வாஷிங்டன் வீதி உலா
சில வாரங்கள் முன்பு பயணம் சென்ற இடம், உலகப் புகழ் பெற்ற அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன். செல்வதற்கு முன்னால் சில நண்பர்களிடம் விபரம் கேட்டுக் கொண்டிருந்தபோது, அனைவரும் சொன்னது இது தான். என்ன இதப் போய் இவ்ளோ டீட்டெய்லா கேக்கறீங்க. இணையத்தில கிடைக்காத தகவல்களா என்றனர்.
சரி, ஏகப்பட்ட இணைய தளங்கள், ஏகப்பட்ட தகவல்கள். முக்கியமான இடங்கள சுருக்கா ஒரு நாள்ல சுத்திப் பாக்கற மாதிரி எப்படித் தகவல் சேகரிக்கிறது. யோசித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் விபரமாச் சொன்னார். அதன்படி சென்று முக்கியமான இடங்களை ஒரு நாளில் பார்த்து, நான் பார்த்ததை எளிமையான கவிதை வடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கவிதையில் ஆங்காங்கே அடைப்புக்களில் இட்ட எண்களுக்கான படங்கள் பதிவின் கீழே.
-----
தலைநகர் வாஷிங்டன்
அடைந்த வேளையிலே
விரைந்து செல்லமுடியாமல்
வீதிமுழுதும் வாகனங்கள்
யூனியன் ரயில்நிலையம்
உள்ளே மேல்தளம்
வாகனத்தை நிறுத்த
வழிதேடி, பின்நிறுத்தி
விமான நிலையமென
வியப்பளித்த அதனைவிட்டு
வெளியேறி, தெருவை
வேகமாய்க் கடக்கையில்
கண்ணில் எதிரே, தி
கேபிடோல் ஹவுஸ் (1)
மரங்களின் ஊடே
தெரியுது அழகாய்.
அங்கிருந்து சிலதூரம்
அதன்பின் செல்லுகையில்
கண்கவர் கலை, அறிவியல்
வான்வெளி, இயற்கையென (2)
வழிநெடுகிலும் கூடங்கள்
வேண்டியன பார்த்தபின்
வானளாவி உயர்ந்த
வாஷிங்டன் மானுமென்ட்
ஐம்பது கொடிகள்
அதனைச் சுற்றி (3)
ஐம்பது மாநிலம்
அரசைச் சுற்றி
உலகப் போர்
நினைவுத் திடல் (4)
பிரதிபலிக்கும் ஏரியில்
லிங்கனின் நினைவுக்கூடம்
அதன் பிம்பம்
அதில் மிதந்து
மனதை இலகுவாக்கும்
மந்தாரக் காட்சி (5)
எதிரில்வந்து சிலதூரம்
தெருக்கடைகள் பலகடந்து
தூண்களென அணிவகுக்கும்
வானுயர்ந்த கட்டிடங்கள்
துப்பாக்கி ஏந்திய
தற்காப்புக் காவலர்கள்
இதோ அருகினில்
இருக்குது இங்கே (சத்தமின்றி !)
அனைவரும் அறிந்த
வெள்ளை மாளிகை (6)
அதன் எதிரே,
எதன் விளம்பரம் ? (7)
நின் தைரியம்
வந்தனை செய்து
ரயில் பிடித்தேன்
ரயில்நிலையம் செல்ல !
-----
படங்கள் :
படம் 1: தி கேபிடோல் ஹவுஸ்
படம் 2: இயற்கை கலைக்கூடம்
படம் 3: வாஷிங்டன் மானுமென்ட்
படம் 4: உலகப்போர் நினைவுத்திடல்
படம் 5: லிங்கன் நினைவுக்கூடம்
படம் 6: வெள்ளை மாளிகை
படம் 7: விளம்பரம்
11 மறுமொழி(கள்):
It is so good and enjoyable.
கவிதை முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
ஜான்,
வாசித்தலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
படங்கள் அருமை. கவிதையும் தான் :)
அழகான கவிதை. நிறைய விஷயங்களை நீங்கள் பார்க்கவில்லையா? அல்லது கவிதையில் கொண்டுவரவில்லையா?
இரண்டாம் உலகப்போர் நினைவுக்கூடம் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். அழகாகக் கட்டியிருக்கிறார்கள். மற்றப் போர்களின் நினைவுச்சின்னங்களை விட்டு விட்டீர்களே? வியட்நாம் மற்றும் கொரியப் போர்களின் நினைவுச்சின்னங்களும் குறிப்பிடத்தக்கவை. எனக்கு எல்லாவற்றிலும் பிடித்தது லிங்கன் நினைவுக்கூடம்தான். கம்பீரமாக அமர்ந்திருக்கும் லிங்கனும், பக்கத்து சுவற்றில் பொறித்திருக்கும் அவரது கெட்டிஸ்பர்க் உரையும் நெஞ்சை விட்டு அகலாதவை.
அனானிகளின் வரவுக்கும் வாசித்தலுக்கும் நன்றி.
நாகு,
இருந்தது கொஞ்சம் நேரம் தான். செலக்ட் செய்த இடங்களைத் தான் பார்வையிட முடிந்தது. அதனால பார்த்த மட்டும் பதிந்திருக்கிறேன்.
வாசித்து, பாராட்டியமைக்கும், வழக்கம்போல பிழை திருத்தலுக்கும் மிக்க நன்றி. யாரு comment வருதோ இல்லையோ, உங்கள் comment வந்தாச்சு என்றால் ஒரு மன திருப்தி. அடுத்த பதிவ யோசிக்க ஆரம்பித்து விடும் மனசு =:)
இந்தக் கடைசி படத்தை நேரில் பார்த்திருக்கிறீர்களா ? அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே !
வெள்ளை மாளிகக்கு உள்ளே செல்ல முடிந்ததா?
//யாரு comment வருதோ இல்லையோ, உங்கள் comment வந்தாச்சு என்றால் ஒரு மன திருப்தி. அடுத்த பதிவ யோசிக்க ஆரம்பித்து விடும் மனசு =:)
இந்தக் கடைசி படத்தை நேரில் பார்த்திருக்கிறீர்களா ? அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே !//
நாந்தான் உங்க பதிவு எப்ப வரும்னு காத்திருக்கிறேன். நீங்க கதையையே மாத்தறீங்க :-)
கடைசிபடத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகத்துக்கும் கருத்துச் சுதங்திரத்துக்கும் சாட்சி என்று சொல்லலாம்.
சதங்கா,
கவிதை வரும் முன்னே - படங்கள் வரும் பின்னே என்று சொல்லி கவிதையிலேயே எங்களை வாஷிங்டனை சுற்றிக்காட்டிவிட்டீர்கள். D.C யில் நான் பார்த்து ரசித்த மற்ற இடங்கள்: Jefforson memorial, Air and Space Museum, Washington Metro Zoo.
பரதேசி,
வருகைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட Jefforson memorial, Air and Space Museum பார்வையிடுவதாய்த் தான் இருந்தோம். நேரமின்மையால் முடியவில்லை.
Post a Comment
Please share your thoughts, if you like this post !