Friday, August 24, 2007

கனவு மெய்ப்பட வேண்டும்

அந்தக் காலத்தில் தான் தலைவன் வரவை எதிர் பார்த்து தலைவி காத்திருந்ததாக நிறையப் படித்திருக்கிறோம். தற்போது உள்ள கால மாற்றத்தில், நிறைய தலைவர்கள் காத்திருக்கிறார்கள் ;-) அவர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.

நில வதன் ஒளி
ஒளி படர் வெளி
வெளி அதில் மதில்
மதில் அதில் நீ.

நீ காக்கும் நேரம்
நேரம் கடத்தி நான்
நான் வரச் சினம்
சினம் கொள் மனம்.

மனம் அதில் அலை
அலை ஒடுங்கிய நிலை
நிலை கொண்ட மண்
மண் அதில் செடி.

செடி அதில் கொடி
கொடி அதை ஒடி
ஒடித் ததைப் பிடி
பிடித் ததில் அடி.

அடித் தெனை அனை
அனைத் தெனை வளை
வளைத் தெனை இழு
இழுத் தெனை முகர்.

முகர் உன் சுவாசம்
சுவாசம் அதில் நேசம்
நேசம் நித்தம் பொளி
பொளி வது அருள்.

அருள் அது பெற்று
பெற் றதைப் பேணி
பேணி உனை நாணி
நாணும் எனைக் காண்.

காணும் உனை மறவேன்
மறவா துனை இருக்க
இருப்பில் நித்தமும் கனவு
கனவு மெய்ப்பட வேண்டும் !

(எழுத்துப் பிழை இருப்பின் சொல்லுங்க நண்பர்களே !)

2 மறுமொழி(கள்):

Jayakanthan - ஜெயகாந்தன்said...

நல்ல புது முயற்சி.. முடியும் வார்த்தையில் தொடங்கியது.. "நேசம் நித்தம் பொழி" என நினைக்கிறேன்..

சதங்கா (Sathanga)said...

//நல்ல புது முயற்சி.. முடியும் வார்த்தையில் தொடங்கியது..//

நன்றி ஜெய். முதலில் எழுத சுலபமாய் இருந்தது. அப்புறம் ஒரு theme வைத்துத் தொடர்ந்த போது கொஞ்சம் சிறமப்பட்டது உண்மை.

//"நேசம் நித்தம் பொழி" என நினைக்கிறேன்.. //

எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது / இருக்கிறது. இந்த இடுகையை வாசிக்கும் போது 'அடி பொளி' க்கு விளக்கம் அளித்திருக்கிறார்கள். 'ப்ரமாதம்' என்பதாய் அதிலிருந்து 'பொளி' மட்டும் எடுத்துக் கொண்டேன்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !