Wednesday, November 14, 2007

மயில் - குழந்தைகள் கவிதை


Image Credit: Andrew Rader Studios/Biology4Kids.com

அழகுக் கொண்டை மயில்
பளபளக்கும் கண்ணு மயில்

நீளக் கழுத்து மயில்
நீண்ட தோகை மயில்

கொத்தி உண்ணும் மயில்
கத்தி உலாவும் மயில்

தத்தி நடக்கும் மயில்
தாவிப் பறக்கும் மயில் !

-----

நண்பர் ஜீவா வெங்கட்ராமன் அவர்கள் பின்னூட்டத்தில் இட்ட கவிதை. அருமையாய் எழுதியிருக்கிறார்.



நீல நிற மயிலே
நீள தோகை மயிலே

அகவல் ஓசை கேட்க
அசைந்து ஆடி வந்தேன்

தாவி தாவி வந்து
தோகை விரித்து ஆடு

மேகம் கறுத்து வருது
மேனி சிலிர்த்து ஆடு

ஆடும் அழகில் மழையோ?
மழை அழகில் ஆட்டமோ?

மழையில் நனைய வேண்டாம்
மறைய இங்கே வந்திடு.

12 மறுமொழி(கள்):

Jayakanthan - ஜெயகாந்தன்said...

Just got time after long period to read all the posts.!

-J

jeevagvsaid...

நல்லா இருக்கு சதங்கா!
(இப்பவாது பேரைக் கரெக்டா சொன்னேனா!)
நானும் கொஞ்சம் சேர்க்கவா:

நீல நிற மயிலே
நீள தோகை மயிலே

அகவல் ஓசை கேட்க
அசைந்து ஆடி வந்தேன்

தாவி தாவி வந்து
தோகை விரித்து ஆடு

மேகம் கறுத்து வருது
மேனி சிலிர்த்து ஆடுது

ஆடும் அழகில் மழையோ?
மழை அழகில் ஆட்டமோ?

மழையில் நனைய வேண்டாம்
மறைய இங்கே வந்திடு.

சதங்கா (Sathanga)said...

ஜெய்,

வாங்க, வாங்க ... பதிவுலகம் ஒரு சேமிப்புத் தானே ! எப்ப வேணா வந்து படிச்சு, உங்க கருத்துக்கள சொல்லுங்க !!!

சதங்கா (Sathanga)said...

ஜீவா,

கலக்கிட்டீங்க. அருமை, அருமை.

//நல்லா இருக்கு சதங்கா!
(இப்பவாது பேரைக் கரெக்டா சொன்னேனா!)

perfect. நன்றி ஜீவா.

//நானும் கொஞ்சம் சேர்க்கவா://

என்ன கேள்வி இது, என் பதிவை edit செய்து, உங்கள் கவிதையையும் அதில் சேர்க்கிறேன்.

cheena (சீனா)said...

ரெண்டுமே நல்லா வந்திருக்கு -

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. உங்கள் பின்னூட்டம் கண்டு, ஜீவாவும் மகிழ்ச்சி அடைவார்.

jeevagvsaid...

எனக்கும் ஒரு மயில் கொடுத்து, உங்கள் பதிவில் இடமும் கொடுத்ததற்கு மிக்க நன்றி சதங்கா.

நாகு (Nagu)said...

மயில் கவிதை அருமை. நான் ஒரு நிமிஷம் இந்த மயிலைத்தான் பாடுறீங்களோன்னு நினைச்சேன்.

நாகு (Nagu)said...

மயில் அழகு கண்கொள்ளாத அழகுதான். ஆனால் கும்பலாகக் கத்த ஆரம்பித்தால் அவ்வளவுதான்... கல்லூரியில் எங்கு பார்த்தாலும் காக்கை மாதிரி மயில்கள் இருக்கும். அதுவும் இரவில் அதுகள் கத்த ஆரம்பித்தால் தொலைந்தது தூக்கம்...

சதங்கா (Sathanga)said...

//மயில் கவிதை அருமை. நான் ஒரு நிமிஷம் இந்த மயிலைத்தான் பாடுறீங்களோன்னு நினைச்சேன்.//

அதான், தலைப்பிலேயே குழந்தைகள் கவிதை-னு போட்டேன், இருந்தும் உம்ம குசும்பு தாங்கல.

//மயில் அழகு கண்கொள்ளாத அழகுதான். ஆனால் கும்பலாகக் கத்த ஆரம்பித்தால் அவ்வளவுதான்... //

இப்ப எந்த மயிலைப் பற்றிப் பேசுகிறீர்கள் ?? =;)

Baby Pavansaid...

சதங்கா அண்ணா குழந்தைகள் கவிதையை குட்டீஸ்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

சதங்கா (Sathanga)said...

பேபி,

மயில் கவிதை குட்டீஸ்க்கு பிடிச்சத பார்த்து ரொம்ப சந்தோசமா இருக்கு.

Post a Comment

Please share your thoughts, if you like this post !