Thursday, November 27, 2008

அடிச்சா.....ச்சு நூறு !மில்லி இல்லீங்கோ :))

சின்னச் சின்னத் துளிகள்
எல்லாம் சேர்த்து வைத்தேனே
நாள் செல்லச் செல்ல‌
பதிவுகளாய்ப் பதிந்தும் வந்தேனே
எண்ணிக்கையில் ... நூறைத் தொட‌ ...
எகிறி குதித்தேன் வானம் இடிந்தது !!!

ஆயிரக்கணக்கில் பதிவுகள் போட்டு, அமைதியா பதிவர்கள் இருக்கும்போது, இது கொஞ்சம் ஓவரா இருக்குல்ல. என்ன செய்றது. ரத்னபாலா, பாலமித்ராக்களுக்கு, மாஞ்சு மாஞ்சு, சோறு தண்ணியில்லாம வரைஞ்சு அனுப்பி. அப்புறம் தேவுடு காத்து, ஒன்னுமே வரமா நொந்து நூலானது மனது. பிற்பாடு குமுதம், விகடனுக்கும் படைப்புக்கள் அனுப்பி, காத்திருந்தது தான் மிச்சம். இந்த கால கட்டத்தில் இப்படி நெனச்சவுடன் பதிந்து, நண்பர்கள் வந்து வாசித்து திட்டியோ, பாராட்டியோ ... எல்லாம் சில நொடிகளில் எனும்போது சந்தோசம் பெறுகத் தான் செய்கிறது.

துளித் துளியாய் ஆரம்பித்து, முதலில் கொஞ்சம் பதிவுகள் போட்ட பிறகு, சிறு இடைவெளி. எல்லோரும் நினைப்பது போலவே, 'நமக்கும் சரக்கு தீர்ந்து போச்சா' என்ற எண்ணம் அடிக்கடி வந்து தொல்லை தந்தது. 'வாழ நினைத்தால் வாழலாம்' என்ற கவியரசரின் பாடல் வரிகள் தரும் ஊக்கம், 'பதிய நினைத்தால் பதியலாம்' என்று மாற்றி யோசிக்க வைத்தது. என்ன, நேரம் ஒத்துழைக்கணும் !!

நமக்கு இந்த அரசியல், ஆன்மிகம் ரெண்டுமே ரொம்ம்ம்ம்ம்ப தூரம். முக்கியமா சென்ஸிடிவ் சண்டைகள் இந்த இரண்டிலுமே அதிகம். மதம், ஜாதி எல்லாம் வேறு சேர்ந்து ஆட்டி படைக்கும் களங்கள். அப்படியே ஒரு பை, ரெண்டுக்கும் சேர்த்து தான் :)) பிற‌கு எதைத் தான் எழுத‌லாம் என்று யோசிக்கையில், சாதார‌ண‌ ம‌னித(ர்களின்) அன்றாட வாழ்வைப் ப‌ற்றி எழுத‌லாமே என‌ ... இன்றுவ‌ரை தொட‌ர்வதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன் :))

கொஞ்சம் கதை, நிறைய கவிதைகள் என எழுதி வந்த போது, ஒரு பெரீய்ய்ய்ய எழுத்தாளருக்கு என் படைப்புக்களை வாசிக்குமாறு மடல் அனுப்பினேன். எங்கே வாசிக்கப் போறார் எனப் பார்த்தால், ஓரிரு நாட்கள் கழித்து அவரிடம் இருந்து பதில் மடல்.

சாட்டையில் அடித்த‌து போல‌ இருந்த‌து, எனது க‌விதைக‌ளைப் ப‌ற்றி அவ‌ர் எழுதியிருந்த‌து. ப‌ள்ளிச் சிறுவ‌ர்க‌ள் தேவ‌லை என்று சொல்லாம‌ல் சொல்லிவிட்டார் :(( ஒரு புறம் வருத்தம். அதே அவ‌ர், க‌தைக‌ளை சிலாகித்துப் புக‌ழ்ந்திருந்தார். குறிப்பிட்ட‌ க‌தைக‌ள், சொல்லிய‌ வித‌ம், பாத்திரங்கள், காட்சி விவ‌ரிப்பு என‌ நுணுக்க‌மாய் அவ‌ர் எழுதிய‌து க‌ண்டு ம‌றுபுற‌ம் ம‌கிழ்ச்சி.

நல்லா இருக்கோ, இல்லையோ ... என்ன‌ தான் எழுதினாலும், ஒருவ‌ர் வ‌ந்து, லேசா பாராட்டினா போதும், உச்சி முத‌ல் உள்ள‌ங்கால் வ‌ரை குளிர்ந்து போகும். இந்த‌ ம‌னித‌ இய‌ல்புக்கு யாவரும் உட்பட்டவர்கள் தான் இல்லையா ?!

திரும‌ண‌மாகி ப‌த்தாண்டுக‌ள், இருப‌து, முப்ப‌து ... எத்த‌னை ஆண்டுக‌ள் ஆனாலும், சாப்பிடும்போது க‌ண‌வ‌ர் ம‌னைவியிட‌ம் "இன்னிக்கு சாம்பார் அற்புத‌ம்" என்று ஓரிரு வார்த்தைக‌ள் சொன்னால் போதும். ச‌ந்தோஷ‌ப்ப‌டாத‌ ம‌னைவிமார்க‌ள் உண்டா ?!!! வைஸ் வெர்ஸா, கணவன்மார்கள் தான் உண்டா ?!!! :))

ஆங் ம‌ற‌க்க‌ற‌துக்கு முன்னால் ... என்னுடைய‌ தொல்லைக‌ளைப் பொறுத்துக் கொண்டு, வீட்டு வேலையைப் பார்த்து, குழ‌ந்தைக‌ளை க‌வ‌னித்து, ப‌திவுகளையும் ப‌டித்து க‌ருத்துக்க‌ள் கூறும் என‌து ம‌றுபாதி த‌ங்க‌ஸுக்கு முத‌ல் ந‌ன்றி.

எழுத்தாளர் கதை சொன்னேனே, அங்கு விழுந்த‌து க‌விதைக்கு ஆப்பு, இல்லை இல்லை கேப்பு. "ந‌ல்லா இருக்கு, இல்லை எனப் பிறர் சொல்வ‌தெல்லாம் அப்ப‌டியே எடுத்துக் கொள்ளாதீர்க‌ள். எல்லாம் அவரவர் ரிலேடிவ் க‌ருத்துக்க‌ள். தொட‌ர்ந்து எழுதுங்கள்" என்று சொன்ன‌வ‌ர்க‌ள் இருவ‌ர். சீனா ஐயா, ராம‌ல‌ஷ்மி மேட‌ம்.

அறிமுகமான பதிவிலிருந்து இன்று வ‌ரை தொட‌ர்ந்து அனைத்து ப‌திவிற்கும் வ‌ந்து, பிழைக‌ள் திருத்தி, பாராட்டி, 'அடுத்து என்ன எழுதப் போறீங்க' என்று ந‌ம‌க்கும் ஆவ‌லைத் தூண்டும் சகோதரி ராமலஷ்மி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் பல..

வ‌லைச்ச‌ர‌த்தின் ஆசிய‌ராக‌ இருந்த‌ போது ஆரம்பித்த சேட்டிங்க் இன்றும் தொடர்கிறது. எனது எழுத்துக்களுக்கு கிடைத்த முத‌ல் வெற்றி அது. (அப்ப ரெண்டாவது, மூனாவது ... என்றெல்லாம் டீடெய்ல் கேக்கப்படாது :))))) இன்றும் பதிவுகளுக்கு வந்து முழுமையாய் வாசித்து மறுமொழியிடும் சீனா ஐயா, செல்வி அம்மா அவ‌ர்க‌ளுக்கும் இந்த‌ நேர‌த்தில் ந‌ன்றி சொல்லிக்க‌றேன்.

முன்னெல்லாம் ஆஸ்தான‌ ஸ்பெல் செக்க‌ராய் இருந்த‌வ‌ர் ந‌ண்ப‌ர் நாகு. நிறைய பேரு இவரை, ஸ்பெல் செக் ப‌ண்ணி குடுங்க‌ என்று தொல்லை ப‌ண்ண‌, ந‌ம்ம‌ ப‌திவுக‌ளுக்கு அப்ப‌ப்ப வ‌ருவ‌தோடு நிறுத்திக் கொண்டார் :))) அவங்கள்லாம் ரிச்மண்டில் இருப்பதாய் கேள்வி !!! நாகுவின் ம‌னைவி ல‌தா. மின்ன‌ஞ்ச‌ல் ஆக‌ட்டும், தொலைபேசி ஆக‌ட்டும் ... புக‌ழ்ந்து த‌ள்ளிவிடுவார். இவர்கள் இருவ‌ருக்கும் ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

கதைகளுக்கு என்று ஸ்பெஷலாக கமெண்ட் போட, இவருக்காகவே அடுத்தடுத்த பாகங்கள் விறுவிறு என தட்டச்சிட்டுப் பதிந்ததும் உண்டு. இப்ப கொஞ்சம் நாட்களாகக் காணோம். தங்கச்சி ரம்யா படிப்பில் பிஸியாக இருக்கிறார் போல.

அப்ப‌ப்ப‌ ந‌ம்ம‌ இன்விடேஷ‌ன் ஏற்று அல்லது தமிழ்மணத்தில் பார்த்து வ‌ரும் அன்பு உள்ளங்க‌ள் வ‌ல்லிம்மா, துள‌சி டீச்ச‌ர், நானானிம்மா, க‌விநயா, ஜெய், முரளி, பித்தன், அப்புற‌ம் முக்கிய‌மா நீங்க‌ ... உங்க‌ எல்லோருக்கும் கோடி கோடி ந‌ன்றிக‌ள்.

ந‌ம்மை எல்லாம் இணைக்கும் ஒரு குழுவிற்கு ந‌ன்றி சொல்ல‌வில்லை என்றால் எப்ப‌டி, அத‌னால‌ ...

வ‌ர‌ம் த‌ந்த‌ சாமிக்கு
ப‌த‌மான‌ லாலி
க‌ள‌ம் த‌ந்த‌ த‌மிழ்ம‌ண‌த்திற்கு ...
கனிவான நன்றி !!!

டிஸ்கி : இன்னிக்கு "தேங்க்ஸ்கிவிங் டே" வாம்ல‌. அதான் எல்லாருக்கும் நன்றி சொல்வோம் என்று இந்த‌ சிற‌ப்புப் ப‌திவு.

28 மறுமொழி(கள்):

Jayakanthan - ஜெயகாந்தன்said...

Keep going!! Congrats!!

JK

ராமலக்ஷ்மிsaid...

”சதம் கண்ட சதங்காவுக்கு
பதமான பாராட்டுக்கள்!
இதைப் போல பல நூறு காண
இதமான வாழ்த்துக்கள்!”

உங்களுக்கே உரித்தான மெல்லிய நகைச்சுவை இழையோட.. யாரையும் மறக்காமல்.. அந்தப் பெரிய எழுத்தாளர் முதல் நமக்கெல்லாம் வரம் தரும் சாமி தமிழ் மணம் வரை எல்லோருக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள் கூறி இப்பதிவு அத்தனை பேரின் அன்பையும் ஆசியையும் வாழ்த்தையும் தானாகவே தேடிக் கொண்டது.

ஆயினும் விடுவோமா, வரிசையாக வந்து வாழ்த்து மழையில் நனைத்திடுவோமே:)!

SUREஷ்said...

துளித் துளியாய் ஆரம்பித்து, முதலில் கொஞ்சம் பதிவுகள் போட்ட பிறகு, சிறு இடைவெளி.
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

SUREஷ்said...

சாதார‌ண‌ ம‌னித(ர்களின்) அன்றாட வாழ்வைப் ப‌ற்றி எழுத‌லாமே என‌ .
புதியவர்களுக்கு ஏற்ற அறிவுரை

SUREஷ்said...

நல்லா இருக்கோ, இல்லையோ ... என்ன‌ தான் எழுதினாலும், ஒருவ‌ர் வ‌ந்து, லேசா பாராட்டினா போதும், உச்சி முத‌ல் உள்ள‌ங்கால் வ‌ரை குளிர்ந்து போகும்.

உண்மை, உண்மை

SUREஷ்said...

ந‌ல்லா இருக்கு, இல்லை எனப் பிறர் சொல்வ‌தெல்லாம் அப்ப‌டியே எடுத்துக் கொள்ளாதீர்க‌ள். எல்லாம் அவரவர் ரிலேடிவ் க‌ருத்துக்க‌ள். தொட‌ர்ந்து எழுதுங்கள்" என்று சொன்ன‌வ‌ர்க‌ள் இருவ‌ர். சீனா ஐயா, ராம‌ல‌ஷ்மி மேட‌ம்.


இந்தப் பதிவைப் பாடமாகவே வைக்கலாம்

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

சத்தான சதமடித்த சதங்காவிற்கு
நல்வாழ்த்துகள்

மேன்மேலும் பதிவுகளிட்டு புகழ்பெற இறையருள் துணை புரிய வேண்டுகிறேன்

மீண்டும் நல்வாழ்த்துகள்

செல்விஷங்கர்said...

வாழ்த்துகள்

வளமான எழுத்துகளுக்கு வளரும் வாழ்த்து.

நினைத்ததை எழுதுவது எல்லாராலும் முடியாது - ஒரு சிலரால் மட்டுமே முடியும். அம்முயற்சி இருப்பது பாராட்டத்தக்கது.

பண்பான எழுத்துகள் தங்கள் படைப்புகளில் காணப்படும்.

பாராட்டுகள் - வாழ்த்துகள் - தொடர்க

அருண்மொழிவர்மன்said...

வாழ்த்துக்கள்..

நீங்கள் அவையடக்கமாக சொன்னாலும் 100 பதிவுகள் என்பது சாதனை தான். தொடரட்டும்

வல்லிசிம்ஹன்said...

அருமை அருமை. சதங்கா. வாழ்த்துகள். எழுதுங்கள். இன்னும் நிறைய எழுதுங்கள். மனம் லேசாகும். உங்களுக்காக எழுதுங்கள் அது எங்களுக்கும் வந்து சேரும். ஒவ்வொரு அனுபவமும் இன்னோருத்தருக்குப் பயன்படும்.

இன்னும் ஆயிரம் பதிவுகள் இட ஆசீர்வாதங்கள்.

நாகு (Nagu)said...

Congrats for the hundred! Keep up the good work!!

திகழ்மிளிர்said...

வாழ்த்துகள்

அன்புடன் அருணாsaid...

சதம் கண்ட சதங்கா வாழ்க!!!!
வாழ்த்துக்கள்.
அன்புடன் அருணா

அன்புடன் அருணாsaid...

//பிற்பாடு குமுதம், விகடனுக்கும் படைப்புக்கள் அனுப்பி, காத்திருந்தது தான் மிச்சம்//
நீங்களுமா???
அன்புடன் அருணா

அன்புடன் அருணாsaid...

//இந்த கால கட்டத்தில் இப்படி நெனச்சவுடன் பதிந்து, நண்பர்கள் வந்து வாசித்து திட்டியோ, பாராட்டியோ ... எல்லாம் சில நொடிகளில் எனும்போது சந்தோசம் பெறுகத் தான் செய்கிறது.//

நிஜம்தாங்க!!!
அன்புடன் அருணா

சதங்கா (Sathanga)said...

//Keep going!! Congrats!!//

நன்றிங்க ஜெய்.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//இதைப் போல பல நூறு காண
இதமான வாழ்த்துக்கள்!”//

மிக்க மகிழ்ச்சி. ஆண்டவன் கட்டளை அது தான் எனில் தாண்டவம் ஆடிடுவோம் :))

//உங்களுக்கே உரித்தான மெல்லிய நகைச்சுவை இழையோட..//

"நகைச்சுவையா .. உனக்கா ... " அப்படினு ஆச்சரியம் கொண்ட என் மனைவி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை :)))

பழமைபேசிsaid...

வாழ்த்துக்கள்!

T.V.Radhakrishnansaid...

வாழ்த்துக்கள்!

சதங்கா (Sathanga)said...

சுரேஷ்,

// புதியவர்களுக்கு ஏற்ற அறிவுரை

இந்தப் பதிவைப் பாடமாகவே வைக்கலாம்//

அறிவுரை, பாடம் என்றெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம். அட, இது கூட சுளுவா இருக்கே, என்று யோசனை வந்ததென்றால் போதும்.

தொடர் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி.

பித்தன் பெருமான்said...

சதங்கா,

அதுக்குள்ள நூறா!!!!! அட்றா சக்கை அட்றா சக்கை அட்றா சக்கை.

அசத்திடீங்க.

பித்தன்.

சதங்கா (Sathanga)said...

வாழ்த்துக்கள் தந்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

தனி பதிலகள் நேரம் கிடைக்கும்போது செய்கிறேன். பொறுமைக்கு நன்றி.

நானானிsaid...

//”சதம் கண்ட சதங்காவுக்கு
பதமான பாராட்டுக்கள்!//
ராமலஷ்மி சொன்னதையே நானும் ரிப்பீட்டிக்கிறேன்.
வாழ்த்துக்கள் சதங்கா!!!

முரளி இராமச்சந்திரன்said...

சதமடித்த சதங்கா, மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கால தாமத வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும். அலுவலகத்தில் ப்ளாக் படிக்க முடியாததால் வர வர ப்ளாக் படிக்க நேரமிருப்பதில்லை.

அன்புடன்,

முரளி.

துளசி கோபால்said...

சதம் கண்ட சதங்கா,

இனிய வாழ்த்து(க்)கள்.

எல்லாரும் 'அடிச்ச'தைக் 'கண்டு'க்கிட்டேன்:-)

முன் ஜாக்கிரதையா (புனைப்)பெயரை வச்சுக்கிட்டீங்களோ?

கவிநயாsaid...

மன்னிக்கணும்; எல்லாப் பூக்களுக்கும் தாமதமாதான் வந்துகிட்டிருக்கேன் -

//”சதம் கண்ட சதங்காவுக்கு
பதமான பாராட்டுக்கள்!
இதைப் போல பல நூறு காண
இதமான வாழ்த்துக்கள்!”//

பெரீய்ய ரிப்பீட்டுங்கோ! வாழ்த்துகள்.

சதங்கா (Sathanga)said...

//எல்லாரும் 'அடிச்ச'தைக் 'கண்டு'க்கிட்டேன்:‍)//

டீச்சர், உங்களின் வழக்கமான சமயோசிதம். சும்மா கெறங்க வைக்குதில்ல‌ :))

முன் ஜாக்கிரதையா (புனைப்)பெயரை வச்சுக்கிட்டீங்களோ?//

ஹை, நான் கூட இது போல யோசித்ததில்லையே. பெயர்க்காரணத்துக்கு ஒரு பதிவு போடலாமானு யோசிச்சிட்டு இருக்கேன், வலைபடிக்கும் நல்லுலகம் அதை ஏற்கணுமே :)))

சதங்கா (Sathanga)said...

//ராமலக்ஷ்மிsaid...
ஆயினும் விடுவோமா, வரிசையாக வந்து வாழ்த்து மழையில் நனைத்திடுவோமே:)!//

உங்கள் வாக்கு பலிதம். வாழ்த்துக்கள் வந்துகிட்டே இருக்கு.

வாழ்த்துக்கள் தந்த/தரும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல நூறு !!!

Post a Comment

Please share your thoughts, if you like this post !