கோப்பையிலே உன் குடியிருப்பு - ரோஜர் ஃபெடெரர்
2007 US Open நாயகன் Roger Federer பற்றி நிறைய படித்து வருகிறோம். அவரது நிதானம் தான் அவரது மிகப் பெரிய பலம் என்பது அவர் ஆட்டத்தைப் பார்ப்போர் அறிவர். மீண்டும் US Open கோப்பையை வென்று (தொடர்ந்து நான்காவது முறை) சாதனை புரிந்திருக்கும் அவருக்கு, என்னால் மில்லியன் கணக்கில் டாலர்கள் தர இயலாவிட்டாலும் ;-) எனது மிகச் சுருக்கமான கவிதை கீழே.
------------
நடை திறந்து நீ நடக்கமடை திறந்த வெள்ளமென
படபடக்கும் மனம் படைத்த
பார்வையாளர்(கள்) ஏராளம்
களம் புகும் உன் முகம்
வளம் தரும் காட்சிதனில்
இனம் புரியா உத்வேகம் எங்கள்
மனம் பரவி நிற்கச் செய்வாய்
நின்று நிதானித்து
எங்கு அடித்தாலும்
தங்கு தடையின்றி
பந்து பயணிக்கும்
ஏஸ், டியூஸ், டைப்ரேக்
எல்லாம் சாதகமாய்
ஆக்கும் உந்தன் நிதானம்
அடையுமே வெற்றிக் கோப்பை.
எதிராளி களைத்திருக்க ...
பந்து(கள்) களைத்திருக்க ...
மட்டை(கள்) களைத்திருக்க ...
வர்னணையாளர்(கள்) களைத்திருக்க ...
ஆடுகளமும் களைத்திருக்கும் !!!
களைப்பறியா உந்தனுளம்
தளர்வின்றி நிமிர்ந்திருக்கும்.
கொஞ்சமே (!) போராடி
குவிக்கும் வெற்றிகளால்
கோப்பையிலே உன் குடியிருப்பு !
------------------
சில தொகுப்புகள் youtube-லிருந்து :
2 மறுமொழி(கள்):
அருமை, சதங்கா....
கவிதையைத் தான் சொன்னேன்.
அத்துடன் சிறு சிறு விழியக்காட்சிகளாகத் தொகுத்து தந்த ஆட்ட படங்களும்...
எங்கும் கிரிக்கெட், கிரிக்கெட் என மற்ற ஆட்டங்களை மக்கள் மறந்து கொண்டிருக்க, இது போன்ற பிறவிளையாட்டுகளும் ரசிக்கப்படுவதே பெரிய ஆறுதல்...
மிக்க நன்றி,
நட்புடன்
நண்பன்
நண்பன்,
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.
எந்த ஒரு துறைக்கும், விளம்பரம் ஒன்று தான் இப்போதைய வாழ்வில் ப்ரதானமாய் இருக்கிறது. திறமை எல்லாம் யார் பார்க்கிறார்கள் :-(
க்ரிக்கெட்டில் ஒரு வீரர் ஆடவில்லை என்றால், அவர் form-ல் இல்லை என்கிறார்கள். இருப்பினும் அவர் ஸ்டார் அந்தஸ்து உயரத்தான் செய்கிறது. இதெல்லாம் யோசிக்கையில் வேதனை தான் மிஞ்சுகிறது.
ஆனால் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில், அவர் form-ல் இல்லையென்றால் அவ்வளவு தான். முதல் இடத்தில் இருப்பவர் முன்னூறாம் இடத்திற்கு தள்ளப்படுவது நிச்சயம். அதுவுமன்றி 25, 26 வயது அடைந்தாலே, உங்களால் எப்படி 17,18 வயதுடையோருடன் விளையாட முடிகிறது என்று பேட்டிகளில் கேட்கிறார்கள்.
ஆனால் க்ரிக்கெட்டின் நிலைமையோ வேறு ;-) எல்லாம் விளம்பரம் செய்யும் மாயை.
Post a Comment
Please share your thoughts, if you like this post !