Friday, August 10, 2007

வாத்து (குழந்தைகள் கவிதை)

வாத்தின் உருவமும், அதன் நிறமும், நடையும் பார்ப்பதற்கு நமக்கே அழகாய் இருக்கும். குழந்தைகளுக்கு அதைவிட மேலாய் ஆனந்தம். வீட்டின் அருகில் இருக்கும் ஒரு சிறு குளத்தில் நிறைய வாத்துக்கள் இருக்கின்றன. அங்கு செல்லும் போது அவற்றிற்கு ரொட்டித் துண்டுகள் போட்டு, குழந்தைகள் படும் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. அதன் நினைவாய் தோன்றிய கவிதை கீழே.



வெள்ளை நிற வாத்து
காவி மூக்கை சாய்த்து

தட்டை காலை வீசியே
தத்தித் தத்தி நடந்திடும்

கிட்ட நீயும் செல்லவே
நீரில் தாவி நீந்திடும் !

3 மறுமொழி(கள்):

jeevagvsaid...

நன்றி நண்பரே, நானும் முயன்றேன், இதோ:

வெள்ளை நிற வாத்து
பஞ்சு போன்ற வாத்து

அஞ்சிடாமல் நானும்
அதனருகே செல்வேன்

தயங்கிடாமல் நானும்
இரை அதற்கு தருவேன்

தரையிலும் நடந்திடும்
தண்ணிரிலும் நீந்திடும்

தங்க முட்டை வாத்து
கதைகள் பல உண்டு

வெள்ளை நிற வாத்தே
எனக்கு பிடித்த வாத்து!

சதங்கா (Sathanga)said...

ஆஹா, ஜீவா அருமை. நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை. சில எண்ணங்கள் :

//வெள்ளை நிற வாத்து
பஞ்சு போன்ற வாத்து//

வெள்ளை நிற வாத்து
பஞ்சு பஞ்சு வாத்து

என்றும்

//தங்க முட்டை வாத்து
கதைகள் பல உண்டு//

தங்க முட்டை வாத்து
எங்கள் பாட்டி கதையில்

என்றும் மாற்றினால் கொஞ்சம் rhyming-ஆக இருக்குமென நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீர்கள் ?

jeevagvsaid...

அதே அதே,
மேலும் சிறப்பாக இருக்கிறது, அந்த மாற்றங்களால்!

Post a Comment

Please share your thoughts, if you like this post !