மழைக் காலம்
போர் கொள்ளும் மேகம்
தார் போலக் கருக்க
ஒளி மினுக்கல் மின்னி
துளித் துளியாய்த் தூவ
சிதறும் வெள்ளிக் கம்பி
உதறி மண்ணில் இறங்க
வட்ட வட்டமாய்ச் சொட்டி
வறண்ட பூமி நனைய
தென்றல் கூடிய காற்றில்
மண்ணின் வாசனை கசிய
மிதமாய் நடுக்கும் குளிரில்
இதமாய் தேகம் சிலிர்க்க
மரக்கிளை இலைகளின் இடுக்கில்
தூறல்த் துளிகள் தங்க
நடை பாதையில் ஈரம்
கேட்டுக் கதவில் ஈரம்
வீட்டுக் கூரையில் ஈரம்
ஆட்டு மந்தையில் ஈரம்
எங்கும் எதிலும் ஈரம்
பங்கு கொண்டு இருக்க
மழைக் கால ஈரம்
மனம் முழுதும் பரவியதே !
6 மறுமொழி(கள்):
அப்படியே (கவுஜ) மழயில நனைஞ்ச மாதிரி இருக்கு ஓய்...
ஆனா ஒண்ணு - ஊர்ல மழையே காணோம்னு அவன் அவன் வாட்டர் ரெஸ்ட்ரிக்ஷன் கொண்டு வரான். நீர் மழைய கனவு கண்டு கண்ணு முன்னாடி கொண்டுவந்து வயத்தெரிச்சல கொட்டிக்கிறீர். ஆமாம் இப்பல்லாம் காலைல பத்து மணிக்கே கனவா? என்ஜாய் மாடி! உம்ம கனவுல மழைல டெஸ்டர் பேபி நனையக்கடவது!
எதுகையுடன் அழகாக இருக்குங்க கவிதை!
நாகு,
//அப்படியே (கவுஜ) மழயில நனைஞ்ச மாதிரி இருக்கு ஓய்...//
ஆஹா ... இதையே உங்க பாராட்டா எடுத்துக்கறேன்.
//ஆனா ஒண்ணு - ஊர்ல மழையே காணோம்னு அவன் அவன் வாட்டர் ரெஸ்ட்ரிக்ஷன் கொண்டு வரான். //
எதுவுமே கிடைக்காத போது தான் அதன் தாக்கம் அதிகம் இருக்கும். அதுபோலத் தான் இதுவும். :)
ஜீவா,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
அழகு தமிழில் அருமையாக எளிய சொற்களினால் இயற்றப்பட்ட கவிதை. படித்தேன் ரசித்தேன்
சீனா,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
Post a Comment
Please share your thoughts, if you like this post !