Wednesday, January 30, 2008

மனைவிகளைப் பற்றி சில மாமேதைகளின் கருத்துக்கள்

இன்று என் நண்பர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல் வெகுவாக ரசிக்கும் படி இருந்தது. அதில் கடைசியில் இத கொஞ்சம் பேருக்கு forward செய்ங்க என்று வேறு. அதுக்குப் பதில், பதிவே போட்டாச்சு. படித்து, சிரித்து மகிழுங்கள். தங்கமணிக கிட்ட வாங்கி கட்டிக்காம வாசிங்க :)

When a man steals your wife, there is no better revenge than to let him keep her.
David Bassinette


After marriage, husband and wife become two sides of a coin; they just can't face each other, but still they stay together.
Sacha Guitry


By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, you'll become a philosopher.
Socrates


Woman inspires us to great things, and prevents us from achieving them.
Anonymous


The great question... which I have not been able to answer... is, "What does a woman want?
Dumas


I had some words with my wife, and she had some paragraphs with me.
Sigmund Freud


"Some people ask the secret of our long marriage. We take time to go to a restaurant two times a week. A little candlelight, dinner, soft music and dancing. She goes Tuesdays, I go Fridays."
Anonymous


"There's a way of transferring funds that is even faster than electronic banking. It's called marriage."
Sam Kinison


"I've had bad luck with both my wives. The first one left me, and the second one didn't."
James Holt McGavran


Two secrets to keep your marriage brimming
1. Whenever you're wrong, admit it,
2. Whenever you're right, shut up.
Patrick Murray


The most effective way to remember your wife's birthday is to forget it once...
Nash


You know what I did before I married? Anything I wanted to. Anonymous


My wife and I were happy for twenty years. Then we met.
Henny Youngman


A good wife always forgives her husband when she's wrong. Rodney Dangerfield

..
A man inserted an 'ad' in the classifieds: "Wife wanted". Next day he received a hundred letters. They all said the same thing: "You can have mine."
Anonymous


First Guy (proudly): "My wife's an angel!"
Second Guy: "You're lucky, mine's still alive."
Anonymous

Sunday, January 27, 2008

அப்பாவின் காகிதக் கப்பல்



அன்றொரு காலை
அடித்த மழையில்
அழுது பிடிக்க
அப்பா செய்தார்
அழகிய அந்தக்
காகிதக் கப்பல்

நான்காய் மடித்து
மூன்றும் ஒன்றுமாய்
குவித்து மடக்கிப்
பிரித்து இழுக்க
பிறந்தது அழகியக்
காகிதக் கப்பல்.

ஜன்னல் விட்டிறங்கி
வாசல் வெளிவந்து
தெருவில் திரண்டு
ஓடும் நீரில் விட
மிதக்குது அழகியக்
காகிதக் கப்பல்.

அசைந்து ஆடி
செல்லும் அழகை
ரசிக்கும் கண்கள்
குதிக்கும் கால்கள்
தூரம் போனது
காகிதக் கப்பல்.

ஓடிச் சென்று
மடக்கிப் பிடித்து
மீண்டும் விடுகையில்
மெதுவாய் நகருது
மெத்து மெத்தான
காகிதக் கப்பல்.

சடசடவென மழைபிடிக்க
சட்டென மூழ்கி
மிதந்து மேல்வந்து
பிரிந்து மறைந்து
மனதைக் கரைத்தது
காகிதக் கப்பல்.

குளமாகும் கண்களை
காணச் சகிக்கா
அப்பாவின் அன்பில்
மீண்டும் பிறந்தது
மற்றோர் அழகிய
காகிதக் கப்பல்.

ஏப்ரல் 13, 2009 யூத்ஃபுல் விகடனில்

Tuesday, January 22, 2008

சார்லி சாப்ளின் (நிழலும் நிஜமும்- ஒரு கற்பனை)



உருண்டைத் தொப்பியும்
வளைந்த கைத்தடியும்

தொய்வாய் ஆடையுடன்
துவளாத மனங்கொண்டு

தத்தி நீ நடக்கையிலே
தவழும் எம் மனசு.

மேலுதட்டுச் சிறு மீசை
முகபாவ அழகு சேர்க்க

புருவத்தில் கதை பேசி
புன்னகையில் எமை மயக்கி

சின்னஞ் சிறு அசைவில்
சிரிப்பை வரவழைத்து

தலை சாய்த்து இருபுறமும்
மழலையாய் பார்வையிட்டு

மெல்லிய புன்சிரிப்பில்
கல் நெஞ்சும் கரைத்திடுவாய்.

சிறுதிரையோ மற்றெதுவோ
சிதரா எம்மனதை

காணும் உன் நடிப்பில்
கட்டி வைத்திடுவாய்.

உருண்டைத் தொப்பிதனை
பெருத்த மாந்தரோடும்

வளைந்த கைத்தடியை
குலைந்த மனத்தாரோடும்

கேலியாய் உடையணிந்து
போலிகளைச் சாடுகின்றாய்.

உயரிய உடையில்லை
ஓங்கிய அழகில்லை

உருவில் ஏதுமில்லை
உணர்வுகள் அடையாளம்

என்று கற்கின்றோம்
இனிய உன் பாடம் !

Tuesday, January 8, 2008

கிராமத்து முடிதிருத்தும் நிலையம்

குளத்தங் கரையினிலே
கூரைக் கொட்டகை,

தலையாய அதிகாரியும்
தலைவணங்கித் தானமர

பலகை அபிநயங்கள்
பலகையில் அமர்ந்து.

நால்வரோடு நாமும் சேர்ந்து
கல் திண்ணைக் காத்திருந்து,

மடிந்து கந்தலான
செய்தித் தாள் வாசிப்பு.

எப்ப வந்தீக
என்று தொடங்கும் உரை,

சங்கன் வீட்டு விசேஷம் முதல்
இந்தியா விடும் ராக்கெட் வரை,

செய்திப் பரிமாற்றம்
செய் தொழிலிலும் கவனம்.

மரத்தடியில் கீழமர்ந்து
சிரம்தாழ்த்தி நாம் பணிய,

சின்னஞ் சிறு கதைகள் பேசி
தண்ணீரில் கேசம் கிளறி,

கத்தரியின் கிடு கிடுப்பில்
சித்திரமாய்ச் சிதறும் முடி.

மர இலைச் சலசலப்பை
ஏறிட்டு நாம் காண

நரைத்த புருசு தடவி
முகச் சவரம் நடக்குமங்கே.

பரதேசியாய் அமர்ந்து
பளிச்சென்று எழுந்து,

குளத்தில் நீராடி
குளித்து வெளியில் வர

சில்லென்ற குளிர்காற்று
சிணுங்கித் தீண்டிச் செல்லும் !

Tuesday, January 1, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் - சிறு கவிதை



ஆண்டொன்று போனால்
வயதொன்று கூடும்

காண்பவற்றுள் இன்பம்
கவலையைக் கழிக்கும்

கூட்டிக் கழித்துப் பார்த்தால்
தெளிவொன்று பிறக்கும் !

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2008 ...