதல்ல என்று சொன்னால் விட்டுவிடவா போகிறீர்கள்? :-)

காலங்காத்தால காபி கிடைக்காவிட்டால் அமைதியே வடிவான நம்மூர் மக்களுக்கு கொலைவெறி வந்துவிடும். :-)

அதுசரி - காஃபிக்கும் காதருக்கும் என்ன சம்பந்தம்? (இஸ்லாம் என்று பதிவு வகை இட்டிருக்கிறீர்கள்?)

நட்புடன் ஜமால்said...

குடிப்பதுமில்லை

அடிப்பதுமில்லை

--------------------

அந்த காஃபி ஆர்ட் ரொம்ப அருமைங்க.

சதங்கா (Sathanga)said...

சரவணகுமரன் said...

//சுவாரஸ்ய தகவல்கள்... நன்றி//

வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

வெங்கிராஜா said...

//நல்லா இருந்துச்சுங்க... நானும் காஃபி பிரியன் தான்!//

காஃபி பிரியர் வந்து நல்லா இருந்துச்சு எனும்போது ஒரு புத்துணர்ச்சி வருகிறது. மிக்க நன்றி.

சகாதேவன்said...

பேஷ், பேஷ், ரொம்ப நல்லாருக்கு

Nathanjagksaid...

நானொரு காஃபி பிரியன்! //"வாங்க, காஃபி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்!"// டிரை பண்ணிபாத்தேன் - முடியலியே???

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா)said...

//தகவல்களுக்கு நன்றி சதங்கா//

வாசித்து மறுமொழி இட்டதற்கு நன்றி ஐயா.

சதங்கா (Sathanga)said...

நாகு (Nagu) said...

//எனக்கு பிடித்ததெல்லாம் காபி குடிப்பதல்ல... காபி அடிப்பதுதான் :-)//

எனக்குத் தெரியுமே. இப்ப ஊருக்கே :)))

//எனக்குத் தெரிந்து விடிகாலையில் வெறும் வயற்றில் காபி குடிப்பது தென்னிந்தியர்கள் மட்டும்தான். அது நல்லதல்ல என்று சொன்னால் விட்டுவிடவா போகிறீர்கள்? :-)//

தப்பு தேன்.

//காலங்காத்தால காபி கிடைக்காவிட்டால் அமைதியே வடிவான நம்மூர் மக்களுக்கு கொலைவெறி வந்துவிடும். :-)//

காலையில யாரையும் பாக்க போறதுனா, காபி குடிச்சிட்டீங்களானு பார்த்துக்கணும் போல :)))

//அதுசரி - காஃபிக்கும் காதருக்கும் என்ன சம்பந்தம்? (இஸ்லாம் என்று பதிவு வகை இட்டிருக்கிறீர்கள்?)//

இஸ்லாமியர்களின் புனித பானமாக (ஆலககாலுக்கு மாற்று), வழிபாடுகளில் காஃபியை பயன்படுத்தியிருக்கின்றனர். மற்ற நாடுகளிலும் பரவியது பின்னரே. காஃபி இந்தியாவிற்கு வரும்வரை மோனாப்பலியாக இஸ்லாமியர்களிடம் தான் இருந்திருக்கிறது.

சதங்கா (Sathanga)said...

நட்புடன் ஜமால்said...

//குடிப்பதுமில்லை

அடிப்பதுமில்லை//

ரெண்டுமே நல்ல பழக்கம் தேன் :)))

//
அந்த காஃபி ஆர்ட் ரொம்ப அருமைங்க.
//

அதன் படைப்பாளிக்கு இந்த பாராட்டு போய் சேரட்டும் !!!

ராமலக்ஷ்மிsaid...

நல்ல தகவல்கள். நன்றி சதங்கா.

//இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற 'பாபா' என்கிற ஞானி, ஏழு காஃபிக் கொட்ட‌களைத் த‌ன் ப‌ய‌ண‌த்தில் ப‌துக்கி வந்து, இந்தியாவில் சிக்மகளூரில் ப‌யிரிட்டிருக்கிறார். இன்றும் இங்கு தரமான காஃபி விதைகள் உற்பத்தியாகின்றன.//

ஆமாம், சிக்மகளூர் சென்றிருந்த போது காஃபி எஸ்டேட் டூர் சென்றிருந்தோம். அருமையாய் விளக்கியபடி அழகு கொஞ்சும் மலைப் பகுதியைச் சுற்றிக் காண்பித்தார்கள்.

சதங்கா (Sathanga)said...

சகாதேவன்said...

//பேஷ், பேஷ், ரொம்ப நல்லாருக்கு//

ஆஹா, இந்த வசனத்தை மறக்க முடியுமா ? :)) நினைவு கூர்ந்தமைக்கு நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

ஜெகநாதன் said...

//நானொரு காஃபி பிரியன்! //"வாங்க, காஃபி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்!"// டிரை பண்ணிபாத்தேன் - முடியலியே???//

இன்னோரு கப் காஃபி எடுத்துகிட்டு மீண்டும் பதிவ படிச்சுப் பாருங்க :)))

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//நல்ல தகவல்கள். நன்றி சதங்கா.
//

மிக்க நன்றிக்கா.

//ஆமாம், சிக்மகளூர் சென்றிருந்த போது காஃபி எஸ்டேட் டூர் சென்றிருந்தோம். அருமையாய் விளக்கியபடி அழகு கொஞ்சும் மலைப் பகுதியைச் சுற்றிக் காண்பித்தார்கள்.//

மற்றவர்களுக்கும் பயன் தரும் லைவ்லியான கமெண்ட்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !