Tuesday, September 15, 2009

ஹேப்பி டியர்ஸ் - ஹுவான் மார்டின் - யு.எஸ்.ஓபன் 2009 சாம்பியன்


Photo Credit: usopen.org

வழக்கம் போல அலுவலகப் பணிகளின் தீவீரத்தில் மூழ்கியதில் இன்று US Open 2009 Mens Final என்பது மறந்தே போனது. ஞாபகம் வந்து டிவியைத் தட்டினால், நான்கு செட்கள் ஆடி ஐந்தாவது செட்டில் ஹுவான் மார்ட்டின் லீடிங்கில் இருந்தார்.

ஒரு செகண்ட் பெடரர் தோற்கப்போவதை நினைத்து நிலைகுலைந்தாலும், அர்ஜெண்டினாவின் இளம்புயல் (20 வயது) ஹுவானின் விளையாட்டுத் திறன் ஆச்சரியம் தந்தது. போதும் ராஜர், ஐந்து வருடங்களில் நாற்பது தொடர் வெற்றி. புதியவர் வெல்லட்டும் என பிரார்த்தித்துக் கொண்டோம்.

பெடரரின் நிறைய இடர்கள், டபுள் ஃபால்ட், ஏகப்பட்ட டென்ஷனுக்கிடையில் கடைசியில் அவுட்டில் அடிக்க, ஹுவான் ஹேப்பி டியர்ஸில் விழுந்தார். தேம்பி அழுத கன்னங்களில் முகம் பூரிக்க, நேரமிண்மை குறித்து அறிவிப்பாளர் அறிவித்தும், விடாப்பிடியாக ஸ்பானிஷில் நான்கு வார்த்தைகளாவது எனது மக்களுக்கு நான் பேசவேண்டும் என வாங்கிப் பேசி, மீண்டும் தேம்பியது மிக நெகிழ்ச்சியாக இருந்தது.


Photo Credit: usopen.org

இளம் வயதில் கோப்பை வென்று யு.எஸ். ஓபனில் புதிய வரலாறு. அர்ஜெண்டினாவில் இருந்து இரண்டாவது யு.எஸ்.சாம்பியன். உலகின் ஆறாவது நிலை ஆட்டக்காரர். ஆனாலும் புதிய முகம். என்றெல்லாம் அறிவிப்பாளர் அறிவித்து, உங்களது போராட்டதின் வெற்றி ஒரு மில்லியன் அறுநூறாயிரம் டாலர், அது போக மேலும் இருநூறாயிரத்தூ சொச்ச டாலரும் சேர்த்து, ஒரு மில்லியன் என்னூறாயிரத்தி சொச்சம் டாலர் என்றார். இடையில் நிறுத்தி இத்தோடு நின்றுவிடவில்லை, லெக்ஸஸ் கார் கம்பெனி (ஏற்கனவே விலை உயர்ந்தது தான்) விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாகவும் அளிக்க, இவை எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு கண்களில் நீர்வழிய, உள்ளத்தில் வெற்றி கனியைச் சுவைத்து கொண்டிருந்தார் ஹுவான்.

மேலும் தொடர்ந்து பல வெற்றிகள் குவிக்க வாழ்த்துக்கள் ஹுவான் மார்டின்!!!

ஹுவான் மார்டினின் வெற்றி தருணங்கள் கீழே வீடியோவில்:

4 மறுமொழி(கள்):

சதங்கா (Sathanga)said...

முந்தைய பதிவு தமிழ்மணத்தில் சரியாக இணையவில்லை ...

--- அங்கு வந்த ராமலக்ஷ்மி அக்காவின் பின்னூட்டம் இப்பதிவில் --

ராமலக்ஷ்மி has left a new comment on your post "Happy Tears - ஹுவான் மார்டின் - US Open 2009 Champ...":

//வழக்கம் போல அலுவலகப் பணிகளின் தீவீரத்தில் மூழ்கியதில்//

ம்ம்:)! சரி எப்படியோ ஞாபகம் வந்து விட்டதே!

கண்டு களித்ததை காணாதவருக்கு விவரித்து, கண்டு மகிழ வீடியோ இணைப்பும்..! பாராட்டுக்கள், வேலை நெருக்கடியிலும் தந்திருக்கும் பதிவுக்கு.

நாகு (Nagu)said...

பின்னி பெடரரெடுத்துட்டான் போட்ரோ!

பெடரர் சர்வை படால் படால்னு அடிச்சதும் அமக்களம், பெடரர் சின்னபுள்ளை மாதிரி அழுவாணி ஆடியதும் அசிங்கம்....

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said ...

//ம்ம்:)! சரி எப்படியோ ஞாபகம் வந்து விட்டதே!//

ஏதோ பட்சினு சொல்வாங்கள்ல அதுபோல தான் :)) விட்டதைக் கடைசியில் காணுகையில் ஒரு பூரிப்பு எழுமே, அதான் உடனே பதிவும் போட்டாச்சு.

//கண்டு களித்ததை காணாதவருக்கு விவரித்து, கண்டு மகிழ வீடியோ இணைப்பும்..! பாராட்டுக்கள், வேலை நெருக்கடியிலும் தந்திருக்கும் பதிவுக்கு.//

நிறைவான பின்னூட்டம் கண்டு மகிழ்கிறது நெஞ்சம். மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

நாகு (Nagu) said...

//பின்னி பெடரரெடுத்துட்டான் போட்ரோ! //

ரைமிங் கமெண்ட் உங்க ஸ்டைலில் :))

//பெடரர் சர்வை படால் படால்னு அடிச்சதும் அமக்களம், பெடரர் சின்னபுள்ளை மாதிரி அழுவாணி ஆடியதும் அசிங்கம்....//

எதுவும் உள்குத்து இல்லியே பெடரர் மேல ? ;)))

Post a Comment

Please share your thoughts, if you like this post !