ச்சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் - செய்முறை
தேவையானவை :
பாஸ்மதி அரிசி - 1 கப்
குடைமிளகாய் - 1/2
காரட் - 1
பீன்ஸ் - 5
பட்டானி - 1/4 கப்
பேபி கார்ன் - 4
வெங்காயம் - 1
காளான் - 3
சோய் சாஸ் - 1 ஸ்பூன்
ச்சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
டொமேடோ சாஸ் - 1 ஸ்பூன்
கருப்பு மிளகு - as required
கீழே உள்ளவற்றை அறைத்து விழுதாக்கிக் கொள்ளவும்:
பூண்டு - 3 பல்
இஞ்சி - சிறிது
பச்சை மிளகாய் - 3
செய்முறை :
1. ஒருபுறம் பாஸ்மதி அரிசியை ரைஸ் குக்கரில் (1 + 1/4) கப் நீர், சிறிது பட்டர், அரிசிக்கேற்ப உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
2. மறுபுறம் மிளகைத் தூளாக்கிக் கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் (Baby corn தவிர்த்து) சிறிதாக நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். படத்தில் குடைமிளகாயும், காரட்டும் தெரிவது போல். Baby corn-ஐ வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
3. வானலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றவும். அதில் விழுதை இட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
4. பின்பு வெங்காயத்தையும் அதில் சேர்க்கவும். லேசாக வதங்கினால் போதும். அதன் பின் மற்ற காய்கறிகளையும் சேர்க்கவும். கால்வாசி வெந்தால் போதும், அல்லது ஓவர்குக் ஆகிவிடும்.
5. மிளகு, உப்பு இவற்றையும் வதக்கலில் சேர்த்துக் கொள்ளவும். சிறிது கிளறி அனைத்து சாஸ்களையும் ஊற்றி மீண்டும் கிளறவும். சில நொடிகளில் அடுப்பை அனைத்துவிடலாம்.
6. பாஸ்மதி அரிசி வெந்த பின்பு, காய்கறி வதக்கலை அதில் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும். அழகான container-ல் மாற்றி, வெங்காயத்தாள் இருந்தால், அதை சிறுசிறு வட்டங்களாக நறுக்கி, மேலாகத் தூவினால் அழகாக இருக்கும். அற்புதமான ச்சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் ரெடி.
ஃப்ரைட் ரைஸ் செய்து, சுவைத்து மகிழ்ந்து சொல்லுங்கள்.
Thanks to PIT and Shri for encouraging me to post this recipe.
Questions and Suggestions are Welcome !

9 மறுமொழி(கள்):
சதங்கா!
//அழகான container-ல் மாற்றி//
உங்க படம் வெற்றி பெற இது உதவியிருக்கும்.. ஹ்ம். என்ன தான் உங்க தங்கமணி சூப்பரா சமைச்சாலும் படத்த taste பண்ணிட்டு பரிசு கொடுக்க மாட்டாங்க.. வருத்த படாதீங்க.
ஜெ.
என்ன சதங்கா. ஃப்ரைட்ரைஸ் ரொம்ப அருமை போல. எங்க பார்த்தாலும் ச் குடுத்து கெளப்பியிருக்கீங்க :-)
(அது என்ன, 'ச்'சைனீஸ்...)
ரொம்ப விளக்கம சொல்லிரிங்களே ..வீட்டுல நம்ம சமயல் தானா?..
it is a verygood receipe.
very easy to follow.
Kanchana Radhakrishnan
jokeskitchentips.blogspot.com
அனைவரின் வரவுக்கும் நன்றி.
ஜெ,
வருத்தமெல்லாம் இல்லீங்க. நடுவர் அல்லாத பொதுஜனம் ஆதரவு கிடைக்குதே அது சந்தோசம் தானே !
நாகு,
கேட்'ச்'சியா இருக்கட்டுமேனு தான்.
ரசிகன்,
இப்பத்தான் நம்ம தங்கமணிய blog-உள்ள இழுத்து வர்றேன் அது புடிக்கலையா உங்களுக்கு. விளக்கமா அவுக சொல்லச் சொல்ல என் பணி தட்டச்சிட்டது ;-)
காஞ்சனா ராதாகிருஷ்ணன்,
பதிவ போடும்போடு வழக்கம் போல கதை, கட்டுரை மாதிரி எழுதாம, ரொம்ப சுருக்கமா easy-யா இருக்கனும் என்று என் மனைவியின் அன்புக் கட்டளை. அதன் நோக்கம் நிறைவேறியதில், உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.
ரொம்ப நன்றி திரு சதாங்கா அவர்களே.
இங்கு ஒரு உண்மை சொல்ல விரும்புகிறேன். அனானியாக மூன்று க்மெண்ட் போட்டது நாந்தென். மொதவாட்டி போட்டபொது எதுவும் வரலே. அதனால எப்படியாவது செய்முறை தெரிஞ்சிக்கிர ஆர்வத்தில மறுக்கா ரெண்டுவாட்டி தட்டிட்டுனுங்க்கோ. மன்னிசிப்போடுங்கோ. இந்த சாப்பாட்டை செய்ஞ்சு சாப்பிட்டுபோட்டு சொல்ரெனுங்கோ.
இப்படிகு ஸ்ரீங்கோ
கொஞ்சம் 'ஓ'வரா இருக்குதுங்கோவ் ... காமெடி பண்ணாம இருந்தா சரித்தானுங்கோவ் !
உங்கள் உணவில் பொருள் (?) குற்றம் காண்கிறேன்.முக்கியமா அஜ்னமோட்டோ இல்லீங்க.பேரு வேற ச்சைனீஸ்.எனக்கு இன்னொரு தட்டு புதுசா செஞ்சு அனுப்புங்க!
பொருள் குற்றம் கண்ட நட்டு
புதுசா செஞ்சு அனுப்பறேன் தட்டு
அதில் எங்கு அஜினோமோடோ இட்டு
எப்படி அனுப்பட்டும் போஸ்ட்டு ?
தட்டு தானே புதுசா கேக்கறீர் ! உணவை அல்லவே ;-)
Post a Comment
Please share your thoughts, if you like this post !