துளித் துளியாய்: 1 - மழை
Photo: icons-pe.wunderground.com
தள்ளித் தள்ளி விழும்
புள்ளிப் புள்ளித் துளியே
வறண்ட பூமி நனைப்பாய்
விழும் சில நொடியே.
இலையில் தங்கி
கிளையில் பதுங்கி
மலையில் விழுந்து
மழையாய்ப் பொழிவாய்.
தெருக்கள் ஓடி
குளங்கள் நிறைத்து
ஏரி ஆறுகளில்
ஏறி விளையாடி
நதிகள் ஓடி
கடலாய்க் கரைவாய்.
***
துள்ளி விழும்
துளியின் நடனம்
சிலிர்க்க வைக்கும்
வாடைக் காற்று
காற்றில் பரவும்
மண்(ணின்) வாசம்
மனதை மயக்கும்
மழைத் துளிகள்.
***
சிற் சில துளிகள்
சேர்ந்து விழ
ஆற்றில் வெள்ள
நீர் ஓட்டம்.
போற்றும் அன்பைப்
பொழிந்திடவே
மாற்றம் இல்லை
மகிழ்ச்சி தளைத்தோங்கும்.
***
12 மறுமொழி(கள்):
துளியாய்
துளித் துளியாய்
துள்ளித் துள்ளி
விழுகிறது மழைநீர்
ஒவ்வொரு வரியிலும்...
//காற்றில் பரவும்
மண்(ணின்) வாசம்/...
அதை வாசிப்போரும் உணர முடிந்ததே இக்கவிதையின் வெற்றி.
அழகான வரிகள் அதற்கேத்த படங்கள்
அன்பின் சதங்கா
அருமையான கவிதை - மழையைப் பார்த்த உடனே சிந்தனை கவிதையாக மாறுகிறதா ? நன்று நன்று - பார்வையும், சிந்தனையும், கவிதை எழுட்தும் திறமையும் மேன் மேலும் வளர நல்வாழ்த்துகள்
உண்மையிலேயெ மனம் மயங்குகிறது
சின்னத் துளிகள் சிரிப்பது நமக்கு அழகாய் இருக்கும். யார் இந்த இயற்கையைப் படைத்தார் ? நீயும் நானும் படைக்க முடியுமா ? பாதுகாப்போம்.
அழகான கவிதை
அருமையான கருத்து
வாழ்த்துகள்
//இலையில் தங்கி
கிளையில் பதுங்கி
மலையில் விழுந்து//
இந்த வரிகள் அழகு.
தளைத்தோங்கும் == தழைத்தோங்கும்
ராமலஷ்மி மேடம்,
//அதை வாசிப்போரும் உணர முடிந்ததே இக்கவிதையின் வெற்றி.//
மிக்க நன்றி. ஒரே வரியில் அதிசயிக்க வைத்து விட்டீர்கள்.
வாங்க ஜமால்,
//அழகான வரிகள் அதற்கேத்த படங்கள்//
அழகான மறுமொழிக்கும் நன்றி.
சீனா ஐயா,
//பார்வையும், சிந்தனையும், கவிதை எழுட்தும் திறமையும் மேன் மேலும் வளர நல்வாழ்த்துகள்/
எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்.
செல்வி அம்மா,
//சின்னத் துளிகள் சிரிப்பது நமக்கு அழகாய் இருக்கும். யார் இந்த இயற்கையைப் படைத்தார் ? நீயும் நானும் படைக்க முடியுமா ? பாதுகாப்போம்.//
அருமையா சிந்திக்க வைத்து விட்டீர்கள். ஆம், பாதுகாப்போம்.
கவிநயா,
////இலையில் தங்கி
கிளையில் பதுங்கி
மலையில் விழுந்து//
இந்த வரிகள் அழகு.//
அலைகள் ஓய்வதில்லை பாடலின் தாக்கம் தான் இவ்வரிகள்.
பிழை திருத்திட்டேன், மிக்க நன்றி.
மழையை எப்போதும் ரசிப்போம். ஆனால் இத்தனை அழகோடு அனுபவித்தது உங்கள் கவிதையைத்தான்.
மழை சாரலாகத் தூறலாகத் தெறித்து மனதை நிறைத்தது. நன்றி சதங்கா. அருமை மழையே நீ எங்கிருந்து வந்தாலும்,
அழகாகத்தான் இருக்கிறாய்.ஏழைகளை அடிக்காத வரையில்.!!
வல்லிம்மா,
//இத்தனை அழகோடு அனுபவித்தது உங்கள் கவிதையைத்தான்.//
நன்றிம்மா
//அருமை மழையே நீ எங்கிருந்து வந்தாலும்,
அழகாகத்தான் இருக்கிறாய்.ஏழைகளை அடிக்காத வரையில்.!!//
ஹை, அடுத்த கவிதைக்கு ஒரு வித்தை விதைத்திருக்கிறீர்கள்.
Post a Comment
Please share your thoughts, if you like this post !