Tuesday, October 20, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009 - 2



நீங்க எல்லாம் பதில் சொல்லி மத்தவங்களையும் மாட்டி விடுங்கப்பா, நான் (ரிலாக்ஸ்டா) உட்கார்ந்து படிக்கிறேன் என்றிருந்தால், 'What goes around, comes back around !' என்ற ஜஸ்டின் டிம்பர்லேக்கின் பிரபல பாடல் வரிகளுக்கேற்ப, கேள்விக்கணைகளை நம் பக்கமே திருப்பி விட்டாங்க ராம‌ல‌ஷ்மி அக்கா. தெரிஞ்சிருந்தா இன்னும் சுலபமா கேள்விகளைத் தயார் செய்திருக்கலாமே !!! :))


  1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

    தமிழில் ஆர்வம் தவிர்த்து பெரிய ஞானம் எல்லாம் இல்லாதவன். சிறுவயதில் இருந்து பண்டிகை நாட்களுக்கு (மட்டுமே) வாழ்த்து அட்டைகளில் கவிதை எழுத ஆரம்பித்து, பின்னர் சில கவிதைகள், கதைகள் எழுதி பத்திரிகைகளில் வராமல், நொந்து நூல் பிரியும் நேரத்தில் நுழைந்தது பதிவுலகம். கொட்டித் தீர்த்துட்டோம்ல .....


  2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

    ஒவ்வொரு வருடமும் தீபாவ‌ளி அன்று அதிகாலை நாலு நால‌ரைக்கெல்லாம் எழுந்து (எங்கே எழுந்து ? எழுப்பிவிட‌ப்ப‌ட்டு :)) எண்ணை தேய்த்துக் குளித்து, 'போன‌ முறை ம‌ஞ்ச‌ள் ஜாஸ்தி வ‌ச்சிட்டீங்க‌, இந்த‌ த‌டவை கொஞ்ச‌மா வைங்க'னு அட‌ம்பிடிச்சு, நெடுஞ்சான் கிடையாக‌ விழுந்து, புத்தாடைக‌ளை தாத்தா அப்பாவிடம் இருந்து வாங்கி அணிந்து கொண்டு, ச‌மைய‌ல்க‌ட்டில் பிஸியாக‌ இருக்கும் பாட்டி, அம்மா, ப‌ணிப்பெண் எல்லோருக்கும் வாழ்த்துக்க‌ள் சொல்லி, (இப்ப‌ அவ‌ங்க‌ளை நினைத்தால் எவ்வ‌ள‌வு சிர‌ம‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள் என்று தெரிகிறது. அப்போதெல்லாம் நாம் செல்ல‌ப்பிள்ளைக‌ள் ஆச்சே :)), காலை உணவை வீட்டில் முடித்துக் கொண்டு, ப‌க்க‌த்தில் இருக்கும் உற‌வின‌ர் வீடுக‌ளுக்குச் சென்று வாழ்த்துக்கள் சொல்லி, நண்பர்கள் ஜோதியில் கலந்தால், வீடு திரும்ப‌ சாய‌ந்திர‌ம் ஆகும். இவையெல்லாம் ப‌தினைந்து இருப‌து வ‌ருட‌த்து முந்தைய‌ க‌தை.


  3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

    பென்டன்வில் ‍ ஆர்கென்ஸா, அமெரிக்கா.


  4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

    நாங்கள் வசிக்கும் பகுதி இந்தியர்கள் ஒன்று சேர்ந்து, இங்கிருக்கும் கோவிலில் கொண்டாடலாம் என்றிருந்தோம். கடுமையான குளிரின் காரணமாக அது ஒத்திப் போடப்பட்டது. பிறகு, நண்பர் ஒருவரின் அழைப்பில் அவர்களது வீட்டில் ஏழெட்டு குடும்பங்கள் சேர்ந்தும் தீபாவளி தீபாவளி தான். வெடிக்காத பட்டாசுகள் போட்டு (ஜூலை 4த் மற்றும் புத்தாண்டு தவிர பட்டாசு போடத் தடையாம். மீறி வெடிச்சா புடிச்சு உள்ள‌ வச்சிருவாங்களாம் :)) நம்மூர் கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம் எல்லாம் போட்டு குழந்தைகளுக்கு ஒரே கொண்டாடாட்டம்.


  5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

    கோல்ஸ், வால்மார்ட்


  6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

    ரொம்பலாம் இல்லைங்க. குலோப் ஜாமுன், ரிப்பன் பக்கோடா, இன்ன‌ பிற‌...

    இதோ, கொஞ்சம் குலோப் ஜாமுன் உங்களுக்காக, எடுத்துக்கங்க ...


    இந்தக் காலத்து ஆண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறதா ? இல்லேன்னாலும் அதாங்க‌ உண்மை :)))

    அம்மணி அடிக்க வந்திறப் போறாங்க :) எஸ்கேப்ப்ப்ப்ப்.


  7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

    மின்னஞ்சல், தொலைபேசி


  8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

    ரெண்டுமே. நண்பர்கள் வீடுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.


  9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

    பண்டிகை என்றில்லாமல் இணையத்தின் மூலம் அவ்வப்போது உதவிகள் செய்து வருகிறோம். ஊரில் இருந்தால் பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யவும் ஆசை.


  10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

    'ஜாம்பவான்கள்' என்று எழுதியிருந்தேன். 'சக்கரவர்த்தினிகள்' என்று சீனா ஐயா அழகாகக் குறிப்பிட்டார்கள். சக்கரவர்த்தினிகள் சுடச் சுட பதிவிட்டு/பதிவிட தயாரகிறார்கள்.

    இதோ இங்கே:

    கவிநயா : http://kavinaya.blogspot.com/2009/10/2009.html
    நானானிம்மா : http://9-west.blogspot.com/2009/10/2009.html
    துளசி டீச்சர் : http://thulasidhalam.blogspot.com/2009/10/beech-mein-kaun-hai.html
    வல்லிம்மா : http://naachiyaar.blogspot.com/2009/11/blog-post.html

5 மறுமொழி(கள்):

ஆயில்யன்said...

காலையில தீபாவளி பதிவு போடறதுக்க்காக எனக்கே ரொம்ப பேவரைட்டான குலோப்ஜாமூன் தேடி தேடி நிறைய நிறைய பார்த்துக்கிட்டிருந்ததுதான் இப்ப டப்புன்னு ஞாபகம் வந்துச்சு :))

சூப்பரூ! :)

cheena (சீனா)said...

குலாப்ஜாமூன் சூப்பர் சதங்கா

பதில்கள் இயல்பா இருக்கு

ராமலக்ஷ்மிக்கு நன்றி

உதவி பற்றிய கேள்விக்கு அன்வருமே அடுத்தவர்களுக்கு உதவுவதாகத் தான் பதில் அளித்திருக்கிறார்கள் - உதவும் நல்ல உள்ளங்கள் வாழ்க

நல்வாழ்த்துகள் சதங்கா

ராமலக்ஷ்மிsaid...

//நம் பக்கமே திருப்பி விட்டாங்க//

ஹாஹா..

//கொட்டித் தீர்த்துட்டோம்ல .....//

இதென்ன? தீரக் கூடாது தாகமும் வேகமும். அட்சய பாத்திரம் போல வந்து கொண்டே இருக்க வாழ்த்துக்கள்!

மறக்க முடியாத சம்பவம் என்றாலே எல்லோரும் சர்ரென பற்பல ஆண்டுகளுக்கு முன்னரான நினைவுகளில்தான் நீந்திக் களிக்கிறோம்.

ஜாமூனும் சுவை. செட்டி நாட்டு கிச்சனில் ரிப்பன் பக்கோடாவும் மொறுமொறு:)!

அருமையான பதிவுக்கு நன்றி சதங்கா:)!

நானானிsaid...

நல்ல..நல்ல பதில்கள். வெடிக்காத மத்தாப்புகள்...பரவாயில்லை உங்க காதுகள் எல்லாம் புண்ணியம் செய்திருக்கின்றன.

சதங்கா (Sathanga)said...

ஆயில்யன், சீனா ஐயா, ராமலக்ஷ்மி அக்கா, நானானிம்மா,

அனைவரின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

Post a Comment

Please share your thoughts, if you like this post !