Wednesday, October 14, 2009

தீபாவளி சிறப்புப் பதிவு - 2009

வலையகத்தில் கொஞ்ச காலம் ஆச்சு தொடர் ஓட்டி. அதனால தீபாவளியை முன்னிட்டு ஒரு தொடரை ஆரம்பித்து வைப்போம்.

முக்கியமா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் இந்த நேரத்தில் பார்த்தால், நடிகர் நடிகையரின் பேட்டி சரம் சரமாய் தொகுத்தளிப்பார்க‌ள். பண்டிகை அல்லாத நாட்க‌ளிலேயே அவ‌ர் அறுப‌து, இவ‌ர் ஐம்ப‌து என்று சின்னத்திரை கதறுகிறது :)) தீபாவ‌ளி என்றால் கேட்க‌வும் வேண்டுமோ ?

நம்ம எல்லாம் பெரிய ஆட்கள் ஆனால் (இப்பவே அதுக்கு என்ன கொறச்சல் என்கிறீர்களா ? :)), நம்மை யாராவது பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும் ? நாட்டுக்கு ரொம்ப அவசியம் என்கிறீர்களா ? அதுவும் சரி தான் :)) அவசியம் என்பதைத் தாண்டி ஜாலியா இத்தொடரைக் கொண்டு செல்வோமே ?

வழக்கம் போல ஒரு சில விதிகள் மற்றும் நண்பர்களை இழுத்து ...மன்னிக்கவும், அழைத்து வருவது :)) ஐந்து விதிமுறைகள் பத்துக் கேள்விகள். ரொம்ப சிம்ப்பிள். குறைந்தபட்சம் உங்களது பதினைந்திலிருந்து முப்பது நிமிடங்கள்.

விதிமுறைகள்:


  1. கேள்விக‌ளுக்கு உங்க‌ள் வ‌லைத்த‌ள‌த்தில் புதிய பதிவில் ப‌திலளியுங்கள்.

  2. 'தீபாவளி சிறப்புப் பதிவு - 2009' என்று தலைப்பிட்டால் நலம்.

  3. இத்தொடர் தொடருவதைத் தெரிவிக்க, இங்கிருக்கும் தீபப் படத்தை உங்கள் வலைத்தளத்தில் ஒட்டி, உங்கள் பதிவிற்கான சுட்டியும் தரவும்.

  4. அனைத்து கேள்விகளுக்கும் (மனம் திறந்து) பதில் அளியுங்கள்.

  5. உங்கள் நண்பர்கள் நால்வரைத் தேர்ந்தெடுத்து தொடரைத் தொடர அழையுங்கள்.





ரொம்ப ஈஸீல்ல ? இப்ப, கேள்விகள்:


  1. உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

  2. தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

  3. 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

  4. த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

  5. புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

  6. உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

  7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

  8. தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

  9. இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

  10. நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?



*****

க‌டைசி கேள்வி எப்ப‌வுமே க‌ஷ்ட‌ம் தான் ந‌மக்கெல்லாம். அத‌னால‌ அதுக்கு என் பதிலை சொல்லி, தொடரை ஆரம்பித்து வைக்குமாறு வ‌லைய‌க‌ ஜாம்ப‌வான்களை அன்போடு அழைக்கிறேன் :))


  1. துள‌சி டீச்ச‌ர் - http://thulasidhalam.blogspot.com/

  2. நானானிம்மா - http://9-west.blogspot.com/

  3. வ‌ல்லிம்மா - http://naachiyaar.blogspot.com/

  4. கவிநயா - http://kavinaya.blogspot.com/



*** அனைவருக்கும் னி தீபாளி வாழ்த்துக்ள் ***

21 மறுமொழி(கள்):

துளசி கோபால்said...

என்ன இவ்வளோ தாராளம்????

நூறு சதமானம் இட ஒதுக்கீடு தீபாவளி ஸ்பெஷலா!!!!!

வாங்குவதில் பிஸி என்பதால் கொஞ்சநாள் கழிச்சு எழுதலாமா?

நானானிsaid...

இப்பத்தான் வல்லிம்மா தொடர்பதிவில்
என்னை இழுக்...அழைக்கலேயேன்னு
நிம்மதியாயிருந்தேன். வெச்சுட்டீங்களே ஆப்பூஊஊஊஊஊ!!
இருந்தாலும் படங்கள் அப்லோடாவதில் பிரச்சனை இருப்பதால் கொஞ்சம் தாமதமாகும்,
ப்ரவாயில்லையா?

Meena Sankaransaid...

தீபாவளி நல்வாழ்த்துக்கள் சதங்கா!

பல ப்ளாகர்களை டேவிட் லேட்டேர்மன் போல பேட்டியாளர்களாக மாத்த முயற்சிக்கும் உங்க தொடர் சிறப்பாக வரவும் வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga)said...

துளசி கோபால்said...

//என்ன இவ்வளோ தாராளம்????//

மகளிர் சக்தியின் நம்பிக்கை தான் :))

//நூறு சதமானம் இட ஒதுக்கீடு தீபாவளி ஸ்பெஷலா!!!!!//

அதே ! அதே !!

//வாங்குவதில் பிஸி என்பதால் கொஞ்சநாள் கழிச்சு எழுதலாமா?//

பொறுமையா ஷாப்பிங்க் பண்ணுங்க. வந்து ஒரு பதிவ சுடச் சுடப் போடுங்க :)) படிக்க ஆவலாய் இருக்கிறோம் !!!

cheena (சீனா)said...

அருமை அருமை சதங்கா

வலையுலக சக்கரவர்த்தினிகளை முதலில் அழைத்தது சாலச் சிறந்தது

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - அனைத்துப் பதிவர்களுக்கும்

Kavinayasaid...

'இன்ப' அதிர்ச்சின்னா சொன்னீங்க? 'அதிர்ச்சி'ன்னு வேணா ஒத்துக்கறேன்! :)

உங்க எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரி இருக்குமான்னு தெரியல - ஆனா பதிவிட்டாச்சு பாஸ்!

http://kavinaya.blogspot.com/2009/10/2009.html

மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன்said...

நன்றி சதங்கா.
அன்பு மலரும் தீப நன்ன்னாள் வாழ்த்துகள்.

இன்றும் நாளையும் வேலகள் அதிகம். இரண்டு நாள் பொறுத்துப் போடட்டுமா:)))

ராமலக்ஷ்மிsaid...

சுவாரஸ்யமான பதில்களை வரவழைக்கக் சிந்தித்து தொடுத்திருக்கிறீர்கள் கேள்விக் கணைகளை:)! அற்புதம் ( என்னை நோக்கிப் பாயாத வரை.. ) :))!

அதுசரி, இதற்கான விடைகளை நீங்களும் கூறி அல்லவா தொடரை ஆரம்பித்து வைக்க வேண்டும்:)? அடுத்த பதிவு அதுவாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்! தீபாவளி ஏவுகணையை உங்களை நோக்கியும் திருப்பி விட்டாயிற்று:))!

ராமலக்ஷ்மிsaid...

சுவாரஸ்யமான பதில்களை வரவழைக்கக் சிந்தித்து தொடுத்திருக்கிறீர்கள் கேள்விக் கணைகளை:)! அற்புதம் ( என்னை நோக்கிப் பாயாத வரை.. ) :))!

அதுசரி, இதற்கான விடைகளை நீங்களும் கூறி அல்லவா தொடரை ஆரம்பித்து வைக்க வேண்டும்:)? அடுத்த பதிவு அதுவாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்! தீபாவளி ஏவுகணையை உங்களை நோக்கியும் திருப்பி விட்டாயிற்று:))!

ராமலக்ஷ்மிsaid...

சுவாரஸ்யமான பதில்களை வரவழைக்கக் சிந்தித்து தொடுத்திருக்கிறீர்கள் கேள்விக் கணைகளை:)! அற்புதம் ( என்னை நோக்கிப் பாயாத வரை.. ) :))!

அதுசரி, இதற்கான விடைகளை நீங்களும் கூறி அல்லவா தொடரை ஆரம்பித்து வைக்க வேண்டும்:)? அடுத்த பதிவு அதுவாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்! தீபாவளி ஏவுகணையை உங்களை நோக்கியும் திருப்பி விட்டாயிற்று:))!

நானானிsaid...

//அதுசரி, இதற்கான விடைகளை நீங்களும் கூறி அல்லவா தொடரை ஆரம்பித்து வைக்க வேண்டும்:)? அடுத்த பதிவு அதுவாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்! தீபாவளி ஏவுகணையை உங்களை நோக்கியும் திருப்பி விட்டாயிற்று:))!//

அதே..அதே..!!

நானானிsaid...

//அதுசரி, இதற்கான விடைகளை நீங்களும் கூறி அல்லவா தொடரை ஆரம்பித்து வைக்க வேண்டும்:)? அடுத்த பதிவு அதுவாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்! தீபாவளி ஏவுகணையை உங்களை நோக்கியும் திருப்பி விட்டாயிற்று:))!//

அதே..அதே..!!

நானானிsaid...

//வலையுலக சக்கரவர்த்தினிகளை//

'யாரங்கே! அன்பர் சீனா அவர்களை எங்கிருந்தாலும் சகல மரியாதைகளோடு சபைக்கு அழைத்து வாருங்கள்!!!

‘எதற்கு?’
‘எதற்கா? மதுரை அன்பருக்கு பொற்கிழி பரிசளிக்கத்தான்!!’

cheena (சீனா)said...

அன்பின் நானானி

தாங்கள் சகல மரியாதைகளுடன் அழைக்கும் போது வராமல் இருப்பேனா ?

இதோ வந்தேன் - சபைக்கு -
வந்தனம் தந்தேன்

சதங்கா (Sathanga)said...

நானானிsaid...
//இப்பத்தான் வல்லிம்மா தொடர்பதிவில்
என்னை இழுக்...அழைக்கலேயேன்னு
நிம்மதியாயிருந்தேன். வெச்சுட்டீங்களே ஆப்பூஊஊஊஊஊ!!//

ஆப்பாஆஆஆஆ ??? அன்பு நானானிம்மா அன்பு :))

//இருந்தாலும் படங்கள் அப்லோடாவதில் பிரச்சனை இருப்பதால் கொஞ்சம் தாமதமாகும், பரவாயில்லையா?//

நோ ப்ராப்ளம். ஆனா, தொடர மறந்திறாதீங்க :))

சதங்கா (Sathanga)said...

Meenakshi Sankaransaid...
//தீபாவளி நல்வாழ்த்துக்கள் சதங்கா! //

மிக்க நன்றிங்க மீனா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

//பல ப்ளாகர்களை டேவிட் லேட்டேர்மன் போல பேட்டியாளர்களாக மாத்த முயற்சிக்கும் உங்க தொடர் சிறப்பாக வரவும் வாழ்த்துக்கள்.//

ஏதோ, என்னால முடிஞ்சது :))) வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

சதங்கா (Sathanga)said...

cheena (சீனா)said...
//அருமை அருமை சதங்கா

வலையுலக சக்கரவர்த்தினிகளை முதலில் அழைத்தது சாலச் சிறந்தது//

அவர்களால் சுடச் சுடப் பலகாரம் செய்யவும் முடியும், பதிவும் போட முடியும். அதான் :)

//இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - அனைத்துப் பதிவர்களுக்கும்//

உங்களுக்கும், செல்வி அம்மாவுக்கும், மற்றும் அனைத்து பதிவர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சதங்கா (Sathanga)said...

கவிநயாsaid...
//'இன்ப' அதிர்ச்சின்னா சொன்னீங்க? 'அதிர்ச்சி'ன்னு வேணா ஒத்துக்கறேன்! :)

//தனிமடலில் பகிர்ந்துகிட்டது போலவே, கொஞ்ச நாட்கள் முன்னரே பதிவிட்டு உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்தனும் என்று தான் நினைத்தேன். வேலைப் பழுவினால் பதிவிட தாமதாமாகிடுச்சு. அதிர்ச்சிக்கு ஆளாக்கிட்டேன்னா, இந்த சின்ன பையன மன்னிச்சு விட்டுங்க ப்ளீஸ்.

//உங்க எதிர்பார்ப்புக்கு தகுந்த மாதிரி இருக்குமான்னு தெரியல - ஆனா பதிவிட்டாச்சு பாஸ்!

http://kavinaya.blogspot.com/2009/10/2009.html//

மிக்க நன்றி கவிநயா. சுடச் சுட ஆரம்பித்து வைத்தமைக்கு.

//மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!//

அதே ! அதே !!

சதங்கா (Sathanga)said...

வல்லிசிம்ஹன்said...

//நன்றி சதங்கா.
அன்பு மலரும் தீப நன்ன்னாள் வாழ்த்துகள்.//

மிக்க நன்றி வல்லிம்மா. தங்களுக்கும், சிங்கத்திற்கும், மற்றும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

//இன்றும் நாளையும் வேலகள் அதிகம். இரண்டு நாள் பொறுத்துப் போடட்டுமா:)))//

ஆச்சே ரெண்டு நாளு :))) ஒன்றும் அவசரமில்லை. ஆனால், மறந்து விடாதீர்கள் :)

சதங்கா (Sathanga)said...

ராமலக்ஷ்மிsaid...
//சுவாரஸ்யமான பதில்களை வரவழைக்கக் சிந்தித்து தொடுத்திருக்கிறீர்கள் கேள்விக் கணைகளை:)! அற்புதம் ( என்னை நோக்கிப் பாயாத வரை.. ) :))!//

மிக்க நன்றி.

//அதுசரி, இதற்கான விடைகளை நீங்களும் கூறி அல்லவா தொடரை ஆரம்பித்து வைக்க வேண்டும்:)? அடுத்த பதிவு அதுவாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்! தீபாவளி ஏவுகணையை உங்களை நோக்கியும் திருப்பி விட்டாயிற்று:))!//

கேள்விக்கணைகளை திருப்பி விட பின்னூட்டச் சரம் தொடுத்திருக்கிறீர்கள் :)) நான் என்ன பண்ணினேன் :)) ஏ.இ.கொ.வெ ? :)))))

சரி, சரீ ... சுடச் சுட பதில்கள் தயாராயிட்டு இருக்கு. விரைவில் பதிவில் :))

சதங்கா (Sathanga)said...

நானானிsaid...
//அதுசரி, இதற்கான விடைகளை நீங்களும் கூறி அல்லவா தொடரை ஆரம்பித்து வைக்க வேண்டும்:)? அடுத்த பதிவு அதுவாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்! தீபாவளி ஏவுகணையை உங்களை நோக்கியும் திருப்பி விட்டாயிற்று:))!

அதே..அதே..!!//

க‌ணைக்கு இணையாய், அதே அதே போட்டு மாட்டி விட‌றீங்க‌ளே நீங்க‌ளும் :))

நானானிsaid...
////வலையுலக சக்கரவர்த்தினிகளை//

'யாரங்கே! அன்பர் சீனா அவர்களை எங்கிருந்தாலும் சகல மரியாதைகளோடு சபைக்கு அழைத்து வாருங்கள்!!!

‘எதற்கு?’
‘எதற்கா? மதுரை அன்பருக்கு பொற்கிழி பரிசளிக்கத்தான்!!’
//

ப‌ரிசு வாங்க‌ சீனா ஐயா வ‌ந்தாச்ச்ச்ச்ச்ச்ச் :))

Post a Comment

Please share your thoughts, if you like this post !