Tuesday, November 20, 2007

இலையுதிர் காலம்



பூ மாறி ! பொழியும்
பலவண்ண இலைப்படுகை

இங்கும் அங்குமாய் ஆடி
இறகெனப் பறந்து

பூமிதனில் படர்ந்து விழும்
மனம்பரப்பா மலர்த்தூவல்.

மஞ்சளாகி, சிவப்புமாகி, சருகாகி
மறைகின்ற பசுமை.

உதிரும் இலைகளில்
உயிர் தான் இருக்குமோ ?

உறைபனி வருமுன்
உடை களையுதே மரம் !

ஆடை களைந்தே மொட்டையாய்
வாடையில் வாடுமே !

சிலிர்க்காமல் உதிர்த்து
சில்லென்ற குளிர்தாங்கி

இளந்தளிர் துளிர்க்கக் காத்திருந்து
எத்துன்பமும் தாங்கிடுமோ ?

பச்சிலைப் படரலை எண்ணி
புத்துயிர்தான் கொள்ளுமோ !

6 மறுமொழி(கள்):

சதங்கா (Sathanga)said...

delphine மேடம்,

மிக்க நன்றி. உங்களோட அத்தனை சூப்பரிலும், உங்களின் ரசனை கண்டு ரொம்ப சந்தோசம்.

நாகு (Nagu)said...

அருமையான கவிதை. இலையுதிர்கால வண்ணக்குவியல்களைக் குறித்த ஆச்சரியத்தை அழகாக கொண்டுவந்திருக்கிறீர்கள்.

நம்ம ஊரில் இந்த தடவை வண்ணத்தெரிப்பு சற்று தாமதமாக வந்திருக்கிறது. இன்று சில படங்கள் எடுத்தேன். நேரம் கிடைக்கும்போது போடலாம் என்றிருக்கிறேன்.

சென்ற வருடம் நாம் சேர்ந்து எழுதிய கவிதை இதோ. ஒரு வருடம் ஓடியதே தெரியவில்லை.

cheena (சீனா)said...

இலையுதிர் காலக் கவிதை அருமை - எளிமை - அழகு தமிழில் கவிதை - வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

//அருமையான கவிதை. இலையுதிர்கால வண்ணக்குவியல்களைக் குறித்த ஆச்சரியத்தை அழகாக கொண்டுவந்திருக்கிறீர்கள்.//

மிக்க நன்றி நாகு.

//இன்று சில படங்கள் எடுத்தேன். நேரம் கிடைக்கும்போது போடலாம் என்றிருக்கிறேன்.//

ஒரு கவிதை புனைந்து பதிய வாழ்த்துக்கள் :)

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

வாத்துக்களுக்கு மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன்said...

அருமை சதங்கா. இலைகளின் படமும் கவிதையும் நல்ல உணர்வைக் கொடுக்கின்றன.

Post a Comment

Please share your thoughts, if you like this post !