Tuesday, June 30, 2009

கருப்புச் சாலையில் வெண்நிறப் புரவி

சடுகுடு ஆடி
சளசளத்து ஓடி,
பள்ளமேடு பாரா
பயணிக்கும் ஆறே !

கண்ணெட்டும் தூரம்
விண்முட்டி நிற்க,
நீர்த்திவலை ஓடி
நீந்திவரும் ஆறே !

சிலந்தி வலைகளும்
சிற்சில பறவைகளும்,
சாய்ந்த மரத்தண்டுகளும்
கடந்துவரும் ஆறே !

பாடித் திரிந்து
ஓடிக் களைத்து,
தாவிக் குதிக்க(வும்)
தயாரான ஆறே !

த‌டுத்து நிறுத்தி
அடக்கி வைக்க‌,
துளியும் த‌ய‌க்க‌ம்
எம‌‌க்கு இல்லை !!!

சோவென்று இறைத்து
சருக்கியது ஆறு ...
பட்டொளி வீசிப்
பாய்ந்தது அருவி !

பொங்கும் நுரைதனில்
வெண்முகில் குருதி,
கரும்பாறையில் மோதி
கனைத்தது அருவி !

ஈரத்தில் சிலிர்க்கும்
நீள்வெண் சுருளி,
காற்றில் மிதக்கும்
வெண்புகை அருவி !

கருப்புச் சாலை(யில்)
வெண்நிறப் புரவி,
கண்களைக் கவரும்
நயாகரா அருவி !

*****

க‌விதை பிடித்ததா உங்க‌ளுக்கு ?! அப்ப, இந்தக் காட்சியும் ரொம்ப‌ப் பிடிக்கும். கொட்டும் அழகில், அருவியைக் கண்டு மகிழுங்க‌ள். அந்த‌ ச‌ந்தோஷ‌த்தோடு உங்க‌ள் க‌ருத்தையும் ப‌திந்து செல்லுங்க‌ள்.

14 மறுமொழி(கள்):

உயிரோடைsaid...

//பொங்கும் நுரைதனில்
வெண்முகில் குருதி,//

//காற்றில் மிதக்கும்
வெண்புகை அருவி ! //


//கருப்புச் சாலை(யில்)
வெண்நிறப் புரவி //

அழகான சிந்தனை.

வாழ்த்துகள் சதங்கா

ராமலக்ஷ்மிsaid...

கவிதை அழகு. காட்சிக்கு வைத்த சலசலக்கும் அருவியைப் போலவே குதூகலிக்கிறது கவிதையின் வரிகள்!

தமிழ்said...

அருமை

வல்லிசிம்ஹன்said...

MMMMM.Niagara!!!!
vaazththukaL sathanga.

cheena (சீனா)said...

கொட்டும் அருவி - பொங்கும் மாக்கடலே ! அது என்ன ? காற்றும் ஒளியும் புகாத வனமதான் கண்டிருக்கிறோம் - இதுவோ கடற்பெருக்காய் அல்லவா கொட்டுகிறது - குமுறும் நீரோசை குலை நடுங்க வைக்கி்றதே ! வெள்ளை அருவியும் வெண்பரப்பு கடல் நீராய் நெஞ்சம் கொள்கிறதே ! இயற்கை இயற்கை தானே !!

- செல்வி ஷங்கர் - சீனா

Kavinayasaid...

//கருப்புச் சாலை(யில்)
வெண்நிறப் புரவி//

அழகா இருக்கு.

//க‌விதை பிடித்ததா உங்க‌ளுக்கு ?! அப்ப, இந்தக் காட்சியும் ரொம்ப‌ப் பிடிக்கும்.//

கவிதை பிடிக்கலைன்னாலும் எனக்கு அருவி பிடிக்குமே! :)

சதங்கா (Sathanga)said...

உயிரோடை said...
//
அழகான சிந்தனை.

வாழ்த்துகள் சதங்கா
//

ரசித்துப் பாராட்டிற்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//கவிதை அழகு. காட்சிக்கு வைத்த சலசலக்கும் அருவியைப் போலவே குதூகலிக்கிறது கவிதையின் வரிகள்!
//

மகிழ்கிறது மனம். ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர் said...

//அருமை//

மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

வல்லிசிம்ஹன்said...

//MMMMM.Niagara!!!!
vaazththukaL sathanga.
//

ஆஹா ம்ம்ம்ம் தான். வாழ்த்துக்கு நன்றிம்மா !

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

//கொட்டும் அருவி - பொங்கும் மாக்கடலே ! அது என்ன ? காற்றும் ஒளியும் புகாத வனமதான் கண்டிருக்கிறோம் - இதுவோ கடற்பெருக்காய் அல்லவா கொட்டுகிறது - குமுறும் நீரோசை குலை நடுங்க வைக்கி்றதே ! வெள்ளை அருவியும் வெண்பரப்பு கடல் நீராய் நெஞ்சம் கொள்கிறதே ! இயற்கை இயற்கை தானே !!

- செல்வி ஷங்கர் - சீனா
//

ஆஹா, ஆழ்ந்த கருவைச் சுமக்கும் வரிகளில் பின்னூட்டியதற்கு நன்றிகள் பல !!!

துளசி கோபால்said...

ஹைய்யோ!!!!!

அருவி கொள்ளை அழகு.

இன்னும் பார்க்கலை(-:

அடுத்தவருசம் அநேகமா.....

சதங்கா (Sathanga)said...

கவிநயா said...

////கருப்புச் சாலை(யில்)
வெண்நிறப் புரவி//

அழகா இருக்கு.//

மிக்க நன்றிங்க.

////க‌விதை பிடித்ததா உங்க‌ளுக்கு ?! அப்ப, இந்தக் காட்சியும் ரொம்ப‌ப் பிடிக்கும்.//

கவிதை பிடிக்கலைன்னாலும் எனக்கு அருவி பிடிக்குமே! :)
//

கவிதை பிடிக்கலேனு சூசகமா சொல்லிட்டீங்களேனு நினைக்கலை, கவிதையும் அருவியும் பிடித்தது குறித்து மகிழ்ச்சி.

சதங்கா (Sathanga)said...

துளசி கோபால் said...

//ஹைய்யோ!!!!!

அருவி கொள்ளை அழகு.//

ஆமா, இதே துள்ளல் தான் எங்களிடமும் நயாகராவை முதன்முதலில் பார்க்கையில்.

//இன்னும் பார்க்கலை(-:

அடுத்தவருசம் அநேகமா.....//

கண்டிப்பா வாங்க. ப்ளான் பண்றதெல்லாம் உங்களுக்கு சொல்லியா தெரியணும். நம்ம ஊருக்கு போயிட்டு வந்து, பதிவு பதிவா போட்டு பட்டையக் கெளப்புறீங்களே :)))) நயாகரா வருகையில் அப்படியே எங்க வீட்டுக்கும் வாங்க.

Post a Comment

Please share your thoughts, if you like this post !