Sunday, October 28, 2007

கிராமத்து பேருந்துப் பயணம்



விரைந்து வந்துநின்ற
அரசுப் பேருந்தில்

விறுவிறுவென ஏறும்
சுறுசுறுப்புக் கூட்டத்தினர்

ஜன்னலோரம் துண்டுபோடும்
மின்னல் மாந்தர்கள்

புகுந்து உள்ளேறும்
புத்திசாலிச் சிறுவர்கள்

இடித்துக் கீழிறங்கும்
களைத்த பயணிகள்

கூச்சலிடும் மனிதர்கள்
குழந்தையின் கூக்குரல்

திருவிழா கூட்டமென
பேருந்து நிரம்பியதில்

அமர்ந்தவர் சிலர்
அண்டிநிற்பவர் பலர்

வேகாத வெய்யிலிலும்
தேயிலைநீர் பருகி

கழுத்தில் கர்ச்சீப்போடு
கரம்சுழற்றும் ஓட்டுனர்

பயணச் சீட்டெழுதிபின்
பணவிசிறி விரலிடுக்கில்

கம்பியில் தனைச்சாய்த்து
கணக்கெழுதும் கண்டக்டர்

ஓடும் பேருந்தில்
ஓரமாய் ஜன்னலில்

காற்றின் வேகத்தில்
தேகமது சிலிர்த்திருக்க

கண்மூடித் தலைசாய்த்து
கனாக்கண்டு பயணிக்க

இனம்புரியா இன்பம்வந்து
நம்மனதைத் தாலாட்டும் !

10 மறுமொழி(கள்):

Silver Princesaid...

படித்தவுடன் பச்சமலை அடிவாரத்தில் இருக்கும் பாட்டி ஊருக்கு செல்லும் ஞாபகம் வந்திடுச்சுங்கோ.....

ஆமா எந்த ஊரில் இருந்து எந்த ஊர் சென்றீர்கள்....? அத செல்லலியோ....??

Anonymoussaid...

Spelling mistakes......

விருவிருவென
சுருசுருப்பு

சதுக்க பூதம்said...

Excellent

நாகு (Nagu)said...

அருமை. பஸ்ஸில் போனது போல இருக்குது. அந்த காலத்து பஸ்ஸில் போயிருக்கிறீர்களா? ஒரு பக்கம் 4 பேர் உக்காருவது. இன்னொரு பக்கம் நெடுக்க பெஞ்ச் மாதிரி. அந்த காலத்தில் தொலைதூரம் போவதும் சுவாரசியம்தான். வழியில் ஒரு மணிநேரம் நிப்பாட்டி சாப்பாடு. யாருக்கும் அந்த காலத்தில் அவசரமில்லை.

ராஜஸ்தானில் குளிரிலும், வெயிலிலும் பஸ்ஸின் டாப்பில் உட்கார்ந்து போனதும் உண்டு.

சதங்கா (Sathanga)said...

ஜாவா,

வருகைக்கு நன்றி.

இந்த ஊரு என்றில்லை, பொதுவா எல்லா சிறு நகரங்களில் இருந்தும் கிராமத்துக்குச் செல்லும் பேருந்துப் பயணம் எப்படி இருக்கும்னு யோசித்து எழுதியிருக்கிறேன்.

சதங்கா (Sathanga)said...

அனானி,

பிழை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
அப்படியே கவிதய பத்தி ஒரு வரி சொல்லிருந்தா இன்னும் நல்லா இருக்கும்.

சதங்கா (Sathanga)said...

சதுக்க பூதம்,

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

சதங்கா (Sathanga)said...

நாகு,

பாராட்டுக்கு நன்றி.

என் மிகச் சிறு வயதில் நீங்கள் குறிப்பிட்டது போல பஸ் பார்த்திருக்கிறேன். பழைய படங்களிலும் பார்த்த நினைவு.

//யாருக்கும் அந்த காலத்தில் அவசரமில்லை.//

ஆஹா, படிக்கறதுக்கே எவ்வளவு இனிமையா இருக்கு. அந்த நாட்கள் திரும்ப வருமா ???

cheena (சீனா)said...

மலரும் நினைவுகளை
பலரும் எழுதத் தொடங்கி விட்டனர்.
இனிய இளமைக்கால நினைவுகள் பசுமையாக அசை போட உதவி செய்வது ஆனந்தமாக இருக்கிறது.அந்த இனிய இன்ப அனுபவங்களை இழந்த காரணத்தால் தான் அசை போடுகிறோம்.

//கழுத்தில் கர்ச்சீப்போடு
கரம்சுழற்றும் ஓட்டுனர்//


//பயணச் சீட்டெழுதிபின்
பணவிசிறி விரலிடுக்கில்

கம்பியில் தனைச்சாய்த்து
கணக்கெழுதும் கண்டக்டர்//

ஓட்டுனரையும் நடத்துனரையும் இவ்வளவு அழகாக வர்ணிப்பவர்கள் யாருமில்லை

சதங்கா (Sathanga)said...

சீனா,

//மலரும் நினைவுகளை
பலரும் எழுதத் தொடங்கி விட்டனர்.//

அழகாய் இருக்கிறது உங்கள் கவிதை வரிகள்.

வாசித்தலுக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி.

//ஓட்டுனரையும் நடத்துனரையும் இவ்வளவு அழகாக வர்ணிப்பவர்கள் யாருமில்லை//

இன்னும் இந்த அளவை நான் எட்டவில்லை, எட்ட வேண்டிய தூரம் இன்னும் நிறைய !!! உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !