Friday, May 16, 2008

பள்ளியும், குட்டீஸும், கேள்விகளும்

ஆயிரம் தான் அமெரிக்காவைக் குறை கூறினாலும், சில விசயங்களுக்கு இவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு இவர்கள் தரும் முக்கியத்துவம் சொல்லில் அடங்காது.

சமீபத்தில் எனது மகன் பள்ளியில் இருந்து, உங்கள் வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால் கொண்டு வந்து காண்பிக்கலாம், விண்ணப்பத்தில் இருக்கும் தேதிகளில், மூன்று தேதிகளைக் குறிப்பிட்டு அனுப்புங்கள். அதில் ஒன்றை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். அந்த நாளில் உங்கள் பிராணிகளை பள்ளிக்கு எடுத்து வரலாம் என்றிருந்தனர். இங்கிருக்கும் அநேக பள்ளிகளில் இது வருடந்தோரும் நடைபெறும் ஒரு நிகழ்வு.

"நானும் குட்டீஸை என் வகுப்பில் காண்பிக்கிறேனே" என்றான் . சரி கொண்டு போய் காட்டிட்டு தானே வரப்போறோம் என்று சரி என்றேன். நாள் நெருங்க நெருங்க என் மகனுக்கு ஏக குஷி. இந்த இரு குட்டீஸும் எங்க வீட்டுக்கு வந்து சில மாதங்கள் ஆகிறது.



இன்று ஒரு மணிக்கு கரெக்டா பள்ளியில் ஆஜர். கீழே அலுவலகத்தில் வருகைப் பதிவில் கையெழுத்து வாங்கி, இன்டெர்காமில் எனது மகனின் ஆசிரியையை அழைத்து உறுதி செய்து கொண்டு உள்ளே அனுப்பின‌ர்.

எனது மகன் வகுப்பின் அத்தனை குழந்தைகளும் ஆச்சரியத்துடன் பார்க்க, நடுவே ஒரு மேசை போட்டு அதில் கூண்டை வைக்கச் சொன்னார் ஆசிரியை.



சரி என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தோம். "குழந்தைகளே இது 'சிவா'வுடைய பெட்ஸ். உங்களுக்கு தோன்றும் கேள்விகளை அவரிடம் கேட்கலாம் !" என்றார் ஆசிரியை.

கொஞ்சம் கூட யோசனையின்றி ஆளாளுக்கு கையைத் தூக்கி, கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தன குட்டீஸ்கள். அப்பப்பா, அவர்களின் சில கேள்விகள் சிரிப்பாகவும், சில வேடிக்கையாகவும், சில சிந்திக்க வைக்கும் படியும் இருந்தது.

அவர்களின் கேள்விகள் சிலவற்றை படித்து மகிழுங்கள். எல்லாம் ஏழு, எட்டு வயதுச் சிறுவர், சிறுமியர்.

What do they eat ?
Do they lay down while sleeping ?
Do they date ?
Im serious, Do they like stake ?
Do they talk ?
When you let them out, will they listen to get back in ?
Will they have babies ?
Do they make noice ?
how do you get them out ?
how they eat ?
how they drink water ?
how do they kiss ?
what is that ?
What the cuttle bone is for ?
why do they bite ?
where do they bite ?
why they make lot of sound ?
are they playful ?
do they play video games ?
do they watch TV ?
what channel do they watch ?
do they faint ?
how they look like when they get sick ?
how do they have babies ?
how do you know their gender ?
how much do they weigh ?
when they get mad will they peck you really hard ?
do they eat onions ?
when they see onions, do they get tears on their eyes ?
do they cry ?
do they fly around the house ?
do they take bath ?
where do they peck ?

16 மறுமொழி(கள்):

Anonymoussaid...

ஆர்வமான கேள்விகள்.

அதற்கான விடைகளையும் கொடுத்தால் இன்னும் சுவாரசியமாய் இருக்கும் ;)

Anonymoussaid...

குழந்தைகளுக்கு க்ரியேட்டிவ் திங்க்கிங் வர்றதுக்கு, மேற்கத்தியவங்க ரொம்பவே மெனக்கெடுவாங்க. குழந்தைகள் கேள்விக்கு பதில் சொல்றதுதான் ரொம்ப கஷ்டம்

jeevagvsaid...

அப்புறம்?
:-)

நாகு (Nagu)said...

குழந்தைகளின் கேள்விகள் எப்பொழுதும் சுவாரசியமானவை. இந்த கேள்விகளுக்கே ஆச்சரியப்பட்டால்... இந்திய உடைகள், அலங்காரங்களோடு நின்று அரேஞ்ட் மேரேஜ் பற்றி சொல்லுங்கள். பட்டையை கழட்டிவிடுவார்கள்.

//ஆயிரம் தான் அமெரிக்காவைக் குறை கூறினாலும்,//
இன்னும் அந்த 'fresh-off-the-boat' சுபாவம் போகலயா? :-) கொஞ்ச நாளில் சரியாகிவிடும்.

சிவாவின் அப்பாதான் சதங்காவா??

சதங்கா (Sathanga)said...

கர்ணன்,

வருகைக்கு மிக்க நன்றி. சிறுவர்கள் கேள்விகள் கேட்டது எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால் பதில்களை பதிவில் சேர்க்க தோணவில்லை. கொஞ்சம் பொறுத்து பதில்கள் சிலவற்றை வழங்குகிறேன்.

சதங்கா (Sathanga)said...

ஒரளவுக்கு ... இல்லை இல்லை, நிறையவே இங்க சுதந்திரம் கொடுக்கிறாங்க, அதுவும் ஒரு காரணமா இருக்கலாம் பசங்களுடைய கேள்வி கேட்கும் திறனுக்கு.

வருகைக்கும், வாசித்தலுக்கும் மிக்க நன்றி சின்ன அம்மிணி.

சதங்கா (Sathanga)said...

ஜீவா,

பதிவு முடிஞ்சிருச்சு.... அப்புறம் என்று கேட்டிருக்கிறீர்களே ?!!!! :))

சரி, கர்ணனும் பதில்கள் போட்டிருந்தால் நல்லா இருக்கும்னு சொல்லிருக்காரு. அதானே உங்க எண்ணமும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

சதங்கா (Sathanga)said...

ரொம்ப நன்றி நாகு. பசங்க நிறைய பேசும்னு தெரியும். ஆனா இந்த அளவுக்கு கேள்விகள் கேட்கும்னு எதிர்பார்க்கலை, அதான் பிடிச்சிருந்தது.

நானானிsaid...

நீங்க சொன்னாமாதிரி இவ்விஷயத்தில் அமெரிக்கா அமெரிக்காதான் சதங்கா!
குழந்தைகளை நல்லா பேசவிட்டு அவர்கள் கேட்கும் அர்த்தமுள்ள, அர்த்தமில்லா கேள்விகளுக்கும்
பொறுமையாக பதில் சொல்லி பழக்கப்
படுத்தியிருக்கும் பாங்கு நல்லாருக்கும்.
இங்குள்ள குழந்தைகளும் சளைத்தவர்கள் இல்லை. நாம்தாம் ஏய் சும்மாயிரு!உனக்கு ஒண்ணும் தெரியாது என்று துளிர்த்து வரும் ஆர்வத்தை கிள்ளியெறிந்து விடுகிறோம்.

வால்பையன்said...

///குழந்தைகளுக்கு க்ரியேட்டிவ் திங்க்கிங் வர்றதுக்கு, மேற்கத்தியவங்க ரொம்பவே மெனக்கெடுவாங்க. குழந்தைகள் கேள்விக்கு பதில் சொல்றதுதான் ரொம்ப கஷ்டம்///

உண்மை தான், இந்திய பாடத்திட்டத்தின் மேல் எனக்கு எப்போதும் ஒரு கோபம் உண்டு.

வால்பையன்

சதங்கா (Sathanga)said...

நானானி மேடம்,

//இங்குள்ள குழந்தைகளும் சளைத்தவர்கள் இல்லை. நாம்தாம் ஏய் சும்மாயிரு!உனக்கு ஒண்ணும் தெரியாது என்று துளிர்த்து வரும் ஆர்வத்தை கிள்ளியெறிந்து விடுகிறோம்.//

ஆமா ஆமா. 100, இல்லை இல்லை, 200% சரியாகச் சொன்னீர்கள்.

சதங்கா (Sathanga)said...

வால்பையன்,

//உண்மை தான், இந்திய பாடத்திட்டத்தின் மேல் எனக்கு எப்போதும் ஒரு கோபம் உண்டு.//

ஆமாங்க. நிறைய மாற்றம் வரணும் நம்ம ஊரில்.

சின்னப் பையன்said...

ச்ச்சோ ச்ச்வீவீட்ட்ட்ட்ட்....

சதங்கா (Sathanga)said...

குட்டீஸ் பதிவு, ச்சின்ன பையனுக்கு ச்ச்வீட்ட்ட்ட்டா இருந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி :)

ராமலக்ஷ்மிsaid...

[[[சதங்கா (Sathanga) said...
நானானி மேடம்,

//இங்குள்ள குழந்தைகளும் சளைத்தவர்கள் இல்லை. நாம்தாம் ஏய் சும்மாயிரு!உனக்கு ஒண்ணும் தெரியாது என்று துளிர்த்து வரும் ஆர்வத்தை கிள்ளியெறிந்து விடுகிறோம்.//

ஆமா ஆமா. 100, இல்லை இல்லை, 200% சரியாகச் சொன்னீர்கள்.]]]

இருவர் சொல்வதும் 300% சரி!

ராமலக்ஷ்மிsaid...

//இங்குள்ள குழந்தைகளும் சளைத்தவர்கள் இல்லை.//

ஆமாம், நம்மூர் குட்டீஸும் சுமத்தப் படும் பாரங்களை எல்லாம் தாண்டி எப்படித் துடிப்புள்ள சுட்டீஸா இருக்காங்கன்னு என் "காலத்தின் கட்டாயம்" பதிவில் காலம் அனுமதிக்கையில் கட்டாயம் காண வாருங்கள்!
http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_9078.html

Post a Comment

Please share your thoughts, if you like this post !