Sunday, May 4, 2008

அனெக்ராம் என்னும் உயரிய கலை



'டவின்சி கோட்' படித்தவர்கள் அனெக்ராம் (Anagram) எனும் சொல்லை எளிதில் மறக்க மாட்டார்கள். நிறைய செய்திகள் அலசியிருக்கும் 'டேன் ப்ரௌன்', அவற்றை ஆதாரங்களுடன் கதையாக்கி, உலகிற்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தவர். சப்ஜெக்ட் திசை திரும்புகிற மாதிரி இருக்கே, மன்னிக்கவும், 'அனெக்ராம்'க்கு மீண்டும் வருவோம்.

பள்ளிகளில், ஒரு சொல்லின் எழுத்துக்களைத் தலைகீழாய் எழுதி 'பாலின்ட்ரோம்' விளையாடியிருப்போம். சிலர் அனெக்ராம் கூட விளையாடியிருக்கலாம் !!!

அனெக்ராம் பற்றி அறிய வாய்ப்பு கிட்டாதவர்களுக்கு : அனெக்ராம் என்பது, ஒரு சொல்லிலோ, வாக்கியத்திலோ இருக்கும் எழுத்துக்களை, சகட்டு மேனி மாற்றிப் போட்டு (இயன்றவரை பழைய சொல்லின் பொருளில்) புது சொல்லைக் கொண்டு வருவது.

குழப்புகிற மாதிரி இருந்தால், இந்தச் சிறு உதாரணத்தைப் பாருங்கள்.

"Camry" என்பதன் எழுத்துக்களை மாற்றி அமைத்து "My car" என்று அதே பொருள்படும் எளிய அனெக்ராம் .

1

2

3

4

5


C

a

m

r

y


3

5


1

2

4

M

y


C

a

r


இன்னுமொறு உதாரணத்தைப் பார்போம்:

'Eleven plus two' என்பதை 'Twelve plus one' என்று மாற்றி, இரண்டுக்குமே விடை பதின்மூன்று கிடைப்பது !

1

2

3

4

5

6


7

8

9

10


11

12

13

E

l

e

v

e

n


p

l

u

s


T

w

o

11

12

1

2

4

3


7

8

9

10


13

6

5

T

w

e

l

v

e


p

l

u

s


o

n

e


"Mother-in-law"-வை அனெக்ராம் முறையில் மாற்றினால் மருமகள்களுக்கு ரொம்பப் பிடிக்கும். எப்படி ? "Woman Hitler" என்று ;)

ப்ரென்சு அரசர்கள் பலர் தங்கள் அரசியல் முடிவுகளுக்கு அனெக்ராம் முறையில் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். மந்திர சக்தி கொண்ட கலை என ஆத்மார்த்தமாக நம்பியும் இருந்திருக்கிறார்கள். க்ரேக்கர்கள், ரோமியர்கள், யூதர்கள், ஃப்ரென்ச்சுக்கள், ஐரோப்பியர்கள் என இக்கலை பரவலாகப் பயன்பாட்டில் இருந்திருக்கின்றது.

அனெக்ராம் பற்றிய வாசிப்பு/பயன்பாடு ஒரு பெரும் கலையாகவே இருந்திருக்கிறது. 'ANAGRAMS' என்னும் ஆங்கில சொல்லை மாற்றி அமைத்து 'ARS MAGNA' என்ற சொல் தருவித்தால், இந்த லத்தீன் வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பு 'Great Art' என்கிறது வரலாறு.

எதற்காக அனெக்ராம் பயன்பட்டிருக்கிறது என்று பார்த்தால், அரசர்களும், படைப்பாளர்களும், பின்னாளில் இன்ன பிற அறிஞர்களும், வெகுவாக தங்கள் ரகசியங்களை (நாம பார்க்கும் வண்ணம் இருந்தாலும், என்னவென்று புரியாமல்) பாதுகாக்கவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

Anagrams பற்றி நிறைய சுவையான தகவல்கள் இணையத்தில் இருக்கின்றது. மேல் விவரங்களுக்கு, சில சுட்டிகள்:

http://en.wikipedia.org/wiki/Anagram
http://www.experiencefestival.com/a/Anagram_-_History/id/608574
http://www.anagrammy.com/anagrams/faq1.html

உலகப் புகழ்பெற்ற அனெக்ராம்கள் சில :

Albert EinsteinTen elite brains
Leonardo da VinciO Draconian devil
George BushHe bugs Gore
A decimal pointI'm a dot in place
The public art galleriesLarge picture halls, I bet
DormitoryDirty room

4 மறுமொழி(கள்):

வல்லிசிம்ஹன்said...

நல்லதொரு பதிவு. பிள்ளைகள் பேசுவதை மட்டுமெ கேட்டிருக்கிறேன்.. நீங்கள் இதைப் பதிவிட்டதில் மிகவும் மகிழ்ச்சி.

நம்ம விகடகவியும் அப்ராகாடப்ராவும் இந்த வகையா?

இலவசக்கொத்தனார்said...

வல்லிம்மா, அனக்ராம் என்பது ஒரு சொல்லில் இருக்கும் எழுத்துக்களை வைத்து வேறொரு சொல்லாகச் செய்வது. (சொல் அல்லது சொற்றொடர்)

நீங்கள் சொல்வது போன்று விகடகவி, malayalam போன்று இரு புறத்தில் இருந்து படித்தாலும் ஒன்றாகவே தெரியும் சொல் / சொற்றொடருக்குப் பெயர் பாலிண்ட்ரோம் (palindrome).

abracadabra இதில் அடங்குவதாகத் தெரியவில்லையே.

சதங்கா (Sathanga)said...

வல்லிம்மா,

வாசித்தலுக்கு மிக்க நன்றி.

உங்க கேள்விக்கு கொத்ஸ் பதில் சொல்லிருக்காரு.

சதங்கா (Sathanga)said...

கொத்ஸ்,

வாசித்தலுக்கும், உங்கள் பதிலுக்கும் மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !