Tuesday, January 27, 2009

எனையே நான் தொலைத்தேன் !!!

காதல் கவிதை எழுதி எம்புட்டு நாளாச்சு. அப்பாடா, இன்னிக்கு ஒரு நல்ல மாலை நேர இனிய மனநிலையில், கவியரசரின் 'தேன்' பாடல் ஞாபகம் வர, கூடவே காதலும் பிறக்க, இதோ கவிதை (?!!) ...

---


Photo: wikimedia.org

உலகத்து அழகெலாம்
ஒன்றாய் அணிசேர்த்து,
ஓவியமாய் உலாவரும்
உனைக் கண்டு மலைத்தேன்.

மீன்களெனக் கண்கள்
மிதக்கின்ற குளத்தில்,
தூண்டிலே போடாமல்
துள்ளி நான் விழுந்தேன்.

ஈர்க்கும் காந்தமதில்
இழுபடும் இரும்பாய்,
உருக்கும் உன் இதழில்
மெல்ல நான் தவழ்ந்தேன்.

இடறி உள்விழுந்து
இம்மியும் பிசிறில்லா(த),
வெண்கலக் குரலில்
வெல்லமாய்க் கரைந்தேன்.

விழி வாசல் மூடி
உன் சுவாசம் புகுந்து,
இதயத்துக் கதகதப்பில்
எகிறி நான் குதித்தேன்.

காண்கின்ற அனைத்திலும்
வான் வரை சென்று,
கன்னி உனைக் காண
எ(ன்)னையே நான் தொலைத்தேன் !!!

16 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

\\"எனையே நான் தொலைத்தேன் !!!"\\

எங்கே எப்போ.

நட்புடன் ஜமால்said...

\\கவியரசரின் 'தேன்' பாடல் ஞாபகம் வர, கூடவே காதலும் பிறக்க\\

இப்படியும் நடக்குமா ...

நட்புடன் ஜமால்said...

\\மீன்களெனக் கண்கள்
மிதக்கின்ற குளத்தில்,
தூண்டிலே போடாமல்
துள்ளி நான் விழுந்தேன்.\\

மிகவும் இரசித்தேன் இவ்வரிகளை.

நட்புடன் ஜமால்said...

\\ஈர்க்கும் காந்தமதில்
இழுபடும் இரும்பாய்,
உருக்கும் உன் இதழில்
மெல்ல நான் தவழ்ந்தேன்.\\

வாவ். மிகவும் அருமை.

நட்புடன் ஜமால்said...

\\விழி வாசல் மூடி
உன் சுவாசம் புகுந்து,
இதயத்துக் கதகதப்பில்
எகிறி நான் குதித்தேன்.\\

நல்ல உணர்வு.

வார்த்தைகள் எகிறி குதித்து விசைபலகை வழி இனையத்தில் குதித்துள்ளது.

ராமலக்ஷ்மிsaid...

வகை ‘கவியரசர்’ என்றான பிறகு மேல பேசத்'தேன்' முடியுமா:)?

தமிழ்said...

உங்களின்
வார்த்தை என்னும்
வலைக்குள் எங்களை அல்லவா
வசப்படுத்திக் கொண்டீர்கள்

வாழ்த்துகள்

cheena (சீனா)said...

படித்தேன் - ரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் சதங்கா நற்கவிதைக்கு - காதலும் பிறந்ததா இனிய மாலைப் பொழுதினில் மகிழ்வான மன நிலையில் .........

உயிரோடைsaid...

அருமை அண்ணா நல்லாவே காதல் கவிதை எழுதறீங்க. எங்க இருந்து வர்ணனைகள் பிடிக்கிறீங்க

சதங்கா (Sathanga)said...

வாங்க ஜமால். வலைச்சரத்தில தான் ஜமாய்க்கறீங்கனா இங்கயும் கலக்கறீங்க.

அடுக்குப் பின்னூட்டங்களில்
அற்புதம்,
எடுக்க எடுக்கக்
குறையாமல் ...

ரசித்து பின்னூட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

// வகை ‘கவியரசர்’ என்றான பிறகு மேல பேசத்'தேன்' முடியுமா:)?//

ம்.ஹிம். இப்படி சொல்லி தப்பிக்க முடியாது. 'ஒரு வரி' ... வேணாம், 'ஒரு ரெண்டு வரி' நீங்க சொல்லணும். :)))

வழக்கம் போல உங்கள் வார்த்தை விளையாட்டை ரசித்'தேன்'.

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர் said...
//
உங்களின்
வார்த்தை என்னும்
வலைக்குள் எங்களை அல்லவா
வசப்படுத்திக் கொண்டீர்கள்
//

திகைக்க வைத்து,
குறுநகைக்கவும் வைத்து,
வாழ்த்துவதில்
அசத்தி விட்டீர்கள் நீங்கள்

மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா) said...

// படித்தேன் - ரசித்தேன் - மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் சதங்கா நற்கவிதைக்கு - காதலும் பிறந்ததா இனிய மாலைப் பொழுதினில் மகிழ்வான மன நிலையில் .........//

ஆமா. ஆமா. தங்கள் ரசனை கண்டு, களித்தேன்.

சதங்கா (Sathanga)said...

மின்னல்said...

// அருமை அண்ணா நல்லாவே காதல் கவிதை எழுதறீங்க. எங்க இருந்து வர்ணனைகள் பிடிக்கிறீங்க//

ரசனைக்கு நன்றிம்மா. எங்கேருந்து பிடிக்கிறது ?!! தானா வரணும் ...

அப்படினு சொல்லல :)) எல்லாம் மத்தவங்க கிட்ட இருந்து கத்துகிட்டது தான்.

நாகு (Nagu)said...

அருமை....

கடைசி வரி சூப்பர்...

சதங்கா (Sathanga)said...

நாகு (Nagu) said...

//அருமை....

கடைசி வரி சூப்பர்...//

வாசித்தலுக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !