Monday, October 8, 2007

October மாத புகைப்படப் போட்டிக்கு

October மாத புகைப்படப் போட்டிக்கு

படம் : 1 - Fried Rice

முன்னெல்லாம் ப்ரியாணிக்கும் ஃப்ரைட்ரைஸ்க்கும் வித்தியாசமே தெரியாது. ஹோட்டல்களில் ரெண்டும் ஒரே மாதிரி இருக்கும். அம்மாவுக்குப் பண்ணத் தெரியாது. கல்யாணத்துக்கு அப்புறம் தான் வித்தியாசம் தெரிஞ்சது. அதுவும் நம்ம தங்கமணி கைவண்ணம், கேக்கவே வேணாம், கலக்கிப்புடுவாங்க. அன்று காலை அவர்கள் நண்பி ஒருவரிடம் receipe வாங்கி சுடச்சுட இந்த Fried Rice செஞ்சு அசத்திட்டாங்க.




படம் : 2 - Prawns ready for masala

ப்ரான் மசாலா பண்ணலாம்னு முடிவான அன்று நம்ம புகைப்படப் பொட்டியோட சமையல்கட்டில் ஆஜர். ஆரம்பம் முதல் கடைசி வரை எடுத்த புகைப்படங்களில் சிலவே நன்றாக வந்தன. அதனால் preperation-ல் இருக்கும் படங்களில் ஒன்றை போட்டிக்கு சேர்த்திருக்கிறேன்.




கீழே உள்ளவை பார்வைக்கு

Prawn masala




Vegetable dices




Briyani

12 மறுமொழி(கள்):

நாகு (Nagu)said...

//ஆரம்பம் முதல் கடைசி வரை எடுத்த புகைப்படங்களில் சிலவே நன்றாக வந்தன.//

நக்கலான ஆளுய்யா நீர். ப்ரான் மசாலா/ பிரியாணி எப்படி இருந்தது என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்.
எதோ உம்ம புண்ணியத்தில், பிரைட் ரைஸ் வைத்த டப்பா ரொம்ப அழகு, பக்கத்துல இருந்த கேரட் சொகுசுன்னு சொல்லாமல் இருந்தீரே, அதுவே போதும்.

அது கிடக்கட்டும். அது யார் தங்கமணி? ஆள் வேற மாத்தியாச்சா?

ஆஹா பத்திகிச்சு, பத்திகிச்சு....

ஒப்பாரிsaid...

4th one is good. best of luck.

சதங்கா (Sathanga)said...

ஒப்பாரி,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

நாலாவது படம், கொஞ்சம் out of focus ஆகிவிட்டது ... அதனால் தான் ஆட்டத்தில் சேர்க்கவில்லை :)

சதங்கா (Sathanga)said...

நக்கலின் தலைவர் நாகு,

உம்ம குசும்பின் வெளிப்பாடு சில வரிகளிலேயே தெரிகிறதே. என்ன போய் நக்கல் பேர்வழி என்கிறீர் ;-)

போட்டோ சரியா வரலை சொன்னத என்னமா develop பண்ணி, அதுவும் தங்கமணி யாருனு வேற கேட்டு ... ஹூம்ம்ம் ... ஆக மொத்தம் தினசரி சாப்பாட்டுல கை வைக்கிறீர் ...

ராஜ நடராஜன்said...

உங்க பின்னூட்டத்திற்கு பின்தான் உங்க படம் பார்க்க வந்தேன்.எனக்கு பசுமதி வறுவல் சோறும்,இறால் மசாலாவும் கொடுங்க!

(பி.கு.பரிமாறும் போது கொஞ்சம் மல்லி இலைகளை தூவி இருந்தீங்கன்னா அழகுக்கு அழகு.ருசிக்கு ருசி.)

manjusaid...

வாழ்த்துக்கள்


Vegetable dishes படம் நன்றாக இருக்கு

கைப்புள்ளsaid...

Vegetable Dices படம் ரொம்ப நல்லாருக்குங்க. வாழ்த்துகள்.

சதங்கா (Sathanga)said...

நன்றி மஞ்சு & கைப்புள்ள

Anonymoussaid...

இந்த ஃப்ரைட் ரைஸ் செய்முறை கிடைக்குமா ப்ளீஸ்?

Anonymoussaid...

இந்த பிரியாணி செய்முறை கொடுக்க முடியுமா ப்ளீஸ்? ரொம்ப ஆசையா இருக்கு

Anonymoussaid...

biriyani receipe please

சதங்கா (Sathanga)said...

recipe கேட்ட அனைவருக்கும் நன்றி. போட்டில பரிசு கிடைக்கலேன்னாலும், உங்கள் ஆதரவினால் ரொம்பவே சந்தோசம். ஒரு பதிவாக recipe தயாராகிக் கொண்டிருக்கிறது. அதுவரை கொஞ்சம் பொருத்துக் கொள்ளுங்கள் :)

ஒரு அனானி (ஸ்ரீ) முதலில் recipe கேட்டதுக்கே எங்க தமிழ் சங்கத் தலைவர், "யோவ் அது நீ தானே" னு நக்கல் அடிக்க ஆரம்பிச்சிட்டார். இப்போ எல்லாரும் அனானியா வந்திருக்கீங்க. யாராவது login பண்ணி வாங்கப்பா ...

Post a Comment

Please share your thoughts, if you like this post !