Wednesday, November 19, 2008

பச்சை குத்திப் பேரெழுதி



பச்சை குத்திப் பேரெழுதி
இச்சை கொள்ளும் மாந்த‌ருண்டு

இடக்கையோ வலக்கையோ
இழுத்து நீண்ட பெயருமுண்டு.

புருஷ‌ன் பேர் சொல்லாத‌
பொக்கை வாய் பாட்டி

பிற‌ர் கேட்க‌ கைநீட்டி
நாய‌க‌ன் பேர் காட்டிடுவாள்.

நாகரீக வளர்ச்சியிலே
நாட்டுப்புற பச்சை எல்லாம்

நங்கையரின் மேனி எங்கும்
நழுவிக் கிடக்குதிங்கே.

தேளென்ன பாம்பென்ன‌
தேடும் இடுப்பினிலும்

முள் வேலி போட்ட‌
முழ‌ங்கால் க‌ணுக்கால்க‌ள்.

ப‌ச்சை ம‌ட்டுமில்லை
ப‌ல‌ வ‌ண்ணமும் க‌ல‌ந்து

பாரே பார்க்க‌ வைக்கும்
வ‌டிவ‌ங்க‌ள் ப‌ல‌வுண்டு.

ந‌ங்கைய‌ருக்குப் போட்டியாய்
நாய‌க‌ரும் ச‌ளைத்தாரில்லை

நாக்கினிலும் கூட‌
நான்கைந்து படங்கள் கொண்டு !!!

13 மறுமொழி(கள்):

Kavinayasaid...

//புருஷ‌ன் பேர் சொல்லாத‌
பொக்கை வாய் பாட்டி

பிற‌ர் கேட்க‌ கைநீட்டி
நாய‌க‌ன் பேர் காட்டிடுவாள்.//

:))) ஆமால்ல?

நட்புடன் ஜமால்said...

பட்டாம்பூச்சி மிக அழகாய் உள்ளது ;)

நாகு (Nagu)said...

இப்படி பச்சை பச்சையா ஜொள்ளு விடறீரே? உமக்கு ஆம்பிளங்க பச்சை ஒண்ணும் கிடைக்கலயாக்கும் படம் போட?
இது மாதிரி: http://brothers.carnatica.net/blog/?p=24

உமக்கு தியாகப் ப்ரம்மம் பச்சை எல்லாம் எங்கே தெரியப் போவுது....

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப நளினமாத்தான் ஜொள்ளு விடறீர்.

நாந்தான் ஃபஸ்ட் :-)

நட்புடன் ஜமால்said...

//நாகரீக வளர்ச்சியிலே
நாட்டுப்புற பச்சை எல்லாம்

நங்கையரின் மேனி எங்கும்
நழுவிக் கிடக்குதிங்கே//

சொல்லிய விதம் அருமை

ராமலக்ஷ்மிsaid...

அருமை சதங்கா.

//புருஷ‌ன் பேர் சொல்லாத‌
பொக்கை வாய் பாட்டி

பிற‌ர் கேட்க‌ கைநீட்டி
நாய‌க‌ன் பேர் காட்டிடுவாள்.//

நாட்டுப்புற பாடலா கவிதை போல இருந்த வழக்கம்

//நாகரீக வளர்ச்சியிலே
நாட்டுப்புற பச்சை எல்லாம்

நங்கையரின் மேனி எங்கும்
நழுவிக் கிடக்குதிங்கே//

பாப் இசைப் பாடலாகி விட்டதெனெக் கொள்ளலாமா:))?

Jayakanthan - ஜெயகாந்தன்said...

//நாக்கினிலும் கூட‌
நான்கைந்து படங்கள் கொண்டு//

அத மட்டுமாவது விட்டு வைச்சாங்கன்னு நெனச்சேன்..

"நிமோ" மீனை பச்சை குத்தியிருக்கும் பிரபலம் யார்?

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

படங்கள் கவிதை அருமை

நாக்கினிலேயும் நான்கைந்து படமா - நாயகர்களா ? அடடா அடடா

ம்ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள் சதங்கா

சதங்கா (Sathanga)said...

கவிநயா,

//:))) ஆமால்ல?//

ஆம். அந்தப் பெயரைக் காட்டி கூட வெட்கப்படும் பாட்டிமாக்கள் கிராமங்களில் இன்றும் இருக்கிறார்கள்.

சதங்கா (Sathanga)said...

நாகு,

//இப்படி பச்சை பச்சையா ஜொள்ளு விடறீரே? உமக்கு ஆம்பிளங்க பச்சை ஒண்ணும் கிடைக்கலயாக்கும் படம் போட?//

படம் தேடி, செலக்ட் பண்ணி போடும் போதே, உம் நினைப்பு தானையா. சரியாய் வந்து கேள்வியும் கேட்டீரு. 3-டி ஸ்பைடர் ஒரு ஆணின் தோளில் இருப்பது தெரியவில்லையா உமக்கு :))

சதங்கா (Sathanga)said...

அதிரை ஜமால்,

//சொல்லிய விதம் அருமை//

படங்களையும், கவிதையையும் ரசித்தமைக்கும், தொடர் வருகைக்கும் நன்றி.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//நாட்டுப்புற பாடலா கவிதை போல இருந்த வழக்கம்

பாப் இசைப் பாடலாகி விட்டதெனெக் கொள்ளலாமா:))?//

ஆமா. அசத்தலா சொல்லிட்டீங்க உங்கள் பாராட்டுக்களை. மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

ஜெய்,

//அத மட்டுமாவது விட்டு வைச்சாங்கன்னு நெனச்சேன்..//

நாக்கு படமும் கொலாஜில் சேர்த்துப் போடலாம்னு பார்த்தேன். ஐயோ, சகிக்கலை. கூகிளிட்டு பாருங்க "tongue tattoo" என்று.

//"நிமோ" மீனை பச்சை குத்தியிருக்கும் பிரபலம் யார்?//

நீங்களே சொல்லுங்க. இல்ல க்ளூ கொடுங்க. எந்த ஊரு பிரபலம் ?

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//படங்கள் கவிதை அருமை//

மிக்க நன்றி.

//நாக்கினிலேயும் நான்கைந்து படமா - நாயகர்களா ? அடடா அடடா //

ஆமா. ஜெயகாந்தனுக்கு சொன்ன பதிலை உங்களுக்கு ரிப்பீட்டிக்கறேன் :))

Post a Comment

Please share your thoughts, if you like this post !