Tuesday, June 16, 2009

கல்விச் செல்வம் - அரைப் பக்க கதை

"இதுவரைக்கும் படிச்சதெல்லாம் சும்மா தான். இனிமேல் தான் கவனமா இருக்கணும். எப்படியாவது இங்க சீட் வாங்கிறனும். என்ட்ரன்ஸ் நல்லா பண்ணு. கௌன்ஸிலிங்ல தைரியமா பேசு. எதுவும் தெரியாதுனு சொல்லாதே. என்ன சரியா ?"

அம்மாவும், அப்பாவும், இருபுறம் இருந்து மத்தளம் வாசிக்க, பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் ரேஷ்மா. 'ஏன் இப்படி போட்டு டார்ச்சர் பண்றீங்க' என்பது போல இருந்தது அவள் பார்வை.

"பக்கத்து வீட்டு பொண்ணு இங்க படிச்சு தான் எம்.ஐ.டி. சேர்ந்திருக்கா. ஞாபகம் இருக்கில்லங்க உங்களுக்கு" என்று அம்மா, அப்பாவை இடித்தாள்.

இரவெல்லாம் கண் விழித்துத் தயார் செய்ததில், காலையிலேயே சோர்வாய் இருந்தாள் ரேஷ்மா.

லீவு நாட்களில் கூட சும்மா இல்லை. அந்த கோச்சிங், இந்த கோச்சிங் என்று படு பி.ஸி. தான்.

"நீங்க ஹாஸ்டல் எடுத்துக்கிட்டீங்கனா, இங்க சீட் கண்டிப்பா கிடைக்கும்" என்றார்கள்.

"ஹாஸ்டலில் இருந்துவிடுவாளா ? பழக்கமே இல்லையே ! இன்று வரை எங்களை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை" என்றார் அப்பா.

"அதெல்லாம் பிள்ளைங்களோட பிள்ளைங்களா இருக்கும்போது பழகிடும் சார். சரி, போய் ஆஃபீஸ்ல ஃபீஸ் கட்டி, ரெஸிப்ட் வாங்கிக்கங்க" என்றார் ரேஷ்மாவை நேர்முகம் செய்த ஆசிரியை.

"ஸ்டூடண்ட் பேரு என்னங்க ?" என்றார் ரைட்டர்.

"ரேஷ்மா"

"எந்த க்ளாஸ் ?"

"எல்.கே.ஜி. !"

9 மறுமொழி(கள்):

ராமலக்ஷ்மிsaid...

இதுதான் இன்றைய நிலை:( !
எல் கே ஜி-யில் சேர்ப்பதற்கும் இப்படியான மன அழுத்தத்தை அனுபவதித்தபடிதான் பெற்றோரும் பிஞ்சுகளும்.

நல்ல கதை சதங்கா!

நட்புடன் ஜமால்said...

மழலை தொலைத்து கல்வி பெற வேண்டியுள்ளது


செல்வம் கொடுத்து செல்வம் ...

நாகு (Nagu)said...

தமாஷ் - ஆனால் நிஜ வாழ்க்கை அவ்வளவு வித்தியாசமில்லை.. :-(

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மி said...

//இதுதான் இன்றைய நிலை:( !
எல் கே ஜி-யில் சேர்ப்பதற்கும் இப்படியான மன அழுத்தத்தை அனுபவதித்தபடிதான் பெற்றோரும் பிஞ்சுகளும்.

நல்ல கதை சதங்கா!//

சும்மா கூட இருந்திருவாங்க. பக்கத்து வீடு பக்கத்து வீடுனு பார்த்து தான், குழந்தைகளையும் ரொம்ப வதைக்கிறார்கள் / வதைபடுகிறார்கள்.

பாராட்டுக்கு மிக்க நன்றிக்கா.

சதங்கா (Sathanga)said...

நட்புடன் ஜமால் said...

//மழலை தொலைத்து கல்வி பெற வேண்டியுள்ளது


செல்வம் கொடுத்து செல்வம் ...//

அருமையா கவிதை நடையில் சொல்லிட்டீங்க.

உயிரோடைsaid...

ம்ம்ம்ம்

கல்வி திட்டம் மாற வேண்டும்.

cheena (சீனா)said...

நச்சுன்னு கடசில எல் கே ஜீ
ன்னுட்டீ ங்களே ! நான் கூட எதிர் பாக்கலே = நல்லாருக்கு - நல்வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன்said...

அருமை.சதங்கா. சஸ்பென்ஸ் தான் சூப்பர்.
பாவப்பட்ட ஜன்மங்கள் நம் குழந்தைகள்.

சதங்கா (Sathanga)said...

லாவண்யா, சீனா ஐயா, வல்லிம்மா ...

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !