சார்லி சாப்ளின் (நிழலும் நிஜமும்- ஒரு கற்பனை)
உருண்டைத் தொப்பியும்
வளைந்த கைத்தடியும்
தொய்வாய் ஆடையுடன்
துவளாத மனங்கொண்டு
தத்தி நீ நடக்கையிலே
தவழும் எம் மனசு.
மேலுதட்டுச் சிறு மீசை
முகபாவ அழகு சேர்க்க
புருவத்தில் கதை பேசி
புன்னகையில் எமை மயக்கி
சின்னஞ் சிறு அசைவில்
சிரிப்பை வரவழைத்து
தலை சாய்த்து இருபுறமும்
மழலையாய் பார்வையிட்டு
மெல்லிய புன்சிரிப்பில்
கல் நெஞ்சும் கரைத்திடுவாய்.
சிறுதிரையோ மற்றெதுவோ
சிதரா எம்மனதை
காணும் உன் நடிப்பில்
கட்டி வைத்திடுவாய்.
உருண்டைத் தொப்பிதனை
பெருத்த மாந்தரோடும்
வளைந்த கைத்தடியை
குலைந்த மனத்தாரோடும்
கேலியாய் உடையணிந்து
போலிகளைச் சாடுகின்றாய்.
உயரிய உடையில்லை
ஓங்கிய அழகில்லை
உருவில் ஏதுமில்லை
உணர்வுகள் அடையாளம்
என்று கற்கின்றோம்
இனிய உன் பாடம் !
5 மறுமொழி(கள்):
பேசா படங்களிலேயே அப்படி கலக்கியவரை கண் முன் நிறுத்திவிட்டீர்கள். கண்ட படங்களை திரும்ப திரும்ப போடும் இந்த ஊர் டீவிகளில் ஏன் சார்லி சாப்ளின் படங்களைக் காண்பிக்க மாட்டென்கிறார்கள்?
21 ஜனவரி 1921 ல் அவர் "த கிட்" திரைப்படம் வெலிவந்தது. எனக்கும் பிடித்த நடிகர்.
நாகு, வாழ்த்துக்கு நன்றி.
//இந்த ஊர் டீவிகளில் ஏன் சார்லி சாப்ளின் படங்களைக் காண்பிக்க மாட்டென்கிறார்கள்?//
மில்லியன் டாலர் கேள்வி. சாதாரணமா கேட்டுட்டீங்க. ஒருவேளை காப்பிரைட் இருக்கலாம் !
யோகன், வருகைக்கு நன்றி.
//எனக்கும் பிடித்த நடிகர்.//
நாம் என்று இல்லை. இந்தகாலக் குழந்தைகளும் சார்லியின் விசிறிகள் தான். சமீபத்தில் தான் you-tubeலிருந்து சில காட்சிகள் எனது எட்டு வயது மகன் பார்த்தான். அதிலிருந்து "he is so funny !" என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.
டேபிள்-பாலே என்று பார்த்திருப்பீர்கள். இல்லையென்றால் இதோ சுட்டி குழந்தைகள் எத்தனை முறை பார்த்தாலும், திரும்ப ப்ளே பண்ணு என்று சொல்லி முடிவே இல்லை !!!!
http://www.youtube.com/watch?v=xoKbDNY0Zwg
Post a Comment
Please share your thoughts, if you like this post !