பிரமிக்க வைக்கும் Tap Dance - Must see
சில மாதங்களாகவே, கொஞ்சம் நேரம் கிடைத்தால் போதும் youtube இணைய தளம் செல்வது வழக்கமாக ஆகிவிட்டது ;) எனக்கு மட்டும் தான் இப்படியா ? அப்படிச் செல்லும் போதெல்லாம் இந்த வீடியோ பல தடவை பார்த்திருக்கிறேன், பிரமித்திருக்கிறேன்.
எல்லோரும் ஆடுகின்றனரா, அல்லது எங்கேயாவது இசையைத் தட்டி விட்டு சும்மா, கையை ... மன்னிக்கவும், காலைத் தூக்குகிறார்களா என்று எண்ணினால், அட அடா. அற்புதம்.
இது டாப் டான்ஸ் (tap dance) என்று சிலரும், நதி நடனம் என்று சிலரும் விவாதித்து அங்கு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். எதுவா இருந்தா என்ன, மனதை மயங்க வைக்கும் எதுவும் அற்புதமே !!!!
தனியே ஆடிக்கொண்டிருக்கும் ஆடவர் சில நொடிகளில் அந்த இருள் படிகளில் ஏற, விளக்குகள் எறிய, அவ்வரிசையும், அதன் பின்னாலும் இருந்து பெண்களும், ஆண்களும் அணிவகுத்து, டப் டப் டப் என்று அனைவரும் கீழிறங்கி வந்து அமர்க்களப் படுத்த, வயலினின் இசை கசிவிலும், அதன் பின்னர் நடனம் முடியும் வரையிலும், மனம் நெகிழ்வது நிச்சயம்.
இந்த மாதிரி நல்ல விசயங்கள் ஏராளம் இவ்வுலகில் இருக்க, யாம் பெற்ற இன்பம் பெருக வையகம் என்று இதோ வீடியோ. இசை ரசிகர்கள், கணினியின் ஒலி பெருக்கி அளவை முடிந்த மட்டும் உயர்த்தி வைத்து கேளுங்கள், வீடியோவையும் பார்த்து ரசியுங்கள்.
8 மறுமொழி(கள்):
பிரமாதம். அருமையான வீடியோ
வாவ்! வாவ்!
அருமையிலும் அருமை.
பிரேம்ஜி, வடுவூர் குமார்,
வந்து பிரமித்ததற்கு மிக்க நன்றி
அருமை அருமை - கால்களை மட்டுமே கொண்டு உடலின் மற்ற பகுதிகளில் அசிவே இல்லாமல் ஒரு நடனம் - மனதைக் கொள்ளை கொண்டது - பதிவிற்கு நன்றி சதங்கா
சீனா ஐயா,
வீடியோவை ரசித்தமைக்கு நன்றி.
ஐயர்லாந்தின் ஸ்டெப்டான்ஸ் ஆடும் ஒரு குழுவின் பெயர்தான் ரிவர் டான்ஸ். எனக்குத் தெரிந்த வரை அது ஒரு தனி நடன வகையில்லை.
http://en.wikipedia.org/wiki/Riverdance
அருமையான நடனம்.
there is lot of good tapdance in gene kelly frank sinatra movies.
you will like this.
http://www.youtube.com/watch?v=rmCpOKtN8ME
-aathirai
அருமை .. பகிர்தலுக்கு நன்றி!
Post a Comment
Please share your thoughts, if you like this post !