Sunday, June 28, 2009

பட்டாம்பூச்சி

சும்மா வலையில ஒப்பேத்தித் திறிந்த என்னை வம்பா பிடிச்சு, இந்தா நீ நல்லா பண்றே என்று பட்டாம்பூச்சி விருதை வழங்கியவர்கள் இருவர். பதிவு தவறாமல் வந்து வாழ்த்தும் ராமலஷ்மி அக்கா, மற்றும் தற்போது பி.ஸி. ஆகிவிட்ட நண்பர் நாகு. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.சமீபத்தில் நயாகரா சென்ற போது, என்னடா நம்மையே சுற்றி வருகிறதே என ஒரு விநாடி வியந்தேன். பட்சி இல்லீங்க :)) பட்டாம்பூச்சி ! நாகு அவரின் பதிவில் குறிப்பிட்ட அதே டைகர் ஸ்வால்லோ டெய்ல் பட்டாம்பூச்சி, நயாகராவில் நமக்காக காட்சி அளித்தது. அது உட்கார்ந்து தேன் உறிஞ்சும் அழகை அப்படியே விழுங்கியது நமது டிஜிட்டல்.

அடுத்தடுத்து இது போல் தொடர் அழைப்புகள் வந்தாலும், அடுத்துக் கூப்பிட யாராவது இருக்காங்களா என்று, நம்ம ஊர் போலீஸ்காரங்க மாதிரி 'வலை வீசித் தேட' வேண்டியிருக்கிறது :)) ஏறக்குறைய அநேக பதிவர்களையும் சுற்றி வந்துவிட்ட நிலையில் இங்கு வந்திருக்கிறது பட்டாம்பூச்சி !

'வீட்டுக்குள்ளேயே ச‌ம்ப‌ந்த‌ம் வெளியில் தேவையில்லை ஒப்ப‌ந்த‌ம்'ன்கிற‌ க‌தையாக‌ கூட்டுக்குள்ளேயே ப‌ற‌க்க‌ விட‌ப்ப‌டுகிற‌து இப்ப‌ட்டாம்பூச்சி விருது.

மீனா சங்கரன்: சமீபத்தில தான் வந்திருக்காங்க (தமிழ்) வலைக்குள்ள. பேச்சுவழக்கை அப்படியே எழுத்தில் கையாளும் திறம். சுவையாக‌ பதிவுகள் படைத்து நகைக்கவும் வைப்பார் நம்மை. அவர் மேலும் நிறைய எழுத இந்த பட்டாம்பூச்சி விருது.

பித்த‌ன் பெருமான்: ரிச்ம‌ண்டின் அச்ச‌டிக்காத‌ செய்தித்தாளின் ஆசிரிய‌ர். அங்கு ந‌ட‌க்கும் நிக‌ழ்ச்சிக‌ளை விம‌ர்சித்தும், ஒருவ‌ர் ம‌ற‌க்காம‌ல் பெய‌ர்க‌ள் குறிப்பிட்டும், அமெரிக்க இந்திய நாட்டு ந‌ட‌ப்புக‌ள், சினிமா செய்திகள் என்று இவ‌ர் கிறுக்கும் கிறுக்க‌ல்க‌ள் ரொம்ப‌ பிர‌சித்த‌ம். தொட‌ர்ந்து கிறுக்க‌ அவ‌ருக்கு இந்த பட்டாம்பூச்சி விருது.

ஜெய‌காந்த‌ன்: ரொம்ப‌ நாட்க‌ளாக‌ எழுதாம‌ல் இருந்து, த‌ற்போது நிறைய‌ எழுத‌ ஆர‌ம்பித்திருக்கிறார். வீட்டுக்கு ந‌ல்ல‌து சொல்வேன் என்று ப‌ய‌னுள்ள‌ குறிப்புக‌ளில் ப‌ர்ஸைப் பாதுகாப்ப‌து எப்ப‌டிங்க‌ற‌து வ‌ரைக்கும் எழுதுவ‌தில் வ‌ல்லவ‌ர். தொட‌ர்ந்து பயனுள்ள தகவல்கள் தர, இவருக்கு பட்டாம்பூச்சி விருது.

மூவருக்கும் வாழ்த்துகள் !நீங்கள் பின்பற்ற வேண்டிய பட்டாம்பூச்சி விருதின் விதிகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும்

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும்

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும்

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும்

13 மறுமொழி(கள்):

கவிநயாsaid...

வாழ்த்துகள், வாங்கி,குடுத்தவருக்கும், வாங்கினவங்களுக்கும் :)

ஆயில்யன்said...

/சும்மா வலையில ஒப்பேத்தித் திறிந்த என்னை வம்பா பிடிச்சு///

அவ்வ்வ்வ்வ்வ் நீங்களே இப்புடி சொன்னா....?

:)

ஆயில்யன்said...

போட்டோ செம கலக்கல் !

நட்புடன் ஜமால்said...

வாழ்த்துகள்!

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்

நாகு (Nagu)said...

எதோ ஒரு வாரம் ஊரில் இல்லை. உடனே 'பிஸி ஆகிவிட்ட' பட்டம்! :-)

படம் நல்லா இருக்கு.

திகழ்மிளிர்said...

வாழ்த்துகள்

சதங்கா (Sathanga)said...

கவிநயா said...

//வாழ்த்துகள், வாங்கி,குடுத்தவருக்கும், வாங்கினவங்களுக்கும் :)//

அழகிய வரிகள். மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

ஆயில்யன் said...
////சும்மா வலையில ஒப்பேத்தித் திறிந்த என்னை வம்பா பிடிச்சு///

அவ்வ்வ்வ்வ்வ் நீங்களே இப்புடி சொன்னா....?

:)
//

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ... வேண்டாம் பாஸூ :))

//போட்டோ செம கலக்கல் !//

மிக்க நன்றி.

சதங்கா (Sathanga)said...

நட்புடன் ஜமால் said...

//வாழ்த்துகள்!

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்//

வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

நாகு (Nagu) said...

//எதோ ஒரு வாரம் ஊரில் இல்லை. உடனே 'பிஸி ஆகிவிட்ட' பட்டம்! :-)//

நம்பிட்டோம் :))

//படம் நல்லா இருக்கு.//

மிக்க நன்றி.

ராமலக்ஷ்மிsaid...

"ஒப்பேத்தி திரிந்த" அல்ல...

"ஒவ்வொரு வலைப்பூவும்
மணக்கும் சமையல்
பேசும் புகைப்படங்கள்
மயக்கும் சித்திரங்கள் என..

இங்கேயோ
[வழக்கம் போல்]
சிறந்த கருத்துகளுடன்..
நல்ல நடை கொண்ட கதைகளும்
துள்ளும் வார்த்தைகளுடனான கவிதைகளுமாய்ப் படைத்து
பட்டாம்பூச்சியாய் திரிந்த.." என்பதே சரி:)!

//'வீட்டுக்குள்ளேயே ச‌ம்ப‌ந்த‌ம் வெளியில் தேவையில்லை ஒப்ப‌ந்த‌ம்'ன்கிற‌ க‌தையாக‌ கூட்டுக்குள்ளேயே ப‌ற‌க்க‌ விட‌ப்ப‌டுகிற‌து இப்ப‌ட்டாம்பூச்சி விருது.//

ரசித்தேன். சம்பந்தார் யா(மூ)வருக்கும் என் வாழ்த்துக்கள்:)!!!

சதங்கா (Sathanga)said...

திகழ்மிளிர் said...

//வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க.

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//
"ஒவ்வொரு வலைப்பூவும்
மணக்கும் சமையல்
பேசும் புகைப்படங்கள்
மயக்கும் சித்திரங்கள் என..

இங்கேயோ
[வழக்கம் போல்]
சிறந்த கருத்துகளுடன்..
நல்ல நடை கொண்ட கதைகளும்
துள்ளும் வார்த்தைகளுடனான கவிதைகளுமாய்ப் படைத்து
பட்டாம்பூச்சியாய் திரிந்த.." என்பதே சரி:)!//

ரொம்ப புகழறீங்க. நான் இன்னும் கத்துக்குட்டி தான் எழுத்தில் :)) தன்னடக்கம் எல்லாம் இல்லை, இது தான் உண்மை !

////'வீட்டுக்குள்ளேயே ச‌ம்ப‌ந்த‌ம் வெளியில் தேவையில்லை ஒப்ப‌ந்த‌ம்'ன்கிற‌ க‌தையாக‌ கூட்டுக்குள்ளேயே ப‌ற‌க்க‌ விட‌ப்ப‌டுகிற‌து இப்ப‌ட்டாம்பூச்சி விருது.//

ரசித்தேன். சம்பந்தார் யா(மூ)வருக்கும் என் வாழ்த்துக்கள்:)!!!
//

மிக்க மகிழ்ச்சி. விருது பெற்றவர்களும் சந்தோஷம் அடைவார்கள்.

Post a Comment

Please share your thoughts, if you like this post !