வரவு எட்டணா செலவு பத்தணா -- கண்ணதாசன்
"பாமா விஜயம்" திரைப்படம் நான் பிறப்பதற்கு முன்னால் வந்தாலும், பின்னாளில் பல முறை பார்த்த திரைப்ப(ா)டங்களில் இதுவும் ஒன்று.
திரைப்படம் என்ற எண்ணம் தோன்றாமல், இயல்பு வாழ்க்கை, இது தான் எதார்த்தம் என்று படம் முழுதும் காட்டியது கே.பாலச்சந்தர் அவர்களின் திறமை.
என்ன தான் தற்போதைய திரைப்படங்கள் அதிரவைத்தாலும், இன்னும் சில மாதங்கள் கழித்துப் பார்த்தால் அவை நம்மை அழவைக்கும் என்பது நிச்சயம்.
கே.பி. தான் இமயம் என்றால், நம் கவியரசர் முழுப் படத்தையும் நறுக்கென்று அவருக்கே உரிய எளிய (நாமெல்லாம் படிக்கனுமே) வரிகளில் பாடலாக்கி விட்டார்.
தற்போது, இந்த நிலையில் இருந்து நாம் கொஞ்சம் மாறுபட்டு இருக்கிறோமோ என்று தோன்றுகின்றது. வளர்ந்து வரும் பொருளாதாரம். அதை வளர்த்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞர்கள். நல்ல முன்னேற்றமே.
வரவு, செலவு என்பதைப் பொருத்து இந்தப் பாடல் (எனக்கு) தற்கால வாழ்வு முறைக்கு முறண்பட்டிருந்தாலும், நம்ம நடிகர், நடிகையர் மோகம் இன்னும் குறைந்த பாடில்லை என்று துணிச்சலாய்ச் சொல்ல முடியும். நடிகர் ரஜினியின் நியூயார்க் / நியூஜெர்சி வருகையில், நம் இளைய கணிப்பொறியாளர்கள் படையைப் பார்த்தால், அதிரத்தான் செய்கிறது ;-)
சரி, பாடலுக்குச் செல்வோம். பாடலைக் கேட்டு, பார்த்து, வாசித்து மகிழுங்கள்.
Thanks senthil5000 for youtube
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் குந்தனா குந்தனா
1.2.3.4.5.6.7.8.
வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டணா
கடைசியில் குந்தணா குந்தணா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது
ஐயா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசை வந்தா உள்ளதும் கிடைக்காது
அம்மா உள்ளதும் கிடைக்காது
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசுப் பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
அப்பா வாழ்வது பொருக்காது
வாடகை சோபா ... இருபது ரூபா
விலைக்கு வாங்கினா ... முப்பதே ரூபா !
வரவு எட்டணா ...
அடங்கா மனைவி அடிமைப் புருசன் குடும்பத்துக் காகாது
ஐயா குடும்பத்துக் காகாது
யானையைப் போலே பூனையும் தின்னால் ஜீரணம் ஆகாது
ஐயா ஜீரணம் ஆகாது
பச்சைக் கிளிகள் பறப்பதைப் பார்த்தா பருந்துக்குப் பிடிக்காது
அப்பா பருந்துக்குப் பிடிக்காது
பணத்தைப் பார்த்தால் கவுரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
தங்கச் சங்கிலி ... இரவல் வாங்கினா ...
தவறிப் போச்சுன்னா ... தகிடத் தந்தனா ...
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக ?
அம்மா இங்கே எதுக்காக ?
மாதர்களெல்லாம் கன்னிகளாக மாறனும் அதுக்காக
அப்பா மாறனும் அதுக்காக
கன்னிகளாக மாறிய பின்னால் பிள்ளைகள் எதுக்காக ?
ஐயா பிள்ளைகள் எதுக்காக ?
காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக ?
அப்பா வேறே எதுக்காக
பட்டால் தெரியும் ... பழசும் புதுசும் ...
கெட்டால் தெரியும் ... கேள்வியும் பதிலும் ...
வரவு எட்டணா செலவு பத்தணா ...
6 மறுமொழி(கள்):
எனக்குப் பிடித்த படமும், பாடலும்..
அது ஒரு காலம்...
யோகன்,
//அது ஒரு காலம்...//
மிகச் சரியாகச் சொன்னீர்கள். சமீபத்தில வரும் திரைப்படங்கள் வெறும் வணிக ரீதியிலேயே எடுக்கப்படுகின்றன.
அதையும் தாண்டி துணிச்சலுடன் படம் எடுக்கும் கமல் போன்றவர்களே commercial-ய் தோற்கும் நிலையில் இன்று நம் தமிழ் திரையுலகம் இருப்பது வேதனைக்குரியதே.
சதங்கா, இந்த பாட்டைக் கேட்கும்போது என் அப்பா சொன்னது போலவே இருக்கும் பாலச்சந்தரின் எல்லா படங்களிலுமே பாடல்களில் அவரது தனி கவனம் தெரியும். சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். என் ப்ளாக் கில் விரைவில் எழுதுகிறேன்.
சகதேவன்.
+ போட்டாச்சு!
சகாதேவன்,
வருகைக்கு நன்றி.
//இந்த பாட்டைக் கேட்கும்போது என் அப்பா சொன்னது போலவே இருக்கும//
அதே நிலமை தான் இங்கும்
//சிப்பி இருக்குது முத்தும் இருக்குது" பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். என் ப்ளாக் கில் விரைவில் எழுதுகிறேன்.//
எழுதுங்கள். முடிந்தால் பாடலையும் போடுங்கள். வாழ்த்துக்கள்.
வருகைக்கும் +க்கும் நன்றி ஜீவா
Post a Comment
Please share your thoughts, if you like this post !