இதெல்லாம் ஜூஜூபி மேட்டர் ...
Photo Credit: wikimedia.org
Blade போடுவதற்கு முன்னால் ஒரு பாட்டோட ஆரம்பிப்போம்.
செக்கச் செவந்த பழம், இது
தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லோரும் வாங்கும் பழம், இது
ஏழைக்குனு பொறந்த பழம்
ஒரு புத்துணர்ச்சி வந்த மாதிரி இருக்குமே ? மேல படிங்க ப்ளீஸ்.
அநேக வியாழக்கிழமைகளில் சீனக் கடைக்கு செல்வது வழக்கம். அப்படி நேற்று போனபோது, கண்ணில் பட்டது அந்த லேபில். 'Jujube lb $1.69'. எத எதயோ சந்தைப்படுத்தியதில், எதற்கோ ஜூஜூபினு (இன்னோவேடிவா) பேரு வைத்து விற்கிறார்கள் போல என்று எண்ணினேன். வேண்டிய பொருட்களை எடுத்துக்கொண்டு பில் போடும் போது பார்த்தால், காஷியர் அருகில் மீண்டும் அந்த லேபில்.
உடல் சோர்வா ? ஜூஜூபி
தொண்டையில் கிச் கிச் ? ஜூஜூபி
மனதுக்குப் பிடித்த மயிலாலைக் கவரணுமா ? ஜூஜூபி
என்றெல்லாம் நம்ம ஊரு விளம்பர பாணியில் சொன்னால், 'இதெல்லாம் அவ்ளோ ஜூஜூபியா ? எவன் சொன்னது ?' என்று நீங்கள் கேட்கலாம், கேப்பீங்க.
பதில் திரும்பவும் 'ஜூஜூபி' தான் :)
நம் திரைத்துறையினரின் (குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி) புண்ணியத்தில் இந்த வார்த்தை நமக்கு பிரபலம்.
எப்போதும் எளிதென்று,
தப்பான அர்த்தத்துடன்,
இப்போதும் உலா வரும்,
ஜூஜூபி ... உண்மையில் ஒரு ஹீரோ.
Ziziphus jujube என்ற தாவரவியல் பெயரில் வழங்கி வரும் 'ஜூஜூபி', மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு வகைப் பழம்.
மேலை நாடுகளில் 'Apple a day keeps a Doctor away' பழமொழிக்கு இணையாக நம்ம 'ஜூஜூபி' ஐயாவுக்கும் மதிப்பு இருக்கிறது. மேற் சொன்ன விளம்பர வரிகள் ஜூஜூபி புகழின் சிறிய உதாரணங்கள்.
பளபளக்கும் பச்சை இலைகள், அடர்ந்த முட்புதர். அதில், உருண்டு திரண்டு ஆலிவ் பழ அளவில் வடிவம். கருஞ்சிவப்பு அல்லது கரும்பழுப்பு நிறம். சிறிது உலர்ந்து சுருங்கிய தோல். மொத்தத்தில் ஆசியாவின் பேரீச்சம்பழம் என்றெல்லாம் அறியமுடிகிறது இணையத்தின் வழி.
ஆசியா எனும் போது, பட்டியலில் சீனா இல்லை என்றால் தான் ஆச்சரியப்படணும். ஆனால், இந்தியாவின் பெயரும் பார்த்த போது சிறிது ஆச்சர்யம். இந்தியாவில் கி.மு.9000 லிருந்தே பயிரிடப்பட்டிருக்கிறது ஜூஜூபி.
சீனர்கள் ஜூஜூபி டீ, ஜூஜூபி வைன் என்று தயாரித்தால், நம் நாட்டில் மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தில் ஜூஜூபி ஊறுகாய் போட்டிருக்கிறார்கள். கிழக்கே ஐரோப்பாவில் சாக்லெட், கேன்டி போடுகிறார்கள்.
ஆனால், நம்ம ஊருல பாட்டே போட்டு பட்டையக் கெளப்பீட்டாங்கள்ல ...
செக்கச் செவந்த பழம், இது
தேனாட்டம் இனிக்கும் பழம்
எல்லோரும் வாங்கும் பழம், இது
ஏழைக்குனு பொறந்த பழம்
ஆமாங்க, ஜூஜூபி நம்ம எலந்தைப்பழமே !
ரஜினி அவர்களுக்கு ஒரு கேள்வி: இப்பேற்பட்ட ஜூஜூபியை எப்படிய்யா தவறான அர்த்தத்தில் தரணியில் விட்டீர்கள் ?
Blade போதும்னு நினைக்கிறேன். இணையத்தில் ஏராளம் செய்திகள் ஜூஜூபி பற்றி குவிந்து கிடக்கின்றன. மேல் விபரங்களுக்கு கூகிளார், அல்லது விக்கி அண்ணாச்சியை அணுகவும்.
4 மறுமொழி(கள்):
Our Chinese Acupuncture doctor suggested the Jujube fruit to eat a few daily. We got this from the local chinese store (dried) http://en.wikipedia.org/wiki/File:Ziziphus_jujuba_MS_2461.JPG. But it does not taste anything close to the fresh Elanthai palam that we get in TN !
செக்கச் சிவந்த பழத்துக்கு இத்தனை சக்தியா? ஜுஜுபி என்று இதற்குப் பெயரென உங்களுக்கும் சரி, உங்கள் மூலமாக எங்களுக்கும் சரி.. இப்போதுதானே தெரிகிறது:)? ரஜனிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, என விட்டு விடுவோம்:)!
பள்ளிக்கூட வாசலில் அந்த நாளில் 100 கிராம் உழக்கில் அளந்து கொடுப்பார்கள் 5,10 பைசாக்கு.சுவை இன்னும் நிற்கிறது நாக்கினிலே. இப்போ சிட்டியிலே கண்ணுலேயே காணக் கிடைப்பதில்லை:(!
ஜெய்,
வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
ராமலக்ஷ்மி said...
//ரஜனிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, என விட்டு விடுவோம்:)!//
சரி, மன்னிச்சு விட்டுவிடுவோம்.
//பள்ளிக்கூட வாசலில் அந்த நாளில் 100 கிராம் உழக்கில் அளந்து கொடுப்பார்கள் 5,10 பைசாக்கு.சுவை இன்னும் நிற்கிறது நாக்கினிலே. இப்போ சிட்டியிலே கண்ணுலேயே காணக் கிடைப்பதில்லை:(!//
சுவையான நினைவுகளைப் பகிர்ந்ததற்கும் நன்றிகள் பல.
Post a Comment
Please share your thoughts, if you like this post !