Monday, September 17, 2007

ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர் (Flashback)

'இது உண்மைக் கதை அல்ல' என்று தொடங்கியிருந்தாலும், அதன் பொருள் நாம் அனைவரும் அறிந்ததே ! திரைத்துறையில் சந்திக்கும் 'இருவர்', தம்தமது திறமைகளால் இவ்வையத்தை (தமிழகத்தை) ஆண்டிட எண்ணுகின்றனர்.

சினிமாவில் ஜொலிக்க ப்ரயாசைப்படும் ஆனந்தன், தான் கதாநாயகனாய் நடிக்கும் முதல் படம் பாதியில் நின்றவுடன், என்ன செய்வதென்று தவிக்கிறார். வாழ்க்கையே அவ்வளவு தானோ என்று பரிதவிக்கிறார். சினிமாவில் எப்படிப் பரிமளிக்கலாம் என்று தான் எப்போதும் எண்ணுகிறார். சிறு சிறு வேடங்கள் ஏற்பதற்கும் தன்னை தயார் படுத்திக் கொள்கிறார்.

தமிழ்செல்வனின் அறிமுகம் கிடைத்து, நட்பைத் தொடரும்போதும் சினிமா பற்றித்தான் அதிகம் பேசுகிறார்.

இப்படி இருக்கும் ஆனந்தனை 'அரசியல்' ஆர்வம் எப்படித் தொற்றிக்கொண்டது ?

நண்பனின் செயல் ? கல்பனாவின் ஆற்றல் ?

அல்லது தான் பட்ட காயங்களால் தான் மக்களின் செல்வாக்கோடு ஆனந்தன் வெற்றி அடைந்தாரா ?

ஆனந்தனுக்கு சாத்தியமானதெனில் 'சூப்பர் நட்சத்திரம்' ஏன் அரசியல் பிரவேசம் செய்யவில்லை ?

யாராவது விடை தெரிந்தால் சொல்லுங்கள் ...

மணிரத்னம் அவர்களின் பரிமாணத்தில், மோகன்லால் - ஆனந்தன் - M.G.R. என்ன ஒரு செலக்சன் ! சுருள் முடியும், வெளிர் நிறமும், கல்யாணம் கட்டியவுடன், புஷ்பாவிடம், "ஆமா உன்னிடம் மயங்கிட்டேன், ஆனா யாரிடமும் சொல்லிடாதே" என்று காதல் மொழி உரையாடுவதும், குழந்தைகள், பெரியவர் என அனைவரிடமும் நெருங்கிப் பழகுவதும், அரசியலில் ஜொலிப்பதும், அப்படியே M.G.R.ஆக மிகத் தத்ரூபமாகச் செய்திருந்தார் மோகன்லால்.

இதோ இக்காட்சியில் M.G.R.ஐக் காணுங்கள்.

4 மறுமொழி(கள்):

மீட்டர்பாலாsaid...

பட‌த்த‌ திரும்ப‌ பாக்கும் ஆர்வ‌‌த்த‌ தூண்டி உட்டுட்டீங்க‌. பாத்துட‌றேன்.

நாகு (Nagu)said...

குண்டாக இருக்கும் மோகன்லால் எங்கே? கட்டுமஸ்தான எம்ஜியார் எங்கே என்று நினைத்துக்கொண்டு பார்த்தது நினைவுக்கு வருகிறது. வாத்தியாரின் மேனரிஸத்தை கண்முன் நிறுத்தி கலக்கினார் மோகன்லால். அரசியல் நிர்ப்பந்தத்தால் படம் கொஞ்சம் வழவழ கொழகொழ ஆகிவிட்டது.

சதங்கா (Sathanga)said...

மீட்டர்பாலா,

வருகைக்கு நன்றி. படத்தைப் பார்த்துட்டு உங்க விமர்சனங்களளயும் பகிர்ந்துக்கங்க.

நன்றி.

சதங்கா (Sathanga)said...

//குண்டாக இருக்கும் மோகன்லால் எங்கே? கட்டுமஸ்தான எம்ஜியார் எங்கே என்று நினைத்துக்கொண்டு //

நாசருக்கும் - அண்ணாவுக்கும், ப்ரகாஷ்ராஜ்க்கும் - கருணாநிதிக்கும் ஒன்றும் நினைக்கவில்லையா ;-) கொஞ்சம்கூட அவர்கள் கதா பாத்திரத்திற்குப் பொருந்தவில்லை என்பது என் கருத்து.

Post a Comment

Please share your thoughts, if you like this post !