PIT - மார்ச் 08 - புகைப்படப் போட்டி - பிம்பம்
இந்த அருமையான தலைப்பிற்கு எங்க ஊர்ல இல்லாமல் போய்ட்டனே என்று வருத்தமாக இருக்கிறது. குளத்தையும், கண்மாயையும், வயலையும் .... சரி விடுங்க.
இங்க கட்டிடங்களத் தான் எடுக்க முடியுது. ஏதாவது ஏரி குளம் என்று போனாலும் ஒரு செயற்கை தனம் தெரிகிறது. அதனால எங்க அப்பார்ட்மென்ட் தான் இந்த சப்ஜெக்ட்டுக்கு சரியாப் பட்டுது.
நம்ம வாகனத்தில் விழும் இந்த பிம்பங்கள் பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஒரு நாளும் தோன்றியதில்லை. படம் எடுக்கலாம் என்று தோன்ற வைத்த PIT குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்.
இரண்டு நாள் முன்னர், காலையில் எழுந்து கண் விழித்துப் பார்த்தால், வெளியே எங்கும் அப்படி ஒரு பனி. ரோஜா படத்தில் "ஒரு வெள்ளை மழை" காட்சி போல். அதில் எடுத்த ஒரு புகைப்படம் போட்டிக்கான முதல் படம்.
படம் 1: நாம் எல்லாம் கண்ணாடி பார்த்து அரிதாரம் பூசுவோம். இங்கே கண்ணாடியே அரிதாரப் பூச்சில் பளபளக்க, அதில் தன்னைப் பார்க்கும் அபார்ட்மென்ட்.
படம் 2: அபார்ட்மென்ட் புகைப்படம் எடுக்கப் போறேன் என்றவுடன், அதற்கு வந்த வெட்கத்தில் காருக்குள்ள போய் பதுங்கிக் கொண்டது :)
படங்களை க்ளிக்கிப் பெரிதாய்ப் பாருங்க என்று உங்களுச் சொல்லவும் வேண்டுமா என்ன ?!! :)
16 மறுமொழி(கள்):
நல்லா இருக்குதுங்க..
//படங்களை க்ளிக்கிப் பெரிதாய்ப் பாருங்க என்று உங்களுச் சொல்லவும் வேண்டுமா என்ன ?!! :)//
வேண்டவே வேண்டாம்.. அதான் வீக் என்ட் பதிவு போடறவங்கல்லாம்தான் வாரா வாரம் சொல்லிக்கிட்டே இருக்காங்களே :-)
இவ்வளவு பெரிய blindspot மிர்ரரா?
படங்கள் இரண்டுமே சூப்பர்...!
வெற்றிபெற வாழ்த்துக்கள்..!
சேதுக்கரசி,
// நல்லா இருக்குதுங்க.. //
ரொம்ப நன்றிங்க.
-----
ஜீவா,
// இவ்வளவு பெரிய blindspot மிர்ரரா? //
ஒரு சின்ன incident-ல, இந்த மிர்ரர் வாங்கி ஒட்டணும் என்று அவசர ஷாப்பிங்க் செய்து வாங்கியது :)
-----
நிமல்,
// படங்கள் இரண்டுமே சூப்பர்...!
வெற்றிபெற வாழ்த்துக்கள்..!//
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் பல.
காரில் ஒரு கண்ணாடி
அக்கண்ணாடியிலே ஒரு கார்
அக் காரிலே ஒரு கண்ணாடி அக்
கண்ணாடிக்குள் ஒரு வீடு.
அத்வைத தத்துவமே
அடங்கியுள்ளது உங்கள் கலையில்
இதயத்தின் கண்களைத் திறந்திடுங்கள் = அங்கே
இறைவன் இருக்கிறான் பாருங்கள் !!
மனக்கண்களைத் திறந்து வையுங்கள் = அங்கே
மாலவன் இருக்கிறான் பாருங்கள் !
சபாஷ் ! சரியான போட்டி !!
ஒபாமாவா ? கிளின்டனா? என்பது போல்
காரின் கண்ணாடியா ?
குளத்து மண்டபமா ?
சதங்காவா ? சூரியாளா ?
மார்ச் 15ம் தேதியே !
சீக்கிரம் வா.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
ரெண்டு கலக்கல்.
சுப்பு ரத்தினம் ஐயா,
வணக்கம். ஒரு தத்துவத்தை அழகாக கவிதை போல் சொல்லிய உங்க பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி + ஆச்சரியம். நல்ல Camera, நல்ல ஒளி, நல்ல background, ஆங் ... நல்ல கண்ணாடி ! இதில் என் பங்கு படம் எடுத்தது மட்டுமே.
காட்டாறு,
வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
super
vaalthukkal
கார்த்திக்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. ஒரு வரி பின்னூட்டம் போடுங்க என்றால், இப்படி ஒரு ஒரு வார்த்தையா இரண்டு பின்னூட்டத்தில் போட்டு அசத்திட்டீங்க =;)
:))
1st one is nice.
நன்றி ஆதி.
muthal shot super.. naLla details in the shot. Wish you good luck for the contest.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி குட்டிபாலு.
நீங்கள் ஒரு தேர்ந்த புகைப்பட வல்லுநர் என்று உங்கள் படங்களைப் பார்க்கிறபோது தெரிகிறது. உங்களின் பாராட்டுக் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
Post a Comment
Please share your thoughts, if you like this post !