Friday, November 21, 2008

துளித் துளியாய்: 2 - காதல்


Photo: cringel.com

அமிழ்தாய் பொழியும்
அன்புத் துளிக‌ள்
அர‌ணாய்க் காக்கும்
அன்புக் க‌ர‌ங்க‌ள்
சாய‌த் துடிக்கும்
அக‌ன்ற‌ தோள்க‌ள்
ம‌ண்ணில் விழும்
ம‌ழைத் துளியைப் போலே
உன்னில் எனையே
ஒளித்துக் கொள்வாயா ?!!

***

மகிழ்ச்சி தரும்
மழையின் சுவாசம்
உருக்கும் குளிராய்
உந்த‌ன் நேசம்
பால் நில‌வின்
குளிர்ந்த‌ இர‌வில்
க‌ம்ப‌ளி உன‌க்காய்
காத்திடும் என்மனம்

***

தூவானத் தீண்ட‌லில்
திடுக்கிட்டேன்
பெரு ம‌ழையாய்ப்
பேரிறைச்ச‌லோடு
சுழ‌லும் சூறாவ‌ளியாய்
சுழ‌ன்றாடும் என்னை
அமைதியாய் ஆட்கொண்டு
அன்பினால் க‌ட்டிய‌ணைத்தாய்
தூவான‌த் தீண்ட‌லில்
திடுக்கிட்டேன்.

***

விண் அதிர‌
மின்ன‌ல் விளக்கெரிய
காற்றில் மிதந்து
மண் ந‌னைத்தாய்
குமுறி அழுவ‌தாய்
கொள்ள‌வில்லை என் ம‌ன‌ம்
கூடும் வெற்றித‌னில்
ஆன‌ந்த‌க் க‌ண்ணீர் தானோ !?

***

9 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

\\விண் அதிர‌
மின்ன‌ல் விளக்கெரிய
காற்றில் மிதந்து
மண் ந‌னைத்தாய்
குமுறி அழுவ‌தாய்
கொள்ள‌வில்லை என் ம‌ன‌ம்
கூடும் வெற்றித‌னில்
ஆன‌ந்த‌க் க‌ண்ணீர் தானோ !?\\

நல்ல கற்பனை.

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மிsaid...

//அமிழ்தாய் பொழியும்
அன்புத் துளிக‌ள்//

துளித் துளியாய் வரிசையில் மழைக்குப் பின் அன்பா? அடுத்த என்ன என்கிற ஆவல் ஏற்படுகிறது.

//ம‌ண்ணில் விழும்
ம‌ழைத் துளியைப் போலே
உன்னில் எனையே
ஒளித்துக் கொள்வாயா ?!!//

//பால் நில‌வின்
குளிர்ந்த‌ இர‌வில்
க‌ம்ப‌ளி உன‌க்காய்
காத்திடும் என்மனம்//

கவிதை அருமை. வாழ்த்துக்கள் சதங்கா.

செல்விஷங்கர்said...

மழைத்துளிகள் மகிழ்ச்சித் துளிகள் தான். அவை மனங்குமுறி வடிந்ததாய்க் கொள்வதும், மனம் வெதும்பி பொழிந்ததாய்க் கொள்வதும், குளிர்ந்ததாய் அணைத்ததும், அணைத்ததால் வெடித்ததும் நல்ல கற்பனை. நல்ல கவிநடை. வாழ்த்துகள்.

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா

பிளாக்கர் சதி செய்கிறது. ரசித்துப் படித்து, சிந்தித்து மறு மொழி இட்டால்
அது :IE Cant display the page : னு வருது ... என்ன செய்ய

மறுபடியும் முயல்வோம்

cheena (சீனா)said...

அன்பின் சதங்கா,

அருமை அருமை - கவிதை அருமை.

அழகு தமிழில் எளிய சொற்களைக் கொண்டு சொல்லாடி, கவிதை எழுதுவது நன்று நன்று.

மண்ணில் விழும் மழைத்துளியை மண் ஒளிப்பது போல், அவனை அவள் ஒளிக்கிறாள் என்பதும், உருக்கும் குளிராய் நேசம் - மற்றும் காத்திடும் கம்பளியாய் மனம் என்பதும், சூறாவளியாய்ச் சுழன்ன்றாடும் அவனை அமைதியாக அன்பினால் ஆட்கொள்கிறாள் என்பதும், மண் நனைக்கும் மழையைப் போல குமுறி அழுவதை ஆனந்தக் கண்ணீராய்ப் பார்ப்பதும் அழகான வளமான கற்பனைத்திறனைக் காட்டுகிறது.

நல்வாழ்த்துகள்.

சதங்கா (Sathanga)said...

அதிரை ஜமால்,

//நல்ல கற்பனை.

வாழ்த்துக்கள்.//

ரொம்ப நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

ராமலஷ்மி மேடம்,

//துளித் துளியாய் வரிசையில் மழைக்குப் பின் அன்பா? அடுத்த என்ன என்கிற ஆவல் ஏற்படுகிறது.//

எல்லாமே துளித் துளியாய் என்று ஒரு மழை நாளில் யோசித்து, ஒரு திரைப்படப் பாடலின் துவக்கமும் சேர்ந்து பிடித்துக் கொண்டது. உங்கள் ஆவல் எனக்குக் கிடைத்த ஒரு பிரதான சக்தி.

சதங்கா (Sathanga)said...

செல்வி அம்மா,

//மழைத்துளிகள் மகிழ்ச்சித் துளிகள் தான். அவை மனங்குமுறி வடிந்ததாய்க் கொள்வதும், மனம் வெதும்பி பொழிந்ததாய்க் கொள்வதும், குளிர்ந்ததாய் அணைத்ததும், அணைத்ததால் வெடித்ததும் நல்ல கற்பனை. நல்ல கவிநடை. வாழ்த்துகள்.//

கருத்துக்களை சுருக்கி, உங்களுக்குப் பிடித்த குறள் போலவே பொருள் புதைத்து பின்னூட்டியமைக்கு நன்றி.

சதங்கா (Sathanga)said...

சீனா ஐயா,

//அழகு தமிழில் எளிய சொற்களைக் கொண்டு சொல்லாடி, கவிதை எழுதுவது நன்று நன்று.//

மிக்க மகிழ்ச்சி.

//மண்ணில் விழும் மழைத்துளியை மண் ஒளிப்பது போல், அவனை அவள் ஒளிக்கிறாள் என்பதும், உருக்கும் குளிராய் நேசம் - மற்றும் காத்திடும் கம்பளியாய் மனம் என்பதும், சூறாவளியாய்ச் சுழன்ன்றாடும் அவனை அமைதியாக அன்பினால் ஆட்கொள்கிறாள் என்பதும், மண் நனைக்கும் மழையைப் போல குமுறி அழுவதை ஆனந்தக் கண்ணீராய்ப் பார்ப்பதும் அழகான வளமான கற்பனைத்திறனைக் காட்டுகிறது.
//

மறுமொழியிடும் போது பிரச்சனை வந்தாலும், மீண்டும் வந்து ஊக்கப்படுத்தி வாழ்துவதற்கு நன்றிகள் பல

Post a Comment

Please share your thoughts, if you like this post !