Monday, August 10, 2009

சிறந்த நட்புக்குரிய பதிவர்களும், விருதும் !


'சிறந்த நட்புக்குரிய பதிவர்' என்ற தொடரில் நானும் ! என்று எண்ணுகையில் உள்ளம் உவகை கொள்கிறது. வலையில் மார்க்கண்டேயர் என்று புகழப்படும் 'சீனா ஐயா'விடம் இருந்து இவ்விருது எனும் போது, அதை விவரிக்க வானளவும் வெள்ளைத் தாள் போதாது !!

முதலில் நட்பு என்பது வீட்டுக்குள் உருவாக வேண்டும். "எங்க அப்பா கூடவும் அம்மா கூடவும் சண்டை. பேசியே பல வருஷம் ஆச்சு. அனா, எங்க சித்தப்பா கூடவும், மாமா கூடவும் அப்பிடி" என்று 'பட்டிமன்ற புகழ் லியோனி' மாதிரி சொன்னா, அவர் வரவழைக்கின்ற சிரிப்பு தான் நமக்கு வரும்.

ச‌ரி, வீட்டுக்குள்ள முதலில் ந‌ட்பு எனும் போது, இந்த‌ வ‌லையையும் ந‌ம‌து வீடு என்று சொல்ல‌லாமா ?

எது தான் ஊரோ ?
என்ன‌ தான் பேரோ ?
ப‌ந்த‌ங்க‌ளும் பாச‌ங்க‌ளும்
பதிவுகளில் தான் குறைவோ ?!

சில நேரங்களில் சில பதிவுகளில் அடித்துக் கொள்வதும் நடக்கத் தான் செய்கிறது. இதை ச‌ற்று த‌ள்ளி வைப்போம். குடும்ப சண்டை மாதிரி, வரும் போகும். இதையெல்லாம் மீறி அநேக‌ம் ப‌திவுக‌ள் ந‌ட்பு பாராட்டித் தான் ப‌திய‌ப்ப‌டுகிற‌து. "ப்லாக‌ர் ஃபாலோஅர்" உதார‌ண‌ம் ஒன்றே போதுமே !

என்ன‌ தான் இரண்டரை ஆண்டுகளாக வ‌லையில் (டிஜிட்ட‌ல்) குப்பை கொட்டிக் கொண்டிருந்தாலும், எனது ந‌ட்பு வ‌ட்ட‌ம் க‌டுக‌ள‌வே ! முழுமுத‌ற் கார‌ண‌ம் நேர‌மின்மை. ஆனாலும் அவ்வ‌ப்போது ப‌டிக்கும் ஒரு சில ப‌திவுக‌ளுக்கும் ம‌றுமொழி இட‌த் த‌வ‌றுவ‌தில்லை.

அவ‌ர்க‌ளையும் ம‌ன‌தில் கொண்டு, வ‌ழ‌க்க‌ம் போல‌ வ‌ந்து வாசித்து நம்மை(யும்) பாராட்டும் சில‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் க‌ண‌க்கில் கொண்டு, அவ‌ர்க‌ள் வ‌லைப் பூவையெல்லாம் நுழைந்து பார்த்தால், எங்கெங்கு காணினும் விருது ம‌யம் !!! என்ன‌ செய்வ‌தென‌த் த‌விக்குது எந்த‌ன் ம‌ன‌ம் ???



விருதின் விதி முறைகள் படி நான் எனக்குப் பிடித்த சிறந்த நண்பர்களுக்கு இத்தொடர் விருதினை வழங்க வேண்டும்.

விதி முறைகள் :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.
2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.
3. அவர்களிடம் உங்களுக்கு பிடித்த செயல் - ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.
4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்படக் கூடாது. அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.


எப்பொழுதுமே 'தொட‌ர்' எனும் போது, முதலில் ம‌ன‌தில் தொட‌ர்வ‌து இவ‌ரின் எண்ண‌மே. கார‌ண‌ம் ப‌திவுல‌கையும் தாண்டி(ய) ந‌ட்பான‌து. ந‌ட்புக்கு ஒரு சிற‌ந்த எடுத்துக் காட்டும் கூட‌. இந்த விருதை முதலில் இவருக்கு அளிக்கிறேன். உல‌கில் 99 விழுக்காடு ஒருவித‌ எதிர்பார்ப்புட‌ன் தான் ந‌டைபோடுகிற‌து ந‌ட்பு. ஏதாவ‌து ஒருவித‌த்தில‌ உத‌வியா இருப்பார்கள் என்று இருபுறமும் இருக்கும்‌ செல்ஃபிஷ்னெஸ் என்றும் சொல்ல‌லாம். வ‌லையிலும் கூட‌ பாருங்க‌ள், இட்டால் தான் கிடைக்கும் ம‌றுமொழியும் :)). ஆனால் இந்த‌ ந‌ண்ப‌ரைப் பொறுத்த‌ அள‌வில் எந்த‌வித‌ எதிர்பார்ப்பும் இன்றி, எங்களுக்கு எப்பொழுது எந்த உதவி தேவை என்றாலும் தயங்காது முன்நிற்பார். இத்த‌னைக்கும் நாங்க‌ள் இருக்கும் தொலைவோ ஆயிர‌த்து இருநூறு மைல்க‌ளுக்கும் அப்பால். உடன் வரும் பால்ய‌ ந‌ண்ப‌ர்க‌ளே ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் கூற‌, இவ‌ரின் உத‌வி க‌ண்டு திகைப்பது உள்ள‌ம். இத்தனைக்கு இவரைக் கடந்த சில வருடங்களாகத் தான் தெரியும். அவர் வேறு யாரும‌ல்ல, ரிச்ம‌ண்ட் த‌மிழ் ச‌ங்க‌த்தின் முன்னாள் பிர‌ஸிடென்ட் ஐயா நாகு அவ‌ர்க‌ளே. (நாகு: உங்க‌ வீட்டுப் ப‌க்கம் யாராவ‌து க்யூ க‌ட்டி நின்னா நான் பொறுப்பு கிடையாது :)))

'எதிர்பார்ப்ப‌ற்ற‌ ந‌ட்பு என்றும் நிலைக்கும் !'. மேலே சொன்ன‌வ‌ருக்கு ச‌ற்றும் குறைந்த‌வ‌ர‌ல்ல‌ இவ‌ர். நான் யார், ஊர் எது, படிப்பு எது, பார்க்கும் வேலை எது ... இப்ப‌டிப் ப‌ல‌ 'எது'க்க‌ள் தெரியாது. எழுத்தின் மூல‌ம் அறிமுக‌மே, அது இன்றும் தொட‌ர்கிற‌து. இவ‌ர் அதிக‌ம் ப‌திவ‌துமில்லை, ஆனாலும் இவர் சேர்த்த நட்புக்களின் குவியும் மறுமொழி கண்டு அல‌ட்டிக் கொள்வ‌தும் இல்லை. 'தொட‌ர்' அப்ப‌டி என்றாலே 'வேண்டாம்பா ஆள‌விடுங்க‌' என்று தொட‌ர்ந்து ஓடிக் கொண்டிருப்ப‌வ‌ர். இந்த‌ முறை பிடித்து நிற்க‌வைத்துப் பார்ப்போம் :)) இந்தாங்க, ராம‌ல‌ஷ்மி அக்கா பிடிங்க‌ உங்க‌ விருதை. இதுவரை ஏராள‌மானோர் கொடுத்திருந்தாலும் என‌து விருதையும் ஏற்று கொள்ளுங்க‌ள்.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்த, இன்னும் ஒலிக்கின்ற‌ வரிகளுக்குச் சொந்தக்காரரின் புதல்வர். இவ‌ரிட‌ம் என‌க்குப் பிடித்த‌து இவ‌ரது எளிமை. பொஸ‌ஸிவான‌ ந‌ண்ப‌ரும் கூட‌. ப‌திவுல‌கில் இருந்து ச‌ற்று வில‌கி சில‌ ஆண்டுக‌ள் ஆகிற‌து. சென்ற‌ முறை சிங்கை சென்ற‌ போது, தொலைபேசி அழைப்பில், "எங்கேடா இத‌ற்கெல்லாம் நேர‌ம் இருக்கிற‌து. அதுவுமில்லாம‌ல் ப்லாக்குள்ள‌ புகுந்தா வெளியே வ‌ர‌ ரொம்ப‌ சிர‌மாக‌ இருக்கிற‌து. குடும்ப‌ம், குழ‌ந்தைக‌ளுக்கு நேர‌ம் செல‌வ‌ழிக்கிற‌து குறைந்து போச்சு. அதான் இப்ப‌ல்லாம் ப்லாக் ப‌க்க‌மே வ‌ருவ‌தில்லை" என்றார். அவரை, வீக்கென்ட் சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் ம‌ட்டும்ங்கிற மாதிரி ஒரு அட்ட‌வ‌னை போட்டுக்க‌ சொல்லி மீண்டும் வ‌லைக்குள் அழைத்து வ‌ர‌ இந்த‌ விருதை வழங்குகிறேன். ந‌ன் அதெர் த‌ன் க‌விய‌ர‌ச‌ரின் க‌டைக்குட்டி வெங்கட் கண்ணதாசன்.

8 மறுமொழி(கள்):

நட்புடன் ஜமால்said...

வாழ்த்துகள் அனைவருக்கும்.

ராமலக்ஷ்மிsaid...

அன்பான விருதுக்கு மிகவும் நன்றி சதங்கா!

விருதை ‘வேண்டாம்பா’ன்னு யாரும் சொல்வார்களா:))? சந்தோஷமாகப் பதித்துக் கொண்டாயிற்று என் முகப்பில்:)!

//முதலில் நட்பு என்பது வீட்டுக்குள் உருவாக வேண்டும். //

நல்ல கருத்து.

//இந்த‌ வ‌லையையும் ந‌ம‌து வீடு என்று சொல்ல‌லாமா ?//

சொல்லலாம்.

விருதினைப் பெற்ற உங்களுக்கும், உங்களால் தரப்பட்ட இருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!

வெங்கி / Venkisaid...

நல்லதொரு விருதுக்கு நன்றி சதங்கா!
விருதுக் கிடைத்த மற்ற இருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!
கூடிய விரைவில் எதிர் பாருங்கள் என்னுடைய பதிவுகளை!

நாகு (Nagu)said...

விருதுக்கு நன்றி, சதங்கா.

படித்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். நம்பளதான் சொல்ராறா வேற யாரையோவான்னு... :-)

நான் செய்வது எல்லாம் உங்களோடு தொலைபேசியில் கதைப்பதுதான். உங்கள் பால்ய நண்பர்கள் அதுகூட செய்வதில்லை என்றால் எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது :-) சரியாக விசாரிக்கவேண்டும்....


//எந்த‌வித‌ எதிர்பார்ப்பும் இன்றி// அதெல்லாம் ஒன்றுமில்லை. உறுமீன் வருமளவு வாடியிருக்கிறேன். அவ்வளவுதான் :-)

சதங்கா (Sathanga)said...

ஜமால்...

வழக்கம் போல வந்து வாழ்த்தியதற்கு நன்றிகள்.

***

ராமலக்ஷ்மி அக்கா...

விருதை மனதார ஏற்று கொண்டதற்கு வாழ்த்திற்கும் நன்றிகள்.

***

வெங்கட்,

தவறாது வந்து விருதினை ஏற்று கொண்டதற்கு நன்றி. எதிரிப்பார்க்கிறோம் பதிவுகள சீக்கிரம் தேடலில் இருந்து.

***

யோவ்வ் ரிச்மண்ட் குசும்பர்,

கதைப்பது மட்டும் செய்துவிட்டு, உறுமீனுக்கு காத்திருக்கிறீரா ... ஹிம்ம் என்னத்த சொல்ல :))))

cheena (சீனா)said...

நன்றி சதங்கா - நல்வாழ்த்துகள் அனைவருக்கும்

Kavinayasaid...

நல்ல நண்பர்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கீங்க :)

வாழ்த்துகள் X 4 :)))

சதங்கா (Sathanga)said...

கவிநயா said...

//நல்ல நண்பர்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கீங்க :)

வாழ்த்துகள் X 4 :)))//

x 4 க்கு எல்லார் சார்பாகவும் மிக்க நன்றிங்க.

Post a Comment

Please share your thoughts, if you like this post !