Monday, March 10, 2008

அடி பெண்ணே !

சுவாமி தரிசனங்களில் மனம்
உன்னையே காணுதடி

லேசாய் நீ புன்னகைத்தால்
தேசமே சுழலுதடி

புன்னகைக்க நீ மறுத்தாலோ
பூகம்பமே வெடிக்குதடி

தெத்துப்பல் உன் முகம்
உள்ளத்தில் பதிந்ததடி

உன் கன்னக் குழிகளில்
நின்றே விழுந்தேனடி

இடைவரைக் கூந்தலில்
இறுக்கியே முடிந்தாயடி

பொன் நிறத் தேகத்தில்
என்னையே இழந்தேனடி

விழி வழி உரையாடி
நாளும் ஈர்த்தாயடி

சினம் கொள் நேரத்தில்
சிணுங்கியே கவர்ந்தாயடி.

‍‍‍‍‍-----

முடிவில் ஒருநாள் உன்
திருமணத் தேதியைச் சொன்னாயடி

குடும்பத்து சூழ்நிலை
வேறு வழியில்லை என்றாயடி

முந்தானைத் தாவணியில்
முகம் புதைத்து அழுதாயடி

கலமெனக் காற்றிலாடி
பின் மனம் தெளிந்தேனடி.

------

வீதியில் ஒருநாள்
எதேச்சையாய் உனைச் சந்திக்க‌

யாரந்த ஆண்ட்டி என‌
என் பிள்ளை உனைக் கேட்டான்

உன் பிள்ளை பேர் சொல்லி
அவள் அம்மா என்றேன் நான் !

ஒரே பள்ளி எனத் தெரியும்
ஆனால் இருவர்களும் நண்பர்களாமே !!!

4 மறுமொழி(கள்):

நாகு (Nagu)said...

ஆண்டி என்றால் ஆண்.

என் பிள்ளை உனைக் கேட்டான் யாரந்த ஆண்டி என்று.

ஆண்டிக்கு ஏது பிள்ளை?

அப்படி இருந்தாலும் என் பிள்ளை நான் யார் என்று ஏன் 'உனைக்' கேட்கவேண்டும்.

என்னமோ நடக்குது!

மர்மமா இருக்குது!!


அட ராமா ஆண்ட்ட்ட்டி!

ஏனய்யா இப்படி லொள்ளு பண்ணுகிறீர்?

கோவில்ல பின்னாடி சுத்தனது, தெத்துப்பல்லு, கன்னக்குழி, இடைவரைக் கூந்தல், பொன்னிறத் தேகம். இன்னுமா உங்க ஊட்டுக்காரம்மாவுக்கு தெரியல யாருன்னு? எனக்கு போன் போடச் சொல்லுங்க. நான் சொல்றேன் யாருன்னு :-)


தம்பி ராமகிருஷ்ணா - கூச்சப்படாம 'பொன் நிறத் தேகத்தில் என்னையே இழந்த ' கதையையும் எழுதிக் காட்டவும்!

Jayakanthan - ஜெயகாந்தன்said...

hmm. Before I could comment, Nagu ditto'ed. Oh - ok, business'ku varuvom "யாரந்த ஆண்ட்டி?!"

சதங்கா (Sathanga)said...

//"யாரந்த ஆண்ட்டி?!"//

ஐஸ்வர்யா ராய் என்று சொன்னா கேக்கவா போறீங்க. விடுங்க‌ ஜெய் :)

சதங்கா (Sathanga)said...

//தம்பி ராமகிருஷ்ணா - கூச்சப்படாம 'பொன் நிறத் தேகத்தில் என்னையே இழந்த ' கதையையும் எழுதிக் காட்டவும்!//

அடுத்த‌டுத்து வரும் கவிதைகளில் காணலாம் =;)

ரிச்மண்டில் நீங்கள் ஒருவர் தான் குசும்பர் என்று நினைத்தேன். இன்னோருத்தரும் சத்தம் இல்லாம குசும்பு வேலை பண்றாங்க. நான் சொல்ல மாட்டேன் அது யாருனு :)

Post a Comment

Please share your thoughts, if you like this post !