Friday, June 5, 2009

பழமொழி வலைமொழி

எவ்வளவோ மாற்றங்கள் உலகில் ஏற்பட்டாலும், இன்னும் நமக்கெல்லாம் 'பாட்டி வடை சுட்ட கதை' ஞாபகம் இருக்கிறதல்லவா !!! எல்லாம் செவி வழி, அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, அக்கா, மாமா, இப்படி மக்களோடு நெருங்கிப் பழகியதால் சட்டென்று நம்மனதில் ஒட்டிக் கொண்டவை.

இன்று நிலைமை அப்படியா ? ஊருக்கு ஓர் மூலையில், அல்லது பல நாடுகளில், என குடும்பக் கட்டமைப்பே பிளவுண்டு வாழ்கிறோம். "கூகளே கடவுள் தேடலே வாழ்க்கை" என்றும் மனிதருடன் சகவாசத்தைக் குறைத்துக் கொண்டோம்.

ஆங்க் ... மேலே குறிப்பிட்ட பாட்டி கதை மாதிரி, பழமொழிகளும் இன்று வரை ஜீவனோடு நம்முடன் பயணிக்கிறது. இவையும் செவிவழிப் பரவிய ஜீவன்களே. "சுறுங்கக் கூறின் விளங்கப் பெறும்" என்பது பழமொழிகளுக்கே பொருந்தும் பழமொழி. குட்டிக் குட்டியா ஒற்றை வரிகளில், அப்படியே இலகுவாக நம் மனதில் ஏறி அமர்ந்து கொள்ளும் அவை.

சரி, அப்படிப் பட்ட பழமொழிகளை, நம் வலைப்பூவோடு, பதிவரோடு, பதிவுகளோடு, பின்னூட்டங்களோடு பொறுத்திப் பார்ப்போமே ! என் மனதில் தோன்றிய சில வலைமொழிகள்.

போட்டா மொக்கை, இலேன்னா பின்னூட்டம்.
வரும் சிறு பின்னூட்டமும், அடுத்த பதிவிற்கு உதவும்.
போட்டால் (தான்) கிடைக்கும் பின்னூட்ட‌ம்.

பதியாட்டி கும்மி பதிஞ்சா மொக்கை.
மொக்கை பதிவு போட்டாலும் தனித் தளம் வேண்டும்.
பதிவு சிறுத்தாலும் மொக்கை குறையாது.

பதிவருக்குத் தன் பதிவு பொன் பதிவு.
கருத்துள்ள போதே இடுகை இடு.
மக்கா, நமக்கு மொக்கையும் ஆயுத‌ம் !


எனக்குத் தெரிஞ்ச அளவிற்கு சுமாரா எழுதியிருக்கிறேன். நம் வலைப்பதிவர்களின் திறமையை நான் சொல்லித் தெரிய வேண்டுமா ? எவ்வளவோ க்ரியேடிவிட்டி அவங்க மனசுக்குள்ள, அத்தனையும் பதிவுகளாய், பின்னூட்டங்களாய் பார்த்து, படித்து ரசிக்கிறோமே ! அதனால, இதை ஒரு தொடராத் தொடரலாம் என்று தோன்ற, எனக்குத் தெரிந்த ஒரு நாலு பேரை அழைக்கிறேன்.

அவர்கள் நால்வரையும் ஒரு பதிவு போட்டு, அவங்க ஒரு நாலு பேரை அழைத்து, தொடரைத் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன். நல்லது கெட்டதுக்கு, நாலு பேர சேத்துக்குங்கனு சும்மாவா சொன்னாங்க !!!

நான் அழைக்கும் நால்வர்:

செல்வி ஷங்கர் / சீனா
ராமலக்ஷ்மி
மின்னல்
நாகு

உங்களால் எத்தனை வலைமொழி எழுதமுடியுமோ எழுதுங்கள். தலைப்பில் 'பழமொழி வலைமொழி' வருமாறு பார்த்துக் கொண்டால் சிறப்பு.

அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

15 மறுமொழி(கள்):

cheena (சீனா)said...

சமாச்சுடுவொம்ல

உயிரோடைsaid...

மின்ன‌ல் ப‌க்க‌ம் இப்போது உயிரோடை ஆகிவிட்ட‌து.

ச‌த‌ங்கா இப்ப‌டி மாட்டி விட்டுடீங்க‌ளே. ம்ம் எழுத‌றேன்

உயிரோடைsaid...

மின்ன‌ல் ப‌க்க‌ம் உயிரோடையாகி விட்ட‌து.

இப்ப‌டி மாட்டி விட்டுடீங்க‌ளே. :)

அழைப்பிற்கு ந‌ன்றி. எழுத‌றேன்.

ஆ.ஞானசேகரன்said...

ஆகா... ஆரம்பித்துவிட்டதா அடுத்த தொடர் பதிவு

ஆயில்யன்said...

அட நல்லாத்தான் ஃபீல் பண்ணியிருக்கீங்க பாஸ் :))

தமிழ்said...

/எனக்குத் தெரிஞ்ச அளவிற்கு சுமாரா எழுதியிருக்கிறேன். நம் வலைப்பதிவர்களின் திறமையை நான் சொல்லித் தெரிய வேண்டுமா ? எவ்வளவோ க்ரியேடிவிட்டி அவங்க மனசுக்குள்ள, அத்தனையும் பதிவுகளாய், பின்னூட்டங்களாய் பார்த்து, படித்து ரசிக்கிறோமே ! அதனால, இதை ஒரு தொடராத் தொடரலாம் என்று தோன்ற, எனக்குத் தெரிந்த ஒரு நாலு பேரை அழைக்கிறேன்./

நடக்கட்டும்


திறமைக்கு ஒரு வாய்ப்பு
நிறைய பேருக்கு ஆப்பு

ராமலக்ஷ்மிsaid...

வலைமொழி யாவும் அருமை. ரசித்தேன்!

என்னையும் மாட்டி விட்டிருக்கிறீர்களே தொடர் அழைப்பெனும் வலையில்:)?

தொடர்ந்து பல அழைப்புகளுக்கு விட்டாயிற்று டிமிக்கி:))!

வகையாய் வலைமொழி மாட்டினால் முயற்சிக்கிறேன்:)! அன்பான அழைப்புக்கு நன்றி சதங்கா!

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா)said...

//சமாச்சுடுவொம்ல//

நம்பிக்கையான முதல் மறுமொழிக்கு நன்றிகள் பல. விரைவில் உங்க திறமையை (செல்வி அம்மாவின் கைவண்ணத்தில்) காண ஆசை.

சதங்கா (Sathanga)said...

உயிரோடைsaid...

//மின்ன‌ல் ப‌க்க‌ம் உயிரோடையாகி விட்ட‌து.//

சுட்டியில் இணைப்பை, உயிரோடை ஆக்கிவிட்டேன்.

//இப்ப‌டி மாட்டி விட்டுடீங்க‌ளே. :)

அழைப்பிற்கு ந‌ன்றி. எழுத‌றேன்.//

உங்கள் திறமை பற்றி மிகுந்த நம்பிக்கை தான் காரணம். மற்றும் ஸ்பாண்டேனியஸ் ரைட்டிங் உங்களோடது. கலக்குங்க.

சதங்கா (Sathanga)said...

ஆ.ஞானசேகரன்said...

//ஆகா... ஆரம்பித்துவிட்டதா அடுத்த தொடர் பதிவு//

என்ன செய்யறது !!! பதிவா போட்டு போட்டு போரடிச்சிடிச்சு. அதான் சும்மா ஜாலிக்கு.

சதங்கா (Sathanga)said...

ஆயில்யன் said...

//அட நல்லாத்தான் ஃபீல் பண்ணியிருக்கீங்க பாஸ் :))//

பிரிவென்ற ஒன்றும், மறைகின்ற ஒன்றும் கலந்து செய்த ஃபீல் தான் :))

நாகு (Nagu)said...

இப்போதுதான் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டேன்.
நீங்களும் உண்டு அதில்...
http://blog.richmondtamilsangam.org/2009/06/blog-post_6832.html
வந்து பழமொழியை ஒரு கைப்பார்க்கிறேன்...

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர்said...

//நடக்கட்டும்


திறமைக்கு ஒரு வாய்ப்பு
நிறைய பேருக்கு ஆப்பு
//

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. ஆப்பெல்லாம் இல்லை, இப்படி மாற்றிக்குவோமே

நிறைய பேரிடம் வைப்போம் அன்பு !!!

எப்படீ :)))

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//வலைமொழி யாவும் அருமை. ரசித்தேன்!//

மிக்க நன்றி.

//என்னையும் மாட்டி விட்டிருக்கிறீர்களே தொடர் அழைப்பெனும் வலையில்:)?

தொடர்ந்து பல அழைப்புகளுக்கு விட்டாயிற்று டிமிக்கி:))!

வகையாய் வலைமொழி மாட்டினால் முயற்சிக்கிறேன்:)! அன்பான அழைப்புக்கு நன்றி சதங்கா!///

மாட்டிவிட்டதற்கு மன்னிக்கணும். உங்களது சிரமம் புரிகிறது. முயற்சிக்கிறேன் என்று சொன்னதற்கு நன்றிகள் பல. ஒன்றும் ப்ரச்சனை இல்லை. டேக் இட் ஈ.ஸீ...

நாகு (Nagu)said...

தொடர்ல போட்டாச்சு....

http://blog.richmondtamilsangam.org/2009/06/blog-post_18.html

Post a Comment

Please share your thoughts, if you like this post !