Tuesday, August 7, 2007

யானை (குழந்தைகள் கவிதை)

நாம் படித்த அளவிற்கு இக்காலக் குழந்தைகள் தமிழில் பாடல்கள் படிப்பதில்லை (சினிமா பாடல்கள் அல்ல :)). அவர்கள் தமிழில் பேசுவதே அறிதாய் இருக்கிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் சிதைந்துவிடுமோ நம் தமிழ் என்று எண்ணத் தோன்றுகிறது.

வலையில் நாம் தமிழில் இடுகைகள் இட்டாலும், வளையவரும் நம் குழந்தைகள் தமிழில் பேசுவதை விரும்புவதில்லை. இதற்கு பல பெற்றோர் பல கருத்துக்களைச் சொல்கிறார்கள். அதைப் பற்றிப் பிறகு வேறு பதிவுகளில் பார்ப்போம்.

எளிமையாய் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி எழுதலாம் என்றால், எளிமை தான் கடினம் என்று புரிந்தது. ஓரளவுக்கு எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இது எனது முதல் முயற்சி. படித்து, நன்றாக இருந்தாலும் / திருத்தங்கள் தேவைப்பட்டாலும் மறவாமல் தெரிவியுங்கள். -- நன்றி.



கரு கரு யானை
பட பட காது
குரு குரு கண்ணு
துரு துரு தும்பிக்கை
பெரிய பெரிய வயிறு
டம் டம் காலு
கம்பி முடி வாலு

------

ஆற்றில் நீரை உறிஞ்சி
பீச்சி அடிக்கும் யானை

உச்சி மர இலையையும்
உறித்து உண்ணும் யானை

கோவில் வாசல் நின்று
ஆசி வழங்கும் யானை

காசு தரும் குழந்தைகளை
முதுகில் ஏற்றும் யானை

பாடி ஆடும் சிறுவர்களோடு
பந்தடிக்கும் யானை

8 மறுமொழி(கள்):

Jayakanthan - ஜெயகாந்தன்said...

எளிமையான நல்ல பாடல்(கள்). இரண்டாவது "அம்மா இங்கே வா வா" மெட்டில் அழகாக பொருந்துகிறது!

சதங்கா (Sathanga)said...

நன்றி ஜெய்.

Anonymoussaid...

பாடல்கள் நன்றாக இருக்கிறது. குழந்தைகளுக்காக பாட்டு எழுதுபவர்கள் அதிகம் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. எனக்குக் கிடைத்த முதல் புத்தகம் அழ வள்ளியப்பாவின் கவிதைத் தொகுப்பு.
எனக்குத் தமிழ் படிக்க ஆர்வம் வந்தது அதனாலே என்று சொல்வேன். குழந்தைகளுக்கென பல கவிதைகள் எழுதி,
எலக்ட்ரானிக் புத்தகமாக வெளியிடலாமே! புலம் பெயர்ந்தவர்களின் சிறு குழந்தைகளுக்காக முதல் பாட நூல் எழுதும்
யோசனையில் இருக்கிறேன்.
சாம்

jeevagvsaid...

+ போட்டாச்சு!

சதங்கா (Sathanga)said...

ஜீவா,

வருகைக்கும், +க்கும் நன்றி.

சதங்கா (Sathanga)said...

கருமுகில்,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

//எனக்குக் கிடைத்த முதல் புத்தகம் அழ வள்ளியப்பாவின் கவிதைத் தொகுப்பு.
எனக்குத் தமிழ் படிக்க ஆர்வம் வந்தது அதனாலே என்று சொல்வேன்.//

இதை நமது வருங்கால சந்ததியினரும் அறியவேண்டும். அது நம்மால் தான் சாத்தியம்.

//குழந்தைகளுக்கென பல கவிதைகள் எழுதி, எலக்ட்ரானிக் புத்தகமாக வெளியிடலாமே!//

இப்போது தான் ஆரம்பித்திருக்கிறேன். நீங்கள் கூறிய படி நிறைய சேரும்போது எலக்ட்ரானிக் வடிவில் தயாரிக்கிறேன். உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

//புலம் பெயர்ந்தவர்களின் சிறு குழந்தைகளுக்காக முதல் பாட நூல் எழுதும்
யோசனையில் இருக்கிறேன்.//

உங்கள் முயற்சிக்கும், அது வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

மாசிலாsaid...

சிறு பிள்ளைகளுக்கு தக்கவாறு படித்து எளிதில் மனதில் நிறுத்தும் வகையில் எளிமையான தமிழில் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் சதங்கா.

பகிந்தமைக்கு மிக்க நன்றி. படங்கள் அருமை.

சதங்கா (Sathanga)said...

மாசிலா,

உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !