கிராமத்து ஊருணி
வெளியில் சுட்டு
உள்ளுள் குளிர்ந்து
ஊருக்கு உதவிடும்
ஊரணிக்கோர் கவிதை.
நாற்புறம் குவிந்து
நடுவில் நீர்திரண்டு
சரிந்து கீழிறங்கும்
செம் மணற்பாதை.
கரையில் பிறந்து
காற்றில் தவழ்ந்து
மறுகரைக்கு உருளும்
நீரலை அடுக்குகள்.
தரைபரவி புற்கள்
கரைமுழுதும் மரங்கள்
காற்றின் வருகையிலே
கதைபேசும் இலைகள்.
உண்ட புல்செறிக்க
ஊருணியின் உள்ளிரங்கும்
கரையோரம் புல்மேயும்
கால்நடைகள் ஏராளம்.
சளக்கென்று மீன்துள்ள
சத்தம் எதிரொலிக்கும்
மிதக்கும் நீர்த்தவளை
மருண்டு அடிபதுங்கும்.
குடத்தால் நீர்தள்ளி
குடத்தில் நீர்அள்ளி
கதைபேசி வம்பளந்து
நடைபோடும் இளம்பெண்கள்.
அடித்து மழைபெய்ய
ஆங்காங்கே அருவிபோல்
வழிப்பாதை நீர்வீழ்ச்சி
நல்வாழ்வும் நமக்காச்சு !
ஏப்ரல் 10, 2009 யூத்ஃபுல் விகடனில்
10 மறுமொழி(கள்):
ஊரணி பற்றிய கவிதை அருமை. நமது ஊரின் ஊரணியை எவ்வளவு கவனித்திருக்கிறீர்கள். இவ்வளவு அருமையாக, எளிதாக ஒரு சிறு ஊரணியைப் பற்றிய எழுதிய கவிதை பாராட்டத் தக்கது.
//குடத்தால் நீர்தள்ளி
குடத்தில் நீர்அள்ளி
கதைபேசி வம்பளந்து
நடைபோடும் இளம்பெண்கள்.//
பல முறை கவனித்திருக்கிறேன். குடத்தால் நீர் தள்ளுவார்கள் - அள்ளுவார்கள்.
அருமை அருமை
நல் வாழ்த்துகள்
அடித்து மழைபெய்ய
ஆங்காங்கே அருவிபோல்
வழிப்பாதை நீர்வீழ்ச்சி
நல்வாழ்வும் நமக்காச்சு !
yes yes... plain pakuthiyil yaethu neerveelchee... pathaiyae raining seaon la aruviyaka odum..
nalla observation and presentation
சீனா ஐயா,
//ஊரணி பற்றிய கவிதை அருமை. நமது ஊரின் ஊரணியை எவ்வளவு கவனித்திருக்கிறீர்கள். இவ்வளவு அருமையாக, எளிதாக ஒரு சிறு ஊரணியைப் பற்றிய எழுதிய கவிதை பாராட்டத் தக்கது.//
பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி. படிக்கிற காலத்தில், பரீட்சை நேரங்களில் ஊரணியும், ரயில் நிலையமும் தான் நண்பர்களுடன் combine study பண்ணுகிற இடம். அப்போது மனதில் பதிந்தவை இப்போது எழுத்துக்களாக.
//பல முறை கவனித்திருக்கிறேன். குடத்தால் நீர் தள்ளுவார்கள் - அள்ளுவார்கள்.//
சின்னச் சின்ன விசயங்கள் தானே சிறப்பு. அதைக் கவனித்துப் பாராட்டுவது உங்கள் சிறப்பு.
//
குடத்தால் நீர்தள்ளி
குடத்தில் நீர்அள்ளி
//
ஆஹா - அந்த subtle technique -ஐ அப்படியே கண்முன் நிறுத்திவிட்டீர்கள். ஒரே சீரான வீச்சில் நீர் தள்ளி, நீர் அள்ளுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதுவும் அள்ளும் பார்ட்டியை நீங்கள் ஜொள்ளு விட்டது வேறு நன்றாக வந்திருக்கிறது :-)
உங்க சீனா ஐயாவுக்கு உங்க ஊருணி கேம்ப் பத்தி இப்ப தெரிஞ்சு போச்சு!
//
காற்றின் வருகையிலே
கதைபேசும் இலைகள்.
//
இதுவும் அழகு.
//yes yes... plain pakuthiyil yaethu neerveelchee... pathaiyae raining seaon la aruviyaka odum..
nalla observation and presentation//
மிக்க நன்றி.
நாகு, சதங்கா கேம்ப் பத்தி யெல்லாம் எனக்குத் தெரியாது - அவரு ஜோரா ஜொள்ளு வுட்டது அவராச் சொல்வாரு அடுத்த கவுதையுலே - அவரோட மனசின் ஆழத்திலே உள்ள இளமைக்கால நினைவுகளெப் பத்தி தான் அடுத்த பதிவு
இன்ன வரின்னு சொல்ல முடியாம எல்லாமே பிடிச்சிருக்கு! வாழ்த்துக்கள் சதங்கா!
கவிநயா,
வருகைக்கு நன்றி. நீங்க ரொம்ப generous-ஆ சொல்லிட்டிங்க. மிக்க மகிழ்ச்சி.
நாகு,
//ஆஹா - அந்த subtle technique -ஐ அப்படியே கண்முன் நிறுத்திவிட்டீர்கள்.//
மிக்க நன்றி. அது என்ன பீட்டர்ல ஏதோ சொல்லிருக்கீங்க ?
//ஒரே சீரான வீச்சில் நீர் தள்ளி, நீர் அள்ளுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதுவும் அள்ளும் பார்ட்டியை நீங்கள் ஜொள்ளு விட்டது வேறு நன்றாக வந்திருக்கிறது :)
உங்க சீனா ஐயாவுக்கு உங்க ஊருணி கேம்ப் பத்தி இப்ப தெரிஞ்சு போச்சு!
//
மத்த விசயங்களும் சொல்லிருக்கேனே, இந்த அள்ளும் பார்ட்டி மட்டும் கப்புனு புடிச்சிக்கிட்டிங்க ;) போதாதற்கு சீனா ஐயாவ வேற இழுக்கறீங்க ;))
சீனா ஐயா,
//நாகு, சதங்கா கேம்ப் பத்தி யெல்லாம் எனக்குத் தெரியாது - அவரு ஜோரா ஜொள்ளு வுட்டது அவராச் சொல்வாரு அடுத்த கவுதையுலே - அவரோட மனசின் ஆழத்திலே உள்ள இளமைக்கால நினைவுகளெப் பத்தி தான் அடுத்த பதிவு//
ஆஹா. அடுத்த பதிவுக்கு அடி கொடுத்திருக்கீங்க ... we are committed to delஇவெர் :))
Post a Comment
Please share your thoughts, if you like this post !