அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்
Photo: indiaeducation.ernet.in
நீண்டு அகன்ற அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு பருத்த ஆலமரம் போல பரந்து விரிந்து காட்சியளித்தது. பல்வகைப் பறவைகள் அதில் வாசம் செய்தன. மன்னிக்கணும், பல்வகை மனிதர்கள் அதில் வசித்து வந்தார்கள்.
முறையே பணி செய்து, போதுமென ஓய்வு பெற்று, அறுபதைக் கடந்த ஜெகந்நாதனும், ராமசாமியும் அங்கு வந்ததிலிருந்து நண்பர்களும் ஆனார்கள்.'ப்லாக் ஈ'இல் நாலாவது மாடியில் ராமசாமியின் வீடு. சில ப்லாக் தள்ளி 'ஐ'இல் கீழ் தளத்தில் ஜெகன் வீடு. தினம் மாலை ஒருவர் வீடு மாறி ஒருவர் வந்து, சில மணி நேரங்கள் அரட்டை அடித்து விட்டு செல்வது வழக்கம்.
"வாங்க ஜெகன். என்ன இன்னிக்கு கொஞ்சம் லேட்டு" என்று நண்பரை வரவேற்றார் ராமசாமி.
"வாங்க ஜெகன். என்ன இன்னிக்கு கொஞ்சம் லேட்டு" என்று நண்பரை வரவேற்றார் ராமசாமி.
"என்ன தான் தினம் வந்தாலும், சில முறை தவறுதலாய்ப் போயிடுது. இப்ப கூட பாருங்க, ப்லாக் எஃப் போய் கதவ தட்ட, ஒரு பாயம்மா கதவத் தெறக்கறாங்க ! நீங்க அப்படி எல்லாம் இல்லையேனு யோசிச்சா, அப்ப தான் புரியுது ப்லாக் மாத்தி வந்திருக்கேன் என்று" என்று சொல்லி இடி இடி எனச் சிரித்தார் ஜெகன்.
"குசும்பு புடிச்ச கிழவரையா நீர். பாயம்மாவ பாக்கறதுக்காகவே போயிட்டு, என் மேல பழிய போடறீர்" என்று சினம் கொள்வது போல நடித்தார் ராமசாமி.
"நான் பாயம்மாவ பாக்கப் போனது இருக்கட்டும். இந்தக் கதையையும் கேளும். என் நண்பனின் மகன் ஒருவன் பாலாஜி என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியரா சேர்ந்திருக்கான். ஆரம்ப நாட்களில் சில வாரங்கள் கவனித்திருக்கிறான், மாணவர்களில் சிலர் காணாமல் போவதும், புதுமுகங்கள் வருவதையும்."
"நீர் என்ன சொல்லப் போறீர் என்று புரிந்து விட்டது. என்ன வகுப்பு மாறி வந்து போனார்கள் ... சரியா ... கண்டுபிடிச்சிட்டேன் பாரும்" என்று பெருமிதம் கொண்டார் ராமசாமி.
"வயசுக்கேத்த பொறுமை எப்ப தான் வரப்போகுதோ உமக்கு. இப்படி குறுக்கே பேசக்கூடாது, அப்புறம் சுவாரஸ்யம் கொறஞ்சு போயிடும், பொறுமையா கேளும்" என்று தொடர்ந்தார் ஜெகன்.
ஒரு நாள், புதுசா வந்த சில முகங்களை, 'எங்கே இவ்வளவு நாட்கள் காணலை, இப்ப தான் உங்களைப் பார்க்கிறேன்' என்று கேட்டிருக்கிறான். ஒருவன், 'நான் இந்த பக்கத்தில் இருக்கும் வெங்கடேஸ்வரா என்ஜினியரிங் கல்லூரிய நம்ம கல்லூரினு நெனச்சுப் போயிட்டேன்' என்றானாம். மற்றவளோ, நான் அந்தப் பக்கம் இருக்கும் மேரிமாதா என்ஜினியரிங் கல்லூரிக்குப் போயிட்டேன் என்றிருக்கிறாள்.
இவனுக்கோ ஆச்சரியம் தாங்கலை. 'அப்ப காணாமப் போனவங்க ??!!' என்று வியந்து கேட்க, 'அவங்க எல்லோருமே, இதே போல அதே தெருவில் வருசையாய் இருக்கும், ராஜு என்ஜினியரிங் கல்லூரி, விக்ரம் என்ஜினியரிங் கல்லூரி, ஜலால் என்ஜினியரிங் கல்லூரி என்று ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்களாய் இருப்பார்கள்' என்றிருக்கின்றனர் கோரஸாய்.
உடனே, தான் சரியான கல்லூரியில் தான் இருக்கிறோமா என ஒருமுறை வெளியே வந்து தகர போர்டைப் பார்த்து உறுதி செய்திருக்கிறான்." என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, இடி முழக்கச் சிரிப்பைத் தொடர்ந்தார் ஜெகன்.
ஏப்ரல் 08, 2009 யூத்ஃபுல் விகடனில்
14 மறுமொழி(கள்):
சரியான கதை - நகைச்சுவை - அருமை
எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்கின்றன - என்ன செய்வது ?
நல்லாவே இருக்கு
மீ த பர்ஸ்டா ?
நல்ல குழப்பமய்யா. பசங்கள் யாரை ஃபாலோ செய்து வந்தனரோ? :-)
நல்ல நகைச்சுவை.
வசிப்பவர்களுக்கே இத்தனை குழப்பம் என்றால் வருபவருக்கு? நான் இருக்கும் குடியிருப்பில் 13 ப்லாக்கள். டோர் டெலிவரி கொரியர் என நாளைக்கு ஒருவராவது ப்லாக் மாறி வந்து கடுப்பேற்றுவார்கள்.
நாகு சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது:))!
Nalla kathai.....Nattu nilamayum konjam theriyuthu...ethani college Tamil Nadu la vanthurukunnu..
நல்ல நகைச்சுவை!! என் அக்கா குடியிருக்கும் காம்ளேக்ஸுக்குப் போகும் ஒவ்வொரு முறையும் லிப்ஃடிலிருந்து வலது பக்கம் போவதற்குப் பதில் இடது பக்கம் திரும்பி எங்கோ போவதை உணர்ந்து..குழம்பி மறுபடி திரும்பி சரியாகப் போய்ச் சேருவேன்.
சீனா ஐயா,
//எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்கின்றன - என்ன செய்வது ?//
ஆமா. தேடி வர்றவங்களுக்கு, வழி சொல்வதற்கும் போதும் போதும் என்றாகிவிடுமே :)))
//நல்லாவே இருக்கு//
மிக்க நன்றி.
சீனா ஐயா,
//மீ த பர்ஸ்டா ?//
நீங்களே தான். உங்களின் இந்த ஆர்வம் மகிழ்ச்சியைத் தருகிறது.
நாகு,
முன்னெல்லாம் வீடுகளில் தான் குழப்பம் இருந்தது. இந்த முறை ஊருக்கு சென்ற போது, சென்னை வேளச்சேரியில் ஒரு தெரு முழுக்க வரிசையாய் கல்லூரிகள். காம்பவுண்டு சுவர் கூட இல்லை. இங்கும் குழப்பம் வராமல் இருக்க வாய்ப்பில்லை.
//பசங்கள் யாரை ஃபாலோ செய்து வந்தனரோ? :-)//
எத்தனை வயதானாலும், மனதுக்கு வயதேது என்று நிரூபிக்கறீர் :))) ரசித்தேன்
ராமலஷ்மி மேடம்,
//வசிப்பவர்களுக்கே இத்தனை குழப்பம் என்றால் வருபவருக்கு? //
இங்கு சீனா ஐயாவிற்கு தந்த பதிலை ரிப்பீட்டிக்கறேன்.
//நான் இருக்கும் குடியிருப்பில் 13 ப்லாக்கள். டோர் டெலிவரி கொரியர் என நாளைக்கு ஒருவராவது ப்லாக் மாறி வந்து கடுப்பேற்றுவார்கள்.//
ஆமால்ல. பெரிய இம்சை அது.
//நாகு சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது:))!//
என்றும் இளமைனு நெனைப்பு அவருக்கு :))
:-))
ஆனந்த் நடராஜன்,
//Nalla kathai.....Nattu nilamayum konjam theriyuthu...ethani college Tamil Nadu la vanthurukunnu..//
வருகைக்கும், கருத்திற்கும் நன்றிங்க.
நானானிம்மா,
//ஒவ்வொரு முறையும் லிப்ஃடிலிருந்து வலது பக்கம் போவதற்குப் பதில் இடது பக்கம் திரும்பி எங்கோ போவதை உணர்ந்து..//
யதார்த்தம். அதான் நடக்கிறது இப்ப.
சிங்கை சென்ற புதிதில் இப்படித் தான் இருந்தது முதலில். அப்புறம் கை வந்த கலையாகி, இல்லை இல்லை கால் வந்த கலையாகிவிட்டது :))
சந்தனமுல்லை,
வருகைக்கும், ஸ்மைலிக்கும் நன்றிங்க.
Post a Comment
Please share your thoughts, if you like this post !